Ripupbury Review: பயமுறுத்துதா? படுத்துதா? ‘ரிப்பப்பரி’ முதல் விமர்சனம்!
Apr 11, 2023, 10:16 PM IST
என்டர்டெயின்ட் மெண்டுக்காக படம் எடுக்கலாம் தப்பில்லை. ஆனால் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமலும், நம்பகத்தன்மை இல்லாமலுமாவா படம் எடுப்பது?
கோவை தலைக்கரை கிராமத்தில் ஜாதி மாறி கல்யாணம் செய்ய முயற்சிக்கும் ஆண்களை அடுத்தடுத்து கொல்கிறது ஒரு பேய். அந்தப் பேயை பற்றி தெரிந்து கொள்ள ஊரின் இன்ஸ்பெக்டர், மாஸ்டர் மகேந்திரனையும் அவரது நண்பர்களையும் அங்கு அனுப்புகிறார்.
இறுதியில் அந்தப் பேயை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டார்களா? அந்தப் பேய் ஏன் இப்படி ஜாதி வெறி பிடித்து அலைகிறது? என்பதே படத்தின் கதை.
கோவை கிராமத்து இளைஞனாக மாஸ்டர் மகேந்திரன். பல இடங்களில் சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் கடுப் பேற்றுகிறார். நடிப்பிலும் அவ்வளவு செயற்கைத்தனம்.
கதாநாயகி என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம். துளி முக்கியத்துவம் கூட அந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படவில்லை.
ஏதோ மாஸ்டர் மகேந்திரன் உடன் வரும் நண்பர்கள் மட்டும் அவ்வபோது சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக மகேந்திரனின் காதலியை போட்டிக் காதலனாக காதலிக்கும் கதாபாத்திரம் வெளிப்படுத்தும் உடல்மொழி சிரிப்பு ரகம்.
என்டர்டெயின்ட் மெண்டுக்காக படம் எடுக்கலாம் தப்பில்லை. ஆனால் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமலும், நம்பகத்தன்மை இல்லாமலுமாவா படம் எடுப்பது? மாபெரும் குற்றம்.
பேய் ஜானர் படங்கள் எத்தனையோ நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு படத்தை நாம் பார்த்திருக்கவே முடியாது. அப்படி ஒரு ஜானர். படத்தின் காட்சிகள் சிலவை நம்மை மறந்து சிரிக்க வைத்தாலும், நம்பவே முடியாத கதையும், கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாத திரைக்கதையும் நம்மை பாதியிலேயே திரையரங்கை விட்டு செல்ல வைத்து விடும்.
போதா குறைக்கு நடுவில் பேய்க்கு பிளாஷ்பேக் வேறு; மதிய வெயிலுக்கு படமே இல்லை என்பவர்கள் ஜாலிக்காக வேண்டுமானால் ரிப்பப்பரி படத்திற்கு வரலாம்.
டாபிக்ஸ்