தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நான் பாவாடை கிடையாது.. டார்க்கெட் பண்ணி அடிக்காதீங்க.. பயமா இருக்குங்க..’ Rj பாலாஜியின் அனுபவ பேச்சு!

‘நான் பாவாடை கிடையாது.. டார்க்கெட் பண்ணி அடிக்காதீங்க.. பயமா இருக்குங்க..’ RJ பாலாஜியின் அனுபவ பேச்சு!

Nov 23, 2024, 02:46 PM IST

google News
‘‘அவங்க படம் வந்தா, இவங்க அடிக்கணும், இவங்க படம் வந்தா அவுங்கள அடிக்கணும்னு ஏன் நினைக்க வேண்டும்? தேவையில்லாமல் ஏன் எனர்ஜியை வீணடிக்க வேண்டும். படம் நல்லா இல்லையா தாராளமா சொல்லுங்க. ஆனால், டார்க்கெட் பண்ணி அடிப்பது கொஞ்சம் பயமா இருக்கு’’
‘‘அவங்க படம் வந்தா, இவங்க அடிக்கணும், இவங்க படம் வந்தா அவுங்கள அடிக்கணும்னு ஏன் நினைக்க வேண்டும்? தேவையில்லாமல் ஏன் எனர்ஜியை வீணடிக்க வேண்டும். படம் நல்லா இல்லையா தாராளமா சொல்லுங்க. ஆனால், டார்க்கெட் பண்ணி அடிப்பது கொஞ்சம் பயமா இருக்கு’’

‘‘அவங்க படம் வந்தா, இவங்க அடிக்கணும், இவங்க படம் வந்தா அவுங்கள அடிக்கணும்னு ஏன் நினைக்க வேண்டும்? தேவையில்லாமல் ஏன் எனர்ஜியை வீணடிக்க வேண்டும். படம் நல்லா இல்லையா தாராளமா சொல்லுங்க. ஆனால், டார்க்கெட் பண்ணி அடிப்பது கொஞ்சம் பயமா இருக்கு’’

சொர்க்கவாசல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற படத்தின் நாயகன் ஆர்.ஜே.பாலஜி பேசும் போது, சுவாரஸ்யமான பல கருத்துக்களை தெரிவித்தார். இதோ அவருடைய பேச்சு:

‘‘ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏதாவது சர்சையாக  பேசினால், அது படம் ரீச் ஆக உதவும் என்று பேசுவார்கள். நான் தனிப்பட்ட முறையில் நினைப்பது, பேச எதுவும் இல்லை என்றாலும், இப்போது நான் பேசும் விசயம் மக்களிடம் ரீச் ஆகும் என்று நினைக்கிறேன். நான் 2006ல் இருந்து ஒரு விசயத்தை தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒரு பிஸ்கட்டை கடைக்கு விற்க கொண்டு சென்று விட்டோம் என்றால், அது நல்லா இருக்கா, இல்லையா என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால், அந்த பொருள் வெளியே போய்விட்டது. சினிமாவும் அது மாதிரி தான். 

விமர்சனம் வந்து தான் ஆகும்

சினிமா என்கிற பிஸ்கட் வெளியே வந்துவிட்டால், அது நன்றாக இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம், ச்சீ.. இது ஒரு பிஸ்கட்டா என்று ஒருவர் சொல்லலாம், இன்னும் ஒருவர் 10 பக்கத்திற்கு மெயில் அனுப்பலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். யூடியூப்பில் பண்ணலாம், ட்விட்டரில் பண்ணலாம், இன்ஸ்டாகிராமில் பண்ணலாம் அது அவர்களின் சுதந்திரம். 

நாம போய், எல்லாருடைய போனையும் பிடுங்க முடியாது. அந்த கண்ட்ரோல் நம்மிடம் இல்லை. படத்தில் கன்டண்ட் இருந்தால், இந்த படத்தை மீடியா மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதைப் போல தான். இந்த படத்தில் கன்டண்ட் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் எனக்காக இந்த படத்தை வாங்கவில்லை. அவங்க செம்ம கேடி. படம் பார்த்து, நல்லா இருந்து, அவர்களுக்கு பிடித்ததால் தான் இந்த படத்தை வாங்கினார்கள். உலகளாவிய தியேட்டர் உரிமத்தை பெற்றிருக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் உரிமையாளர்கள் பிரபு மற்றும் பிரகாஷ் ஆகியோர், இந்த படத்தின் வினியோகஸ்தர்கள், அவர்கள் தான் எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். 

ஒரு பெரிய தொகைக்கு நெட்ஃபிக்ஸ் ஓடிடி உரிமத்தை வாங்கியுள்ளது. இப்போல்லாம் ரொம்ப பயமா இருக்கு. வெளியே ஒரு இந்திய கொடி இருந்தது, அதை வைத்து போஸ் கொடுக்கலாம் என்று பார்த்தால், அதை வைத்து ஏதாவது ப்ராண்ட் பண்ணிடுவாங்களா என்று பயமாக உள்ளது. நாம இந்தியன் தானே என்று தெரிகிறது, ஆனாலும், ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. 

உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க

சொர்க்கவாசல் ட்ரைய்லர் நாளைக்கு வரப்போகுது என்று நான் ஒரு போஸ்ட் போட்டேன். அதற்கு கீழே, வினியோகஸ்தர் எஸ்.ஆர்.பிரபு மீது உள்ள கோபத்தில் என்னை திட்டி பதிவு வருகிறது. என்னை எதுக்கு திட்டுறாங்கனு பார்த்தால், அவர் மீது உள்ள கோபத்தில் திட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பார்த்தா, வேறு யார் மீதோ உள்ள கோபத்தில் என்னை திட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பார்த்தா, ‘இவன் ஒரு பாவாடை.. இவன் படத்தை அடிக்கணும்’ என சொல்றாங்க. நான் பாவாடை இல்ல வேஷ்டி(தான் வேட்டி அணிந்திருப்பதை காட்டுகிறார்).

எனக்கு முதலில் பாவாடை என்றால் என்னவென்று தெரியவில்லை. நான் பாவாடை இல்லை. அப்படின்னா என்னை சங்கி என்பார்கள். நான் சங்கியும் கிடையாது. எந்த கட்சியோடு ஐடி விங்க்கா இருந்தாலும், உங்களுக்கு ஒரு கோரிக்கை, நீங்க அரசியல் பண்ணுங்க, வாரம் வாரம் ரிலீஸ் ஆகிற படத்துல எனக்கு உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க. அதுக்கா உங்க அக்கவுண்ட்ல பணம் போடுறாங்க? போங்க போய், அரசியல்வாதிகளோடு சண்டை போட்டுக்கோங்க.

டார்க்கெட் பண்ணி அடிக்காதீங்க!

அதே மாதிரி ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் என எல்லாரும், எல்லா படங்களையும் பார்க்கலாம். படம் நல்லா இல்லை என்றால், சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், அவங்க படம் வந்தா, இவங்க அடிக்கணும், இவங்க படம் வந்தா அவுங்கள அடிக்கணும்னு ஏன் நினைக்க வேண்டும்? தேவையில்லாமல் ஏன் எனர்ஜியை வீணடிக்க வேண்டும். படம் நல்லா இல்லையா தாராளமா சொல்லுங்க. ஆனால், டார்க்கெட் பண்ணி அடிப்பது கொஞ்சம் பயமா இருக்கு.

நான் பாவாடையும் கிடையாது, பேண்ட் சட்டையும் கிடையாது, சங்கியும் கிடையாது, உபி.,யும் கிடையாது, எவர் ரசிகரும் கிடையாது. ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம். லப்பர் பந்து மாதிரி, வாழை மாதிரி எல்லாரிடம் போய் சேரும்,’’ என்று அந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசினார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி