தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rathnam Ott: இது என்ன விஷாலுக்கு வந்த கொடுமை.. ஒரே மாதம் தான்.. ஓடிடிக்கு வந்த ரத்னம்

Rathnam OTT: இது என்ன விஷாலுக்கு வந்த கொடுமை.. ஒரே மாதம் தான்.. ஓடிடிக்கு வந்த ரத்னம்

Aarthi Balaji HT Tamil

May 23, 2024, 10:42 AM IST

google News
Rathnam OTT: எதிர்பார்ப்பை ரத்னம் படம் பூர்த்தி செய்யாத காரணத்தினால் ரிலீஸான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்தது.
Rathnam OTT: எதிர்பார்ப்பை ரத்னம் படம் பூர்த்தி செய்யாத காரணத்தினால் ரிலீஸான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்தது.

Rathnam OTT: எதிர்பார்ப்பை ரத்னம் படம் பூர்த்தி செய்யாத காரணத்தினால் ரிலீஸான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்தது.

ஆக்‌ஷன் பட இயக்குநர் ஹரி இயக்கிய ரத்னம் படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வழக்கமான கான்செப்ட் என்பதால் கலவையான பேச்சுக்கே சொந்தம்.

விஷாலின் நடிப்பைத் தவிர, ஹரியின் இயக்கமும் ஆக்‌ஷன் எபிசோடுகளும் நன்றாக இருந்த போதிலும், கதையில் புதுமை இல்லாததால் ரத்னம் படம் ரசிகர்களை மகிழ்விக்க முடியவில்லை.

ப்ரியா பவானி சங்கர் கதாநாயகி

ரத்னம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். இந்த ஆக்‌ஷன் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். யோகி பாபு, சமுத்திரகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த காலங்களில் விஷால், ஹரி கூட்டணியில் பூஜை படம் வந்தது. இரண்டாவது முறையாக இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அது பயன் அளிக்கவில்லை

அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. தமிழில் இப்படம் 20 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது . தெலுங்கில் 4.5 கோடி என்ற பிரேக் ஈவென் இலக்குடன் வெளியானது ரத்னம். இப்படம் இரு மொழிகளிலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யாத காரணத்தினால் ரிலீஸான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்தது. இன்று ( மே 23 ) அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

ரத்னம் கதை

ரத்னம் (விஷால்) எம்.எல்.ஏ பன்னீர்சாமியின் (சமுத்திரக்கனி) நம்பகமான சிப்பாய் வேலை செய்கிறார். எம்எல்ஏ அண்டாவுடன் ஊழல் வேலை செய்து வருகிறார். மல்லிகா (ப்ரியா பவானி சங்கர்) என்ற பெண் தற்செயலாக ரத்னத்தின் வாழ்க்கையில் நுழைகிறார்.

லிங்கம் சகோதரர்கள் மல்லிகாவை கொல்ல முயற்சிக்கின்றனர். லிங்கம் பிரதர்ஸ் பிடியில் இருந்து மல்லிகாவை ரத்னம் எப்படி காப்பாற்றினார்? ரத்னத்தின் கடந்த கால வாழ்க்கையை சிரமங்கள் நிறைந்ததாக மாற்றும் காரணம் யார்? ரத்னம் எப்படி எதிரிகளை பழிவாங்கினார்? மல்லிகாவை கொல்ல முயன்றது யார்? இந்த விஷயத்தை மனதில் வைத்து தான் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி.

மார்க் ஆண்டனி 100 கோடி

ரத்னத்திற்கு முன், விஷால் நடித்த மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது . இது விஷாலின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றிப் பயணத்தை ரத்னத்தால் தொடர முடியவில்லை.

மறுபுறம், சிங்கம் தொடர் படங்கள் மற்றும் சாமி போன்ற அதிரடி படங்களின் மூலம் கோலிவுட்டின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஹரி. ஆரம்பம் முதலே ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் ஜானர் படங்களுக்கே ஹரி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடந்த சில வருடங்களாக தமிழில் சரியான வெற்றி கிடைக்கவில்லை. ரத்னமும் அவருக்கு வெற்றியைத் தரத் தவறி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி