Squid Game: காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்த கன்டென்ட்! இந்த கேம் ஒருபோதும் நிற்காது!- வெளியான வீடியோ
Sep 21, 2024, 10:54 AM IST
Squid Game: நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த வெப் சீரிஸ் என புகழ்பெற்ற ஸ்குவிட் கேம் தொடரின் 2ம் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் சிறப்பு டீசர் வெளியாகி ரசிகர்களை ஆராவாரமாக்கியுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அதிக ரசிகர்களால் பார்க்கவும் பாராட்டவும் பெற்ற ஸ்குவிட் கேம் தொடரின் 2ம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஸ்குவிட் கேம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில், தற்போது, இரண்டாம் பாகத்தின் சிறப்பு டீசரை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ் தளம்.
அந்தப் பதிவில், இந்த கேம் எப்போது நிற்காது. கேமை விளையாட நீங்கள் தயாரா? என்ற கேப்ஷன்களுடன் பதிவிட்டுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் டிசம்பர் மாதம் வெளியாகும் ஸ்குவிட் கேம் 2ம் பாகத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
வெப் சீரிஸ் ஈர்ப்பு
இன்றைய இளைஞர்கள் பலரும் தாய்மொழி திரைப்படங்களைத் தாண்டி பிற மொழித் திரைப்படங்களையும் வெப் சீரிஸ் பார்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு அவர்களுக்கு பொழுதுபோக்கு ஏற்படுவதுடன் மொழி, மற்ற கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் குறித்த கூடுதல் அறிவும் கிடைக்கிறது.
அந்தவகையில், தற்போது பெரும்பாலான இளைஞர்கள் தென்கொரிய வெப் சீரிஸ் பார்ப்பதை விரும்புகின்ரனர். இந்தத் தொடர்களின் மேக்கிங், கதைக்களம், உடைகள், உணர்ச்சி ததும்பும் காட்சிகள் மக்களை அதிகளவில் ஈர்ப்பதால், இளைஞர்கள் அதற்குள் மூழ்கி விடுகின்றனர்.
ஸ்குவிட் கேம்
அவ்வாறே, ஆக்சன், பரபரப்பு, த்ரில்லர் காட்சிகளை விரும்பும் இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியானது ஸ்குவிட் கேம் தொடர். நெட்பிளிக்ஸ் தளத்தில் 2012ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதிவெளியான இந்த தொடரை ஹ்வாங் டாங் - ஹியூக் தென்கொரியாவில் உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார்.
இதில் கடன் நிறுவனங்களின் அடாவடியை கட்டுப்படுத்தும் முனைப்பில் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி ஸ்குவிட் கேம் என்ற விபரீத விளையாட்டை விளையாடுவது போல் கதைக்களத்தை விறுவிறுப்புடன் அமைத்திருப்பார்.
2ம் பாகத்திற்கான அறிவிப்பு
கடனாலா பாதிக்கப்பச்ச மக்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஸ்குவிட் கேம் என்ற விளையாட்டு நடத்ப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பெரிய பரிசுத்தொக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு மாறாக இந்தப் போட்டியில் தோற்றால் அவர்கள் அந்த இடத்திலேயே கொலை செய்யப் படுவர்.
இந்த விளையாட்டிற்கான சிறிய கதைக்களத்தை வைத்து 9 எபிசோடுகளைக் கொண்ட முதல் பாகம் வெளியான 4 வாரத்தில் 1.65 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது.
இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 26ம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது அதன் சிறப்பு டீசரை வெளியிட்டு அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதன் 3ஆவது மற்றும் இறுதி பாகம் வரும் 2025ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள், அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்