சிங்கிள் செக் தான்.. காச மூஞ்சில வீசுறேன்.. ஆவேசமான எழில்.. அடக்கி வாசித்த கயல்.. கயல் சீரியல் அப்டேட்
Nov 23, 2024, 12:15 PM IST
குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லும் கயல் குடும்பத்தை பழைய பிரச்சனையைக் கூறி ஊரில் உள்ளவர்கள் வாக்குவாதம் செய்கின்றனர்.
புதிதாக திருமணம் ஆன கயலும் எழிலும் சொந்த ஊர் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என கயலின் அம்மா கூறுகிறார். இதை ஏற்றுக் கொண்ட கயல், இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, தன் தந்தை எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
கயலுக்காக காத்திருக்கும் சரவண வேலு
இவர்கள், தங்களது சொந்த ஊருக்கு வரும் நிலையில், அங்கு கயலை திருமணம் செய்து கொடுப்பதாக அவரது தந்தை கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் வயது ஏறியும் திருமணம் செய்யாமல் சரவண வேலு காத்திருக்கிறார். மேலும், திருமணம் குறித்து யாராவது பேசினாலும் அவர்களை வெளுத்து வாங்குகிறார்.
சொந்த ஊர் சென்ற கயல் குடும்பம்
இந்நிலையில், கயலின் குடும்பம் பல ஆண்டுகளுக்குப் பின் கோயிலுக்கு பொங்கல் வைக்க வருகின்றனர். பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் வேலையில், ஊர்க்காரர்கள் வந்து தொந்தரவு செய்து, கயலின் குடும்பத்தை அசிங்கமாக பேசுகின்றனர். அத்துடன், கயல் குடும்பத்துடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
ஒரே செக் தான்
அந்த சமயத்தில், ஊர்காரர்களின் பணம் குறித்து பேசிய நிலையில், ஆத்திரமடைந்த எழில், பணம் எவ்வளவு வேண்டும் என சொல்லுங்கள், ஒரே செக்கில் இப்போதே அதை செலுத்தி விடுகிறேன் என ஆவேசமாக பேசுகிறார். இதைக் கேட்ட சரவண வேலு கோவமாக எழிலை பார்க்கிறார்.
ஒரு வருடம் அவகாசம்
கயல், பொறுமையாக இருந்து. உங்கள் பணத்திற்கும் என் அப்பாவிற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியதுடன், இன்னும் ஒரு வருடத்திற்குள் என் அப்பா செலுத்த வேண்டிய காசை செலுத்தி முடிக்கிறேன் என சவால் விட்டுள்ளார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
தந்தை குற்றமற்றவர்
முன்னதாக, தன் அப்பா எந்த தவறும் செய்யவில்லை என நிச்சயம் நிரூபித்தே தீருவேன் என கயல், எழலிடம் முதலிரவில் தீர்க்கமாக கூறியிருந்தார். இந்த நிலையில், சீரியலில் அடுத்தடுத்த திருப்பமாக புதிய வில்லன், புதிய கதைக்களத்தை கயல் சீரியல் கொண்டுள்ளது.
பெரியப்பாவின் பயம்
முன்னதாக, கயல் தன் பெரியப்பா வீட்டில் விருந்து முடித்தவுடன் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும் எனக் கூறுகிறாள். அது என்னவாக இருக்கும் என பெரியப்பா தர்ம லிங்கமும், பெரியம்மா வடிவும் சற்று பதற்றத்துடன் கேட்க ஆரம்பிக்கின்றனர்.
பல 100 வருஷம் சேர்ந்து வாழனும்
பின், விருந்து முடித்து வீட்டிற்கு வந்த கயலும் எழிலும் காதல் கொஞ்ச பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, எழில் நாம் இருவரும் பல 100 வருஷம் இதே அன்போடு எப்போதும் மாறாமல் இருக்க வேண்டும் என கூறுகிறார்.
ஆட்டத்தைக் கலைக்க வரும் புது வில்லன்
இதைக் கேட்ட கயல், நம் இருவரையும் அவ்வளவு எளிதில் யாராலும் பிரிக்க முடியாது என உறுதியாகக் கூறுகிறார். நிலமை இப்படி இருக்கையில், கயலுக்கும் எழிலுக்கும் தொல்லை கொடுத்து அவர்களை பிரிக்க புது வில்லன் வரப் போவதாக சன் டிவி குறிப்பிட்ட நிலையில், சரவண வேலுவின் என்ட்ரி வந்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்