தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ravinder Chandrasekar: பாத்ரூம் கூட போக முடியல.. செத்துடலாம்னு இருந்துச்சு - கண்ணீருடன் ரவீந்தர்!

Ravinder Chandrasekar: பாத்ரூம் கூட போக முடியல.. செத்துடலாம்னு இருந்துச்சு - கண்ணீருடன் ரவீந்தர்!

Aarthi V HT Tamil

Oct 13, 2023, 06:00 AM IST

google News
ஜெயிலில் தான் அனுபவிந்த கஷ்டம் பற்றி ரவீந்தர் வெளிப்படையாக பேசி உள்ளார்.
ஜெயிலில் தான் அனுபவிந்த கஷ்டம் பற்றி ரவீந்தர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

ஜெயிலில் தான் அனுபவிந்த கஷ்டம் பற்றி ரவீந்தர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சிறையில் இருந்து வெளியே வந்துவுடன் பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

அவர் கூறுகையில், “ மகா லட்சுமிக்கு ரொம்ப திமிரு. 100% லவ்வுக்கு உண்மையா இருக்கா. உன்னை எப்படி 30 நாள் பார்க்காமல் இருக்க போகிறேன் என தெரியவில்லை என்றாள். இருப்பினும் நான் வெளியே வந்துவிடுவேன் என்பதில் என்னை தாண்டி உறுதியாக இருந்தாள். எனக்காக அவள் நின்றாள்.

என் மாமனார், மாமியார் கூட என்னை தவறாக நினைக்கவில்ல. அவர்களை பார்த்து ஆசிர்வாதம் வாங்கினேன்.

ஜெயிலில் முதல் நாள்

புழல் சிறையில் முதல் நாள் போய் நின்ற போது, கதவை பார்த்து பயந்துபோனேன். கதவு திறந்த போது உடம்பு எல்லாம் ஆடிப்போனது. உள்ளே நுழையும் போது உடையை கழட்டி சோதனை எல்லாம் செய்யதார்கள். ரொம்ப மனவலியாக இருந்தது. என் மேல் பாலியல் மட்டும் குண்டாஸ் வழக்கு மட்டும் தான் போடவில்லை.

முதல் 5 நாள் மரண வேதனையாக இருந்தது. செத்துடலாம்னு இருந்துச்சு. வெளியே வந்து எங்கே அமர்ந்து இருக்கிறேனோ, அங்கேயே செத்து போக வேண்டும் என நினைச்சேன். அங்கு பாத்ரூம் கூட போக முடியல. ரொம்ப கஷ்டப்பட்டேன். உட்கார முடியவில்லை. திடிரென உள்ளே வந்தார் ஜெயிலர். ஒரு குச்சி வைத்து கொண்டு எல்லாரையும் விரட்டி ஒரே ஒரு வெஸ்டர்ன் டாய்லட் தான் இருந்தது. அங்கே என்னை அமர வைத்தார். அவர் தான் எனக்கு உதவி செய்தார் “ என்றார். 

தயாரிப்பாளர் பாலாஜியிடம், ரவீந்தர் திடக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம் எனக் கூறி, ரூ 15 கோடி வரை மோசடி செய்தார் என புகார் அளித்தார். அதன் பேரில் கைது செய்யப்பட்டு, 1 மாதம் வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

நன்றி: Indiaglitz Tamil

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி