தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி தியாகியாக இருந்திருக்க வேண்டும்.. சேரவும் பிரியவும் காரணம் ஒன்றுதான்”.. அந்தணன் கொடுத்த விளக்கம்

“ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி தியாகியாக இருந்திருக்க வேண்டும்.. சேரவும் பிரியவும் காரணம் ஒன்றுதான்”.. அந்தணன் கொடுத்த விளக்கம்

Nov 20, 2024, 01:06 PM IST

google News
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, அவரது பணிகளை புரிந்துகொண்டு தியாகியாக இருந்திருக்க வேண்டும் என பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, அவரது பணிகளை புரிந்துகொண்டு தியாகியாக இருந்திருக்க வேண்டும் என பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, அவரது பணிகளை புரிந்துகொண்டு தியாகியாக இருந்திருக்க வேண்டும் என பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, தன் கணவரை பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் இந்த சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அதில், "ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பிரிகிறார் என பத்திரிகையாளர் வாட்ஸ் அப் குழுவிற்கு தகவல் வந்தது. இது நிச்சயம் உண்மையாக இருக்காது என நினைத்த எங்களுக்கு இது பேரதிர்ச்சியாகத் தான் இருந்தது.

மிஸ்டர் கிளீன் ரஹ்மான்

திரைத்துறையில் மிஸ்டர் கிளீன் என்ற இமேஜ் மிகவும் குறைவானவர்களுக்குத் தான் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மீது எந்தவொரு எதிர்மறை விமர்சனங்களும் இருந்ததே இல்லை. இவர் வாழ்நாள் முழுக்க இசை இசை என்றே இருந்துவிட்டார். அவர் வீட்டில் இப்படி ஒரு புயலா என்ற வருத்தம் சூழ்ந்தது.

ரஹ்மான் கல்யாணம் இப்படித் தான் நடந்தது

ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், அது காதல் திருமணம் தான். சென்னை எக்மோரில் உள்ள தர்காவிற்கு ரஹ்மான் அடிக்கடி செல்வது வழக்கம். அந்த தர்காவிற்கு அருகிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் தான் அவரது மனைவி சாய்ரா. இவர்கள் இருவரும் தர்காவில் தான் எதேர்ச்சையாக சந்தித்துக் கொண்டனர். 

இந்த சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தால், இறைவன் நம்மிடம் ஏதோ ஒரு கட்டளை இடுகிறான் என நினைத்த ரஹ்மான் சாய்ரா மீது பிரியம் ஏற்பட ஆரம்பித்தது. ஆனா அதை ரஹ்மான் சாய்ராவிடம் வெளிப்படுத்தவில்லை. பின் 6 மாதத்திற்கு பிறகு, நேரடியாக சாய்ராவிடம் சென்ற ரஹ்மான், எனக்கு உங்களை பிடித்திருக்கிறது. நான் என் அம்மாவை அனுப்பி உங்கள் வீட்டில் பேச சொல்கிறேன் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட சாய்ராவும் சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு இரு குடும்பமும் பேசி சம்மதம் தெரிவித்த பின் தான் இருவரும் காதலிக்கவே ஆரம்பித்திருக்கின்றனர்.

வருத்தமான முடிவு

இப்படி இருவரும் அவ்வளவு அழகாக வாழ்ந்த நிலையில், இந்த முடிவு வந்திருப்பது மிகவும் வருத்தமானது. வரும் தகவலின் அடிப்படையில் ரஹ்மானுக்கே விவாகரத்து நோட்டீஸ் வரும் என்பது தெரியாதாம். அவருக்கே இது அதிர்ச்சியைத் தான் தந்ததாம். ரஹ்மானும் சரி, அவரது மகனும் சரி, தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பேசி பெரிதாக்க வேண்டாம் என அறிவித்திருக்கின்றனர். நிச்சயம் நாம் அதை மதித்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவர் மற்றவர்களைப் போல அல்ல.

ஒரு நடிகையாலோ, நடிகராலோ வேறு வேறு வாழ்க்கை முறையினாலோ இவர்கள் பிரிந்தார்கள் என சொல்லும் சூழல் இங்கு இல்லை. அப்படி இருக்கும் போது இதைப்பற்றி பெரிதாக பேசக்கூடாது.

வெளியில் சொல்ல வேண்டிய காரணம் என்ன

ஆனால், 29 வருடத்திற்கு பிறகு இவர்களின் பிரிவை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் இதை வெளியில் சொல்லாமலே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் அவருடைய மனைவியுடன் தான் வாழ்கிறாரா என யாரும் துப்பறியப் போவதில்லை. சாய்ராவிற்கு அந்த திருமணம் பிடிக்கவில்லை என்றாலோ, அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலோ அமைதியாக ஒதுங்கி இருக்கலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, தன் கடமைகளை முடித்த பின்னும் ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்கிறது என்றால் பிடித்த இடத்திற்கு சென்றிருக்கலாம்.

இன்றைய இளம் தலைமுறையினர் குடும்ப உறவுகளில் பிடிப்பு இல்லாமல் இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய இவர்களும் இப்படி செய்திருக்க வேண்டாம்.

பிஸியான ரஹ்மான்

நான் கேள்விப்பட்டவரை, சாய்ரா இந்த முடிவை அறியாமல் வேகமாக எடுத்துவிட்டார். தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், இசை பணியில் ரஹ்மான் அவரை முழுவதுமாக ஈடுபடுத்தி விட்டார். ஸ்டூடியோ, பெரிய நிறுவனங்களுடன் கைகோர்த்து புதிய பணிகளில் ஈடுபடுவது என பிஸியாக இருப்பதால், அவர் குடும்பத்திற்காக செலவு செய்யும் நேரம் குறைந்துவிட்டது.

இதனால், ரஹ்மானுக்கும் சாய்ராவிற்கமான பேச்சுவார்த்தையே இல்லாமல் போனதால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில், ரஹ்மானின் நண்பர்களும், சாய்ராவின் நண்பர்களும் குடும்பங்களும் இந்த விஷயத்தை தீர்த்து வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் இன்னும் 2 நாளில் இந்த சோகம் எல்லாம் மறைந்து போய் இருவரும் இணைய வாய்ப்பு இருக்கிறது.

தியாக வாழ்க்கை வேண்டும்

ஏ.ஆர்.ரஹ்மானைப் போல ஒரு இசை மேதையை திருமணம் செய்பவர்கள் எல்லா சூழ்நிலைகளையும் ஏற்று ஒரு தியாக வாழ்க்கைக்கு தயாராக இருக்க வேண்டும். அவரை திருமணம் செய்தது பெருமை என நினைத்த காலம் போய், அவரது பிஸியான வாழ்க்கையால் வாழ்க்கையே வெறுமையாக மாறியுள்ளது.

இத்தனை வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு நீங்கள் அறிவித்திருக்கும் பிரிவு அறிவிப்பு இளைஞர்களுக்கு மோசமான பாடத்தை தரும். எனவே, பிரிவு அறிவிப்பைக் காட்டிலும் மீண்டும் சேர்வதாக அறிவிப்பது தான் வருங்கால தலைமுறைக்கு நல்லது" எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி