தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  250 கோடியைத் தாண்டும் வசூல்.. அமரன் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட திட்டமிடும் நெட்பிளிக்ஸ்!

250 கோடியைத் தாண்டும் வசூல்.. அமரன் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட திட்டமிடும் நெட்பிளிக்ஸ்!

Nov 12, 2024, 09:51 AM IST

google News
திரையரங்குகளில் அமரன் படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருவதால், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரையரங்குகளில் அமரன் படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருவதால், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரையரங்குகளில் அமரன் படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருவதால், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ராணுவத்தில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி அமரன் எனும் திரைப்படத்தை இயக்கினார். நடிகர் கமல் ஹாசனும், சோனி பிக்சர்ஸும் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த்தாகவும் நடிகை சாய் பல்லவி முகுந்த்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் நடித்துள்ளார்.

12 நாள்கள் ஆகியும் குறையாத மவுசு

தீபாவளி பண்டிகையை ஒட்டி தியேட்டர்களில் ரிலீஸான இந்தப் படம், வெளியான நாளில் இருந்து இன்று வரை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தால் கவரப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு படையெடுப்பதால் படத்தின் வசூலும் 250 கோடியை எட்டியுள்ளது.

படத்தின் காட்சிகளும் சிவகார்த்திகேயனுக்கும் சாய் பல்லவிக்கும் இருந்த கெமிஸ்ட்ரியும், ஜி,வி. பிரகாஷின் பின்னணி இசையும் ஒன்று சேர்ந்து மக்களின் மனங்களில் ஊஞ்சலாடியது. அதே சமயம் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது அறிவிக்கப்படும், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்தது.

நெட்பிளிக்ஸின் முடிவு

ஒரு படம் தியேட்டரில் வெளியான 28 நாட்களிலேயே ஓடிடி தளத்தில் படம் வெளியாகலாம். ஆனால், தற்போது அமரன் படம் வெளியாகி 12 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸை ஒத்தி வைக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் மாத இறுதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அமரன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் வெளியீட்டுத் தேதி டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இராணுவ வீரரின் உண்மைக் கதை

இப்படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்

நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. இதனால், ஏற்கனவே படம் பார்த்தவர்களும் கூட, இவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தியேட்டருக்கு திரும்பத் திரும்ப வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி