தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lal Salaam Twitter Review: ஆட்டம் ஆரம்பம் மொய்தீன் பாய்.. எப்படி இருக்கிறது லால் சலாம்? - ட்விட்டர் விமர்சனம்!

Lal Salaam Twitter Review: ஆட்டம் ஆரம்பம் மொய்தீன் பாய்.. எப்படி இருக்கிறது லால் சலாம்? - ட்விட்டர் விமர்சனம்!

Aarthi Balaji HT Tamil

Feb 09, 2024, 08:07 AM IST

google News
லால் சலாம் படம் தொடர்பாக ரசிகர்கள் தங்களின் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
லால் சலாம் படம் தொடர்பாக ரசிகர்கள் தங்களின் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

லால் சலாம் படம் தொடர்பாக ரசிகர்கள் தங்களின் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது. 

இப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக இயக்குகிறார். இப்படத்தை விஷ்ணு ரங்கசாமி எழுதியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்த படம் தொடர்பாக ரசிகர்கள் தங்களின் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

முன்னதாக விழா மேடையில் பேசிய லால் சலாம் படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்து இருக்கமாட்டார். அவர் மனிதநேயவாதி.

இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்து இருக்கமாட்டார்கள், அவரைத் தவிர.

நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்’ எனப் பேசி இருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி பேசுபொருள் ஆனது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினி காந்த்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சங்கி என்ற வார்த்தை கெட்டவார்த்தை இல்லை. எனது மகள் சரியாகவே பேசி உள்ளார். அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதுதான் ஐஸ்வர்யாவின் பார்வை என கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி