தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi Divorce: வளர்ப்பு மகனால் வந்த பிரச்னை.. ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்கு இது தான் காரணமா?

Jayam Ravi Divorce: வளர்ப்பு மகனால் வந்த பிரச்னை.. ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்கு இது தான் காரணமா?

Aarthi Balaji HT Tamil

Jul 03, 2024, 06:30 AM IST

google News
Jayam Ravi Divorce: ஆர்த்தியின் குடும்பத்துடன் ஜெயம் ரவிக்கு சில சங்கடங்கள் இருப்பதாகவும், இதனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக சபிதா ஜோசப் கூறுகிறார்.
Jayam Ravi Divorce: ஆர்த்தியின் குடும்பத்துடன் ஜெயம் ரவிக்கு சில சங்கடங்கள் இருப்பதாகவும், இதனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக சபிதா ஜோசப் கூறுகிறார்.

Jayam Ravi Divorce: ஆர்த்தியின் குடும்பத்துடன் ஜெயம் ரவிக்கு சில சங்கடங்கள் இருப்பதாகவும், இதனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக சபிதா ஜோசப் கூறுகிறார்.

Jayam Ravi Divorce: சமீப காலமாக விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பார்கள் என்பதை பொறுத்தே நிலைமை மாறியுள்ளது. படத்தின் படப்பிடிப்பின் போது காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாமல் விவாகரத்து பெறுகிறார்கள். பல பிரபலங்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

மொழி வேறுபாடின்றி, பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகின்றனர். தெலுங்கில் நாக சைதன்யா - சமந்தா, பவன் கல்யாண் - ரேணு தேசாய், தனுஷ் - ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், அமீர்கான் போன்ற சூப்பர் ஸ்டார்களும் தங்களது திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு ஒற்றை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து?

அந்த வரிசையில் இப்போது புதியதாக விவாகரத்து செய்தி அடிப்பட்டு இருப்பவர்கள் தான் ஜெயம் ரவி - ஆர்த்தி. ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவியது.

ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

வதந்தி வந்தது உண்மையா?

தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இறுப்பினும் இஸ்டார்கிராம் பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை அவர் நீக்கவில்லை. அதே போல் பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரையும் நீக்கவில்லை.

பிரிவுக்கான காரணம் என்ன

ஆர்த்தியின் குடும்பத்துடன் ஜெயம் ரவிக்கு சில சங்கடங்கள் இருப்பதாகவும், இதனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக சபிதா ஜோசப் கூறுகிறார். 

ஆர்த்தி ரவியின் தாயார் சுஜாதா ஒரு பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளர். ஜெயம் ரவியின் அடுத்த படத்தை தயாரிக்க சுஜாதா தயாராகிவிட்டார். ஆனால் ஜெயம் ரவி  ரூ.25 கோடி கேட்டார்.

இது தான் ஆர்த்திக்கும், ஜெயம் ரவிக்கும் இடையேயான பிரச்னை என்கிறார்கள். இதனுடன், வேறு சில விஷயங்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. சுஜாதா நீண்ட நாட்களுக்கு முன்பு சங்கர் என்ற மகனை தத்தெடுத்துள்ளார். சுஜாதாவின் தயாரிப்பு நிறுவனத்தை ஷங்கர் கவனித்து வருகிறார். படத்தின் சம்பளம் குறித்த விவாதத்தின் போது ஷங்கரின் தலையீடு வந்தது.

ஷங்கரின் அறிவுறுத்தல் படி சுஜாதா கேட்பதால் ஜெயம் ரவிக்கு வெறுப்பு ஏற்பட்டது. அது ஈகோ மோதலுக்கு வந்தது. ஆர்த்தியின் முன் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்ததும் பிரச்னைகள் உருவானது என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி