தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra: மேடையில இப்படியா ட்ரெஸ் பண்ணுவ?.. மேடை பாட்டையே கெடுத்துட்டா.. எங்க கெரியரே போச்சு! - சுசித்ரா

Singer Suchitra: மேடையில இப்படியா ட்ரெஸ் பண்ணுவ?.. மேடை பாட்டையே கெடுத்துட்டா.. எங்க கெரியரே போச்சு! - சுசித்ரா

Sep 23, 2024, 11:01 PM IST

google News
Singer Suchitra: மேடை பாடல்கள் என்றாலே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி உருவாக்கி வைத்திருக்கும் பொழுது, நாங்கள் எல்லாம் மேடையில் ஏறி எப்படி பாட முடியும். - சுசித்ரா
Singer Suchitra: மேடை பாடல்கள் என்றாலே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி உருவாக்கி வைத்திருக்கும் பொழுது, நாங்கள் எல்லாம் மேடையில் ஏறி எப்படி பாட முடியும். - சுசித்ரா

Singer Suchitra: மேடை பாடல்கள் என்றாலே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி உருவாக்கி வைத்திருக்கும் பொழுது, நாங்கள் எல்லாம் மேடையில் ஏறி எப்படி பாட முடியும். - சுசித்ரா

சர்ச்சைகளுக்கு பேர் போன பாடகி சுசித்ரா, நடிகை ஆண்ட்ரியா மேடைகளில் அறைகுறை ஆடையுடன் பாடல்கள் பாடி கச்சேரி நடத்துவதை விமர்சித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேசும் போது, “ஆண்ட்ரியா மேடையில் பாடும் பாடல்களின் கலாச்சாரத்தையே கெடுத்து விட்டு விட்டார். அவர் பாடும் போது, கேமரா முன்னால் வந்து ஆடுவது உள்ளிட்ட வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அது மிக மிக மோசம். தவறானதும் கூட.. அவர்களைப் போன்றோரெல்லாம் மேடையில் பாடுவதால், என்னைப் போன்ற கொஞ்சம் கூச்சம் சுபாவம் உள்ளவர்களால் மேடைகளில் பாடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.

மேடையில் பாட முடியாது.

அவரை போல் எல்லாம் நம்மால் நிச்சயமாக மேடையில் பாட முடியாது. அவர் பாடுவதோடு மட்டுமில்லாமல், மேடையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். உண்மையாகச் சொல்லுங்கள், ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு செல்லும் கூட்டம், அவர் பாடுவதைப் பார்க்கவா செல்கிறது. நிச்சயமாக இல்லை. அவரைப் பார்க்கத்தான் செல்கிறது.

மேடை பாடல்கள் என்றாலே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி உருவாக்கி வைத்திருக்கும் பொழுது, நாங்கள் எல்லாம் மேடையில் ஏறி எப்படி பாட முடியும். இப்போது கச்சேரிக்கு வரும் மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மேடையில் பாடும் பாடகிகளின் ஆடைகளும் மிகவும் மோசமாக இருக்கின்றன. குறிப்பாக ஆண்ட்ரியா அவர் பாடும் பொழுது எல்லோரும் என்னை பாருங்கள், எல்லோரும் என்னை பாருங்கள் என்று சொல்வது போலவே பாடுகிறார். அந்த பளபளப்பு அந்தப் போலித் தன்மையைத்தான் தற்போது மக்களும் விரும்பி கொண்டிருக்கிறார்கள். தற்போது அந்த ட்ரெண்டு தான் சென்று கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

ஆண்ட்ரியா

வைரமுத்துவை மெண்டல் ஆஸ்பத்திரியில்

இது குறித்து அவர் பேசும் போது, “வைரமுத்து சொல்வது போல நான் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்வதில்லை. அவரை ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில் அடைத்து பூட்டி போடுங்கள். அவர் பல பேரை மெண்டல் ஆக்குகிறார். எனக்கு வைரமுத்து பரிசாக ஷாம்பு பாட்டில் தந்ததை, பல பெண்கள் கேட்டு தற்போது உஷாராக மாறி இருக்கிறார்கள். இனிமேல் அவர் பரிசு தருகிறேன் என்று கூறினால், பெண்கள் உஷாராக செல்லாமல் இருப்பார்கள். ஆகையால், நான் பேசியது தற்போது மிகவும் நல்லதாக மாறிவிட்டது.

 

நான் இதை ஏன் அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி கேட்கப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது அப்போதே முடிந்துவிட்டது. சின்மயிக்கும் நடந்ததும், எனக்கு நடந்ததும் முற்றிலும் வித்தியாசமான ஒன்று. அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்த போது, என்னுடன் என்னுடைய பாட்டி இருந்தார் ஒருவேளை என்னுடைய பாட்டி அன்று இல்லாமல் இருந்து, அவர் என் மீது கை வைத்திருந்தால், அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு இருப்பேன். ஆனால், அவர்கள் என்னைதான் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். நான் ஜெயிலுக்கு போய் இருப்பேன். என்னுடைய கேரியரே முடிந்து போய் இருக்கும்.

கடவுள் பார்த்த வேலைதான்

உண்மையில் அன்றைய நிகழ்வு கடவுள் நினைத்தது என்று நான் நினைக்கிறேன். ஆகையால் அதன் பின்னர், முடிந்த மட்டும் இந்த மனிதனோடு ஒரே மேடையிலோ, ஒரே நிகழ்ச்சியிலோ இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால், திரைத்துறையில் இருக்கும் எல்லோரும் அவரைப் போன்றவர்கள் கிடையாது. நான் வைரமுத்து போன்று பலர் என்னை இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று கூறியதே கிடையாது. இந்த ஒரு மனிதன் தான் என்னை அப்படி செய்தான். மற்றபடி, நான் வேலை செய்த விவேகா, நா முத்துக்குமார் உள்ளிட்ட பாடல் ஆசிரியர்கள் அனைவருமே என்னை மரியாதையோடு நடத்தி இருக்கிறார்கள். உண்மையில் வைரமுத்து போன்ற இரண்டு மூன்று முதலைகள் தான் மொத்த அந்த துறையையே சீரழிக்கிறது.

நாம் இது போன்ற முதலைகளை சமாளிக்க வேண்டும் என்றால், அது இருக்கும் அதே துறையில் இருக்கிறோம் என்றால், அவர்களை தவிர்த்து விட்டு, நாம் நம்முடைய வேலையை பார்ப்பது தவிர வேறு வழியே கிடையாது. நான் தற்போது மொத்த சினிமா துறையை விடுத்து வேறு துறைக்கு மாறி விட்டேன். அதனால், இப்போது நான் சினிமாவில் யாரைப் பற்றி கேட்டாலும், எனக்கு நடந்த அனுபவத்தை அப்பட்டமாக வெளியே சொல்வேன்.

ஒருமுறை சினிமாவில் வேலை பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வந்து விட்டால், சினிமா மீது உங்களுக்கு தவறான அபிப்பிராயம் தான் வரும். நான் அந்த பேட்டியில் ஹேமா அறிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் போதுதான் வைரமுத்துவை பற்றி பேசினேன். நான் வேண்டுமென்றே வைரமுத்துவை தாக்க வேண்டும் என்று பேசவில்லை. எனக்கு நடந்த அனுபவத்தை நான் பகிர்ந்தேன்” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி