தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வயிற்றில் இறங்கிய கத்தி.. அடம் பிடிக்கும் அண்ணன் பாசம்.. தகதமி ஆடிய தயாளன்! - கயல் சீரியல் அப்டேட்

வயிற்றில் இறங்கிய கத்தி.. அடம் பிடிக்கும் அண்ணன் பாசம்.. தகதமி ஆடிய தயாளன்! - கயல் சீரியல் அப்டேட்

Oct 14, 2024, 10:19 AM IST

google News
கயல் சீரியலில் தயாளன் அனுப்பிய ஆட்கள் மூர்த்தியை கத்தியால் குத்திவிட்டனர். ஆனால், கயல் அண்ணன் வந்தால் மட்டுமே மணமேடைக்கு செல்வேன் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறாள்
கயல் சீரியலில் தயாளன் அனுப்பிய ஆட்கள் மூர்த்தியை கத்தியால் குத்திவிட்டனர். ஆனால், கயல் அண்ணன் வந்தால் மட்டுமே மணமேடைக்கு செல்வேன் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறாள்

கயல் சீரியலில் தயாளன் அனுப்பிய ஆட்கள் மூர்த்தியை கத்தியால் குத்திவிட்டனர். ஆனால், கயல் அண்ணன் வந்தால் மட்டுமே மணமேடைக்கு செல்வேன் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறாள்

கயல் சீரியலில் இன்றைக்கு வெளியான ப்ரோமோவில், கயல் தர்மலிங்கத்தின் காலிலும்,வடிவின் காலிலும், விழுந்து மன்னிப்புக்கேட்ட நிலையில், அவர்கள் மனம் இறங்கி கயலின் கல்யாணம் எப்படியாவது நடக்க வேண்டும் என்று விரும்பினர் இதற்கிடையே, வீட்டை விட்டு வெளியே சென்ற கயலின் அண்ணன் மூர்த்தியை தயாளன் அமர்த்திய ரவுடிகள் கத்தியால் குத்தி விட்டனர். இது தெரியாமல் இங்கே அண்ணன் வந்தால் மட்டுமே நான் மணமேடைக்கு வருவேன் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறாள் கயல். இவை தொடர்பான காட்சிகள் ப்ரோமோ வில் இடம் பெற்று இருக்கின்றன.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதுதான் இன்றைய எபிசோடில் இடம் பெற இருக்கிறது

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் கடந்த எபிசோடில் ஒரு வழியாக எல்லா பிரச்சினைகளையும் தாண்டி கயல் கல்யாணம் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் தன் மீது கோபம் கொண்டு தன்னுடைய கல்யாணத்திற்கு பல இடையூறுகளை செய்த தர்மலிங்கம் மற்றும் வடிவிடம் கயல் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டாள்.

இது கயலின் மீது அவர்களுக்கு பச்சாதாபத்தை உண்டாக்கி விட்டது. இதனையடுத்து மொத்தமாக இறங்கி வந்த தர்மலிங்கம், கயல் நான் எதிர்பார்க்காத ஒன்றை இப்படி செய்து விட்டாள். அவள் என் மீது பாசம் வைத்திருக்கிறாளா என்று கேட்க, வடிவும் நானும் இதை எதிர்பார்க்கவில்லை; இதை கயல் முன்னமே செய்திருந்தால், நாம் ஏன் இவளுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுக்கப் போகிறோம் என்று கேட்டாள்.

இறங்கி வநத தர்மலிங்கம்

இந்த நிலையில் மொத்தமாக மனம் திருந்திய தர்மலிங்கம், கயலின் கல்யாணத்திற்கு இனிமேல் எந்த இடையூறுகளையும் செய்யக்கூடாது. மாறாக, அவளின் கல்யாணம் நடப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாமே முன் நின்று நடத்த வேண்டும் என்று மாறுகிறார். கூறுகிறார்.

இதற்கிடையே மோதிரம் வாங்க வெளியே சென்ற மூர்த்தியை தயாளன் அமர்த்திய ஆட்கள் வளைத்து பிடித்து விட்டனர். இதனையடுத்து மூர்த்தி அங்குமிங்கும் தப்பிக்க ஓடினான்.

ஆனால்,அவர்கள் அவனை விடவில்லை; தொடர்ந்து அவனை ஒரு கட்டத்தில் துரத்திப் பிடிக்க, அவன் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய தங்கையின் கல்யாணம் நடக்க இருக்கிறது. ஆகையால், அதை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினான்

 

ஆனால், ரவுடிகளோ உன்னை விட்டு விடுவதற்காக இவ்வளவு தூரம் துரத்தி பிடித்தோம் என்று சொல்லி மூர்த்தி எவ்வளவோ கெஞ்சியும் மூர்த்தியை கத்தியை வைத்து ரவுடிகள் குத்தினர். இதில் நிலைகுலைந்து விழுந்த மூர்த்தியை மேலும் அவர்கள் குத்தச் செல்லும் பொழுது, ஆட்களின் சத்தம் கேட்டு அவர்கள் அங்கிருந்து ஓடினர்.

இதையடுத்து மூர்த்தி கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்று என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தான். இதற்கிடையே கயல், அண்ணன் வராமல் மணமேடைக்கு நான் வரவே மாட்டேன் என்று கயல் விடாப்பிடியாக நின்றாள்.

இதை பார்த்த சிவசங்கரியின்யின் தங்கை என்ன பிரச்சினை என்று கேட்க, எல்லோரும் பிரச்சினை எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி சமாளிக்க முயன்றனர். ஆனால் அவளோ எல்லோரும் பரபரப்பாக இருக்கிறீர்கள்... சொல்லுங்கள் என்று கேட்டாள். அத்தோடு எபிசோடு முடிவடைந்தது.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி