Priyanga Deshpande: ‘எவன் என்ன நினைச்சா என்ன?… மகளுக்காகதான் இப்படி ஓடுறேன்’ - மேடையில் கதறிய பிரியங்கா!
Apr 19, 2024, 06:02 PM IST
என்னுடைய அப்பாவிற்கு நான் செய்வதெல்லாம் பிடித்திருக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் உயிரோடு இருந்திருந்தால், இதையெல்லாம் பார்த்திருப்பாரே என்று தோன்றும்.
பிரபல தொகுப்பாளினியான பிரியங்காவிற்கு அண்மையில் கலாட்டா சேனல் நடத்திய விருது நிகழ்ச்சியில், விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிக்கொண்ட பிரியங்கா, நிகழ்ச்சியில் பேசியதாவது, “எதையுமே தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது.
என்னிடமே நான் சொல்லிக்கொள்வது பிரியங்கா… உன்னை ஏமாற்றாத ஒரே விஷயம் தொழில் மட்டும்தான். இதிலிருந்து சம்பாதித்த மக்களை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இரு. உனக்கு என்ன சேர வேண்டுமோ அது வந்து சேரும்.
ஜெயிச்சுட்ட மாறா என்ற வசனத்தை நான் சில பேருக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
சூரரைப்போற்று திரைப்படத்தில் இறுதியாக வரும் வசனமான, ஜெயிச்சுட்ட மாறா என்ற வசனத்தை நான் சில பேருக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், திமிராக இல்லை.
மக்களுக்காக நான் இந்த தொழிலை செய்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது, உங்களுக்காக நான் அதை ஜெயிப்பேன் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
ஆனால், ஜெயிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஆகையால், அதை வெளிப்படுத்துவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதை சொல்ல வேண்டிய நேரத்தில் நான் சொல்கிறேன். என்னவென்று தெரியவில்லை. கடந்த மூன்று வருடங்களாக நான் மிகவும் எமோஷனலாக இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் தற்போது அழுகை வருகிறது.
எப்போது என்னுடைய தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னார்களோ, அப்போது இருந்தே என்னுடைய உலகம் அவர்களாக மாறிவிட்டார்கள்.
ஈகா… அவள் தான் என்னுடைய தம்பியின் மகள்
ஈகா… அவள் தான் என்னுடைய தம்பியின் மகள். வீட்டிற்கு வரவேண்டும் என்று நினைக்கும் பொழுது, அவளுக்காக வரவேண்டும் என்று தோன்றுகிறது; வீட்டை விட்டு செல்லும் பொழுது, அவளுக்காக ஜெயித்து விட்டு வருகிறேன் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பது போல தோன்றுகிறது.
என்னுடைய அப்பாவிற்கு நான் செய்வதெல்லாம் பிடித்திருக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் உயிரோடு இருந்திருந்தால், இதையெல்லாம் பார்த்திருப்பாரே என்று தோன்றும்.
ஆனால் நீங்கள் அனைவரும் என்னுடைய இந்த பயணத்தில், அவர் என்னுடன் இருப்பது போன்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள்.
எப்போதுமே சோக பக்கத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்வார்கள்.நானும் அப்படியே… எனக்கு அந்தப் பிரச்சினை; இந்த பிரச்சினை… என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை; நான் நல்ல விஷயங்களை பார்க்க விரும்புகிறேன். அதனை கற்பனை செய்ய விரும்புகிறேன்.
உங்களுடைய மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும் தான் பொறுப்பு.
உங்களுடைய மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும் தான் பொறுப்பு. எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை. சந்தோஷமாக சிரித்து, மற்றவனை வெறுப்பேத்திக் கொண்டே இருங்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்; மனசாட்சிக்கு தவறானதை தயவு செய்து தொடாதீர்கள்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்