தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Politics: அண்ணன் ரெடி தான் வரவா.. போஸ்டர் ரெடியா நண்பா? இன்று வெளியாகும் விஜய் அரசியல் கட்சியின் பெயர்?

Vijay Politics: அண்ணன் ரெடி தான் வரவா.. போஸ்டர் ரெடியா நண்பா? இன்று வெளியாகும் விஜய் அரசியல் கட்சியின் பெயர்?

Aarthi Balaji HT Tamil

Feb 02, 2024, 11:42 AM IST

google News
Thalapathy Vijay: நடிகர் விஜய் தொடங்க இருக்கும் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
Thalapathy Vijay: நடிகர் விஜய் தொடங்க இருக்கும் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Thalapathy Vijay: நடிகர் விஜய் தொடங்க இருக்கும் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சியின் பெயர் இன்று ( பிப்ரவரி 2)  வெளியாகும் என தகவல்கள் சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய், அரசியலுக்கு வருவது கிட்டதட்ட உறுதியாகி விட்ட நிலையில், முதற்கட்டமாக அரசியல் கட்சியை பதிவு செய்தல், சின்னத்தேர்வு உள்ளிட்டவை தொடர்பான வேலைகளில், இயக்க நிர்வாகிகள் பரபரத்து வருகின்றன.

முன்னதாக, நடிகர் விஜய் தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னர் அந்தப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் பேசும் அரசியல் சார்ந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

படங்களிலும் அரசியல் சார்ந்த வசனங்கள் அனல் பறந்தது. இதன் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரக்கத் தொடங்கின.

அதற்கு ஏற்றார் போல நடிகர் விஜயும் தன்னுடைய ரசிகர்கள் மூலம் அம்பேத்கர் பிறந்தநாளன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்தல், உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மதிய உணவு வழங்க வைத்தல், ரத்ததானம் செய்ய வைத்தல், மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள், நூலகம், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து அரசியல் பிரவேசத்திற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.

அண்மையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒரு மாத காலத்திற்குள் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என விஜய் கூறியதாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் அந்த கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுபடுத்துமாறு பேசிய நடிகர் விஜய், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்யுமாறும் கட்டளை இட்டு இருந்தார்.

அத்துடன், மக்களுக்கு செய்யும் பணிகளில் தடை ஏதும் ஏற்பட்டால் , உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பேசிய நடிகர் விஜய், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் கட்சியை வலுப்படுத்தலாம் என்பது குறித்து, தலைமைக்கு அறிவுரை வழங்கலாம் என்பதையும் திட்டவட்டமாக பேசி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் மற்றும் கட்சி சின்னம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். 

ட்சியில் புதிதாக சேர நினைப்பவர்களுக்கு புதிய செயலி ஒன்றை விஜய் அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முன்னதாக, மன்றத்தில் சேரக்கூடிய உறுப்பினர்களுக்காக தனியாக செயலி ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த செயலி சில மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

அந்த ஆப்பை தூசி தட்டி புதிதான வகையில் விவரங்களை உள்ளீடு செய்து, புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் மன்றத்தில் உறுப்பினராக சேர விரும்பும் நபர்கள், எவ்வாறு மன்றத்தில் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி விவரங்கள் இருக்குமாம். பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த செயலியில், ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சேருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி