Shruthi Raj : ‘உடனே கூப்பிடுறாங்க..’ இம்சையை பகிர்ந்த ஷ்ருதி ராஜ்!
Mar 09, 2023, 06:31 AM IST
Tamil Serial: ‘பின்னாடி பேசுறவன், பின்னாடி பண்றவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் இப்படி தான்’. நீங்க பண்றதுக்கு பின்னாடி கர்மா வரும். என் கோபம், ஒரு நொடி கூட தங்காது’
எந்நேரமும் அழுத முகத்துடன் பார்த்தாலும், சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர் ஷ்ருதி ராஜ். சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவர், முன்னணி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி இதோ:
‘‘என்னுடைய அப்பா ராணுவ வீரர் என்பதால், சரியான நேரத்தை கடைபிடிக்கும் பழக்கம், அவரிடம் தான் கற்றேன். இப்போதும் எனக்கு ஷூட் போக கார் வரும் முன், நான் தயாராக காத்திருப்பேன். எனக்காக கார் காத்திருக்காது.
நான் இதுவரை செய்த சீரியல்கள் எல்லாமே, ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாகவே இருக்கும். அதாவது அழுதுட்டே இருக்குற மாதிரி இருக்கும். இன்னும் சொல்லனும்னா, அழற கதாபாத்திரமா இருந்தால், உடனே என்னை கூப்பிடுறாங்க. தாலாட்டு மட்டும் தான், மற்ற கதாபாத்திரங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.
தென்றலில் எந்நேரமும் அழுது கொண்டே இருக்க வேண்டும். கிலிசரின் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் தென்றல் சீரியலில் என்னுடைய துளசி கதாபாத்திரம் மறக்கவே முடியாது. இன்றும் வெளியே போனால் கூட, ‘துளசி அக்கா..’ என்று தான் அழைக்கிறார்கள்.
10 ஆண்டுக்கு முந்தைய அந்த கதாபாத்திரத்தை இன்றும் மறக்காமல் வைத்திருப்பது உண்மையில், அது தான் என்னுடைய பவுண்டேசன். இடையில் கொஞ்சம் படங்கள் பண்ணிட்டு நான் வெளியே போவேன், என்னை யாருக்கும் எதுவும் தெரியாது. யாரும் கண்டுக்க மாட்டாங்க, நானும் ஜாலியா வெளியே போவேன்.
தென்றல் சீரியலில் நடித்து 10 நாளில், வெளியே போனாலே, என்னை பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். பலரும் என்னுடைய கதாபாத்திரத்தை சிலாகிக்க ஆரம்பித்தார்கள். அப்போது தான் எனக்கு அந்த சீரியஸ் தெரிந்தது. நம்ம நடிப்பை இத்தனை பேர் பாக்குறாங்க என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு தான் முழு ஈடுபாடே காட்டினேன்.
பொறுமை தான் என்னிடம் எனக்கு பிடித்த விசயம். அதே பொறுமை தான் என்னிடம் எனக்கு பிடிக்காத விசயமும் கூட. நான் பல நேரங்களில் பொறுமையாக இருப்பதை, ‘இந்த இடத்தில் நீ பொறுமையா இருக்க கூடாது’ என்று சொல்லி கேட்டிருக்கிறேன். சில இடத்தில் எனக்கே தோன்றும், ‘இந்த இடத்தில் பேசியிருக்க வேண்டும்’ என்றும்.
பின்னாடி பேசுறவன், பின்னாடி பண்றவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் இப்படி தான்’. நீங்க பண்றதுக்கு பின்னாடி கர்மா வரும். என் கோபம், ஒரு நொடி கூட தங்காது. கிலிசரின் போட்டு ரொம்ப சூடா இருக்கும் போது, யாராவது ஏதாவது செய்தால், கோபம் வரும். அதுவும் அப்பவே போய்டும்’’
என்று அந்த பேட்டியில் ஷ்ருதி கூறியுள்ளார்.
டாபிக்ஸ்