தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புதிய ஓடிடி தளம் தொடங்கிய ஷாருக் கான்

புதிய ஓடிடி தளம் தொடங்கிய ஷாருக் கான்

Aarthi V HT Tamil

Mar 15, 2022, 07:46 PM IST

google News
ஷாருக் கான் Srk + என பெயரிடப்பட்டு இருக்கும் ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
ஷாருக் கான் Srk + என பெயரிடப்பட்டு இருக்கும் ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

ஷாருக் கான் Srk + என பெயரிடப்பட்டு இருக்கும் ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

ஓடிடி. இந்த வார்த்தையை நம்மில் சிலர் மட்டுமே கேள்விப் பட்டிருப்போம். ஆனால் கொரோனா பெரும் தொற்றக் காலத்தில் , கொரோனா தடுப்பு ஊசியுடன் பிரபலமான ஒன்று ஓடிடி தளங்கள்.

ஒரு படம் வெளியாகவே ஓடிடி தளங்களில் அதிசயமாக இருந்த காலம் மறைந்து , முன்னணி நடிகர் , நடிகைகளின் படங்களும் ஓடிடி தளங்களிலேயே அதிகமாக தற்போது வெளியாகி வருகிறது. கொரோனா காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு உலக அளவில் அமேசான் ப்ரைம் , நெட்ஃப்ளிக்ஸ் , டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்கள் 2 கோடி மேல் லாபம் பார்த்து விட்டது.

அந்த ரூட்டை பின்பற்றி தற்போது புதுப் புது ஓடிடி தளங்களும் , தற்போது உருவாகி வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டின் கிங் காங் என அழைக்கப்படும் ஷாருக் கான் தற்போது புதிய ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

Srk + என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஓடிடி தளம் விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

மேலும் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப், ஷாருக் கான் தொடங்கி இருக்கும் SRK + ஓடிடி தளத்தில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் அல்லு அர்ஜுன் தனது தந்தை அல்லு அரவிந்த் பெயரில் , ‘ ஆஹா ‘ என்று ஓடிடி தளத்தை நடத்தி வருகிறார். அதில் ‘ஆகாசவாணி ’ , ‘ மிக மிக அவசரம் ’ , ‘ ரைட்டர் ’ ஆகிய வெற்றிப் படங்கள் வெளியாகி உள்ளது.

அதே போல் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா , ' கிளின் ஓடிடி ' என்ற நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு தொடங்கி உள்ளார். அதில் முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த திரைப்படங்கள் , சீர்ஸ் உள்ளிட்டவை மட்டுமே வெளியாகும் என கூறப்படுகிறது.

நடிகர் ஷாருக் கானை வைத்து , இயக்குநர் அட்லீ , பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ' மனி ஹெய்ஸ்ட் ' , சீரிஸை படமாக அட்லீ இயக்கி வருவதாக கூறப்பட்டது.

இதனிடையே தற்போது ஷாருக் கான் , அட்லி கூட்டணியில் உருவான படம் மொத்தமும் கை விடப்பட்டதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி