தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திராவிடத்தை நீங்களே எதிர்த்தால் எப்படி?… தம்பி அஜித்தை பாருங்கள்.. அவருக்கு பாராட்டுகள்! - காய் நகர்த்தும் சத்யராஜ்!

திராவிடத்தை நீங்களே எதிர்த்தால் எப்படி?… தம்பி அஜித்தை பாருங்கள்.. அவருக்கு பாராட்டுகள்! - காய் நகர்த்தும் சத்யராஜ்!

Nov 09, 2024, 12:06 PM IST

google News
முன் பின் பாராத மனிதரிடம் கோபப்படுவதிற்கு காரணம் மதம்தான் என்று அஜித் பேசியது அழகாக இருந்தது. அவருக்கு என்னுடைய பாராட்டுகள்! - சத்யராஜ்!
முன் பின் பாராத மனிதரிடம் கோபப்படுவதிற்கு காரணம் மதம்தான் என்று அஜித் பேசியது அழகாக இருந்தது. அவருக்கு என்னுடைய பாராட்டுகள்! - சத்யராஜ்!

முன் பின் பாராத மனிதரிடம் கோபப்படுவதிற்கு காரணம் மதம்தான் என்று அஜித் பேசியது அழகாக இருந்தது. அவருக்கு என்னுடைய பாராட்டுகள்! - சத்யராஜ்!

சென்னையில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற சத்யராஜ் அதில் பல்வேறு விஷயங்களை பேசினார்

அஜித்திற்கு பாராட்டுகள்

அவர் பேசும் போது, “ திராவிடத்தை எதிர்ப்பது என்பது ஆரியத்திற்கு துணை போவது என்பது எங்களுடைய கருத்து. அப்படி அது மாறும் பொழுது சாஸ்திரம், சம்பிரதாயங்கள் என்கிற போர்வையில், பல மூட நம்பிக்கைகள் வளரும். சாதிய ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம், மத சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் உள்ளிட்டவை தொடரும்.

அண்மையில், தம்பி அஜித் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், சம்பந்தமே இல்லாமல் ஒரு மனிதரைப் பார்த்து கோபப்படுவதற்கு காரணம் மதம்தான் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவு மிக மிக அழகாக இருந்தது. அவருக்கு நான் என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

1965 - ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் அதன் உச்சகட்டத்தை தொட்டியிருந்தது. அப்போது எனக்கு சுமார் 11 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 10 வயது வரை எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. எங்களுடைய குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். எங்களது குடும்பத்தை பொறுத்த வரை, குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே அவர்களை கான்வெண்டில் சேர்ந்து சேர்த்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த எனக்கு, அந்த சமயத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அந்த போராட்டத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம்தான். அதன் மூலமாகத்தான் என்னுடைய கவனம் தமிழில் பக்கம் திரும்பியது. எனக்கு சினிமா மிகவும் பிடிக்கும். அதனால் அடிக்கடி சினிமாவுக்கு செல்வது வழக்கம்.

எம்ஜிஆர் படங்கள்

குறிப்பாக எம்ஜிஆர் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிரியம் அப்படி இருந்த சமயத்தில், சினிமாக்களிலும் தமிழ் தொடர்பான வசனங்கள், காட்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. அதற்கு முக்கியமான காரணம், திராவிட முன்னேற்றக்கழகம். தொடர்ந்து தமிழ் பற்று அதன் வழியாக எனக்குள் சென்று கொண்டே இருந்தது எனக்கு 15 வயது இருக்கும் போது பராசக்தி திரைப்படம் வெளியானது.

படத்தை பார்த்து நான் பிரமித்து போனேன். அதன் பின்னர் தான் தமிழ் மீது எனக்கு மரியாதை அதிகமானது; கலைஞருக்கு தமிழ் மீது எனக்கு காதல் வந்தது. தினமும் பராசக்தி வசனங்களை கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் எனக்கு அது மனப்பாடம் ஆகி விட்டது. 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா, சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரை மாற்றினார். அது எவ்வளவு பெரிய விஷயம்.

நீங்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் திராவிட கழகத்திற்கு முன்னே பல தூரம் அதனை கொண்டு சென்று முன்னெடுக்கலாம். அதை விடுத்து விட்டு நீங்களே திராவிடத்திற்கு எதிர்வினையாற்றினால் எப்படி? ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த பொழுது திராவிட இயக்கத்தினர்தான் பெரிதாக அதன் முன்னெடுத்துச் சென்றார்கள். தலைவர் பிரபாகரன் கூட, தமிழ் தேசியத்தையும் திராவிடத்தையும் ஒன்றாகவே பார்த்தார். அப்படி இருக்கும் பொழுது திராவிடத்திற்கு எதிராக தமிழ் தேசியத்தை பார்ப்பது என்பது வருந்தத்தக்க செயல்” என்று பேசினார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி