தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Visu: பட்ஜெட் படம் மூலம் வசூலை குவித்தவர்.. குடும்பச் சித்திரங்களின் நாயகன்.. நடிகர் விசு பிறந்தநாள்

HBD Visu: பட்ஜெட் படம் மூலம் வசூலை குவித்தவர்.. குடும்பச் சித்திரங்களின் நாயகன்.. நடிகர் விசு பிறந்தநாள்

Jul 01, 2024, 06:30 AM IST

google News
Director Visu: மிகப்பெரும் ஆளுமை, நடிகர், கதாசிரியர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விசு. 1945 ஆம் ஆண்டு ஜூலை 1-ல் பிறந்த விசு, மேடை நாடகங்களை இயக்கி அதில் நடித்து வந்தார்.
Director Visu: மிகப்பெரும் ஆளுமை, நடிகர், கதாசிரியர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விசு. 1945 ஆம் ஆண்டு ஜூலை 1-ல் பிறந்த விசு, மேடை நாடகங்களை இயக்கி அதில் நடித்து வந்தார்.

Director Visu: மிகப்பெரும் ஆளுமை, நடிகர், கதாசிரியர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விசு. 1945 ஆம் ஆண்டு ஜூலை 1-ல் பிறந்த விசு, மேடை நாடகங்களை இயக்கி அதில் நடித்து வந்தார்.

HBD Visu: மிகப்பெரும் ஆளுமை, நடிகர், கதாசிரியர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விசு. 1945 ஆம் ஆண்டு ஜூலை 1-ல் பிறந்த விசு, மேடை நாடகங்களை இயக்கி அதில் நடித்து வந்தார்.

பின்னர் பழம்பெரும் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்பயணத்தை தொடங்கினார். 'கண்மணி பூங்கா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விசு, 'மணல் கயிறு', 'ரகசியம்', 'புதிய சகாப்தம்', 'மின்சாரம் அது சம்சாரம்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறினார்.

சுமார் 40 ஆண்டுகளாக மக்களின் மனங்களை புரிந்து உணர்ந்து படமெடுப்பதில் வல்லவர் என்ற பேரெடுத்தார். தனது திரையுலக வாழ்க்கையில் குடும்பங்களை மையப்படுத்திய படங்களின் மூலம் தனக்கான முத்திரையை பதித்தார் விசு. 1980, 90களில் இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே, அந்த காலகட்டத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து சமூக பிரச்னையை வெளிக்காட்டும் விதமாகவோ அல்லது அதற்கான தீர்வு சொல்லும் படமாகவோதான் இருந்துள்ளது.

'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுதிமதி', 'டெளரி கல்யாணம், 'சிதம்பர ரகசியம்', 'வேடிக்கை என் வாடிக்கை', 'வரவு நல்ல உறவு', 'பெண்மணி அவள் கண்மணி’ என்று விசு எடுத்ததில் பெரும்பான்மையாக குடும்ப சப்ஜெக்ட் என முத்திரையுடனே வந்தன. விசுவின் படங்கள் பெரும்பாலும் மினிமம் பட்ஜெட் படங்களாக இருந்தாலும் வசூலை வாரிக் குவித்தது. அந்த தந்திரத்தை விசு கற்று வைத்திருந்தார்.குடும்பம் மொத்தத்தையும் தியேட்டருக்கு வரவைக்கிற வித்தையை அறிந்துவைத்திருந்தார்.

புரட்டி போட்ட சம்சாரம் அது மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம் முழு திரைப்படமும் குடும்ப வாழ்க்கையை நோக்கி பயணிக்கின்ற காரணத்தினால் இந்த திரைப்படத்தில் காமெடி காட்சிகளை இணைப்பதற்காக மனோரமாவை இயக்குனர் விசு படத்தில் சேர்த்து இருப்பார். அவருக்கென ஒரு ஐந்து நிமிடம் தனி செக்மென்ட் கொடுத்திருப்பார். மனோரமாவை பற்றி கூறத் தேவையில்லை அவரது அசாத்தியம் அடித்தால் அனைவரையும் வென்றிருப்பார்.

இந்த திரைப்படத்தில் அவர் குறிப்பிட்டு பேசிய கம்முனு கெட என்ற வசனம் இன்று வரை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த அளவிற்கு தனது கதாபாத்திரத்தை ஆணித்தனமாக பதித்து இருப்பார் நடிகை மனோரமா.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு மிக முக்கிய காரணம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் சரியாக நடித்திருப்பார்கள். மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் அசத்தியிருப்பார். குடும்பத்திற்காக உழைக்கும் இளைய மகனாக வாகை சந்திரசேகர் அமைதியான இளைஞனாக நடித்திருப்பார். சொகுசு வாழ்க்கையை எதிர்பார்க்கும் மகளாக நடிகை இளவரசி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் காஜா செரிஃப் சிறப்பாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் தனிப்பட்ட காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அனைவருமே தங்களது பங்கை சிறப்பாக கொடுத்திருப்பார்கள்.

கதையை நகர்த்தி செல்லக்கூடிய மருமகள் கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி நடித்திருப்பார். அளவோடு நடித்து அனைவரும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தனர் என்று கூறினால் அது மிகை ஆகாது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் விசுதான்.

மறைவு

நடிகர் விசு கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அதே ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி உயிரிழந்தார்.

திரைப்படங்களில் நடிப்பது, இயக்கியது மட்டுமல்லாமல் விசு தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இன்றைய தலைமுறையினர் மனங்களையும் வென்றவர் விசு.

மண்ணைவிட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த குடும்பச் சித்திரங்களைத் தந்த அற்புதக் கலைஞன் விசுவை நினைவு கூருவோம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி