தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்! பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்! 5 கோடி கேட்ட கொலையாளி!

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்! பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்! 5 கோடி கேட்ட கொலையாளி!

Suguna Devi P HT Tamil

Oct 18, 2024, 10:05 AM IST

google News
சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால் 5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் சார்பில் மும்பை காவல்துறை வாட்சப் எண்ணிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால் 5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் சார்பில் மும்பை காவல்துறை வாட்சப் எண்ணிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால் 5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் சார்பில் மும்பை காவல்துறை வாட்சப் எண்ணிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான பாபா சித்திக் இந்த மாதம் 12 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு சர்வதேச குற்றவாளியும், தற்போது சிறையில் இருப்பவருமான லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றிருந்தார். தற்போது ல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால் 5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் சார்பில் மும்பை போக்குவரத்து காவல்துறை வாட்சப் எண்ணிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில், "சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். பணம் வழங்கப்படாவிட்டால், சல்மான் கானின் நிலை பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்” என்று இருந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66), மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது மகன் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு வெளியே அக்டோபர் 12 இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஹரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (23), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) உட்பட நான்கு பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். மேலும் புனேவைச் சேர்ந்த ஹரிஷ்குமார் பாலக்ராம் நிசாத் (23), மற்றும் கூட்டு கொலையாளி  சுபம் லோங்கரின் சகோதரர் பிரவின் லோங்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

சல்மான் கானைக் கொல்ல பிஷ்னோய் கும்பல் காரர்களுக்கு அவர் உத்தரவு கொடுத்ததாக காவல் அதிகாரி கூறினார். சுக்பீர் சிங் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தனது கையாள்வாளராகக் கூறப்படும் டோகருடன் தொடர்பில் இருந்ததாக அவர் கூறினார். சிங் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் உறுப்பினர்களுடன் சேர்ந்து, சல்மான் கானைக் கொல்வதற்கான சதித்திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தானில் இருந்து AK-47, M16 மற்றும் AK92 போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

நவி மும்பை கொண்டு வரப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். என்சிபி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாகவும் சுக்பீர் சிங்கிடம் நவி மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

சல்மானின் வீட்டிற்கு பாதுகாப்பு

இந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, சல்மான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அடையாளம் காணப்பட்ட 18 குற்றவாளிகள் மற்றும் பிஷ்னோய் கும்பலின் மற்றவர்கள் மீது நவி மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மும்பையில் உள்ள நடிகர் சல்மானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர்களான அன்மோல், சம்பத் நெஹ்ரா, கோல்டி ப்ரார் மற்றும் ரோஹித் கோதாரா ஆகியோர் எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவர். இந்த வழக்கில் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த தனஞ்சய் என்ற அஜய் காஷ்யப், நஹ்வி, கவுரவ் பாட்டியா, வாஸ்பி கான் என்கிற வாசிம் சிக்னா, ஜாவேத் என்கிற ரிஸ்வான் கான், ஜான் என்கிற தீபக் ஹவா சிங் ஆகிய 5 பேரை நவி மும்பை போலீஸார் கைது செய்தனர்.

முறியடிக்கப்பட்ட சதித்திட்டம் 

கைது செய்யப்பட்ட பிறகு, ஜூன் மாதம் சல்மான் நவி மும்பையில் உள்ள பன்வெல் அருகே உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு செல்லும் வழியில் அவரை கொள்வதற்கா சதித்திட்டத்தை போலீசார் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, ​​லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் சம்பத் நெஹ்ரா கும்பல் கானின் பாந்த்ரா இல்லம், பன்வெல் பண்ணை வீடு மற்றும் திரைப்பட படப்பிடிப்பு இடங்கள் ஆகியவற்றில் கொலை முயற்சியின் ஒரு பகுதியாக, கானின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சுமார் 60 முதல் 70 உறுப்பினர்களை நியமித்ததும் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறார்களை ஷார்ப் ஷூட்டர்களாக பயன்படுத்த முயன்றனர் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி