Naagini 6 Season: கலர்ஸ் தமிழில் அக்டோபர் 3 முதல் மீண்டும் தொடங்கும் நாகினி ஆட்டம்
Oct 03, 2023, 05:53 PM IST
அக்டோபர் 3 முதல் அக்டோபர் 15 வரை இரவு 8:30 மணிக்கு நாகினி 6இன் Story So Far (SSF) எபிசோட்களை கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நாகினி 6, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இன்று முதல் ஒரு மணி நேர எபிசோடாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால், ஊர்வசி தோலக்கியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நாகினி சீசன் 6 புதிய கதைக்களத்தை கொண்டுள்ளது, இது முந்தைய சீசன்களை போல காதல் - பழிவாங்கும் கதையாக இல்லாமல் கோவிட்-19 தொற்று பாதிப்பை பின்புலமாக கொண்டுள்ளது.
நாகினிகள் உயிரியல் போரிலிருந்து நாட்டை காப்பாற்ற போராடும் சூப்பர் ஹீரோக்களை சித்தரிக்கும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது.
ஏக்தா கபூர் தயாரித்த நாகினி 6, சிறப்பான கிராஃபிக் காட்சிகளுடன் சூப்பர் நேச்சுரல் தொடராக இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.
பிரபலமான வெப்சீரஸான Money Heistஇல் வங்கி கொள்ளை முழுவதையும் வழிநடத்திய பேராசிரியரை போல், நாகினி 6 சீரியலிலும் ஒரு பேராசிரியர் இருக்கிறார். துறவிகள் மற்றும் முனிவர்களைக் கூட்டி, நாட்டில் நடக்கும் பேரழிவை பேராசிரியர் கண்டுபிடித்து, அதைப் பற்றி அறிவிப்பதில் இருந்து இந்த சீசன் தொடங்கியது.
நாகினியின் சீசன் 6 என்பது முந்தைய சீசன்களின் தொடர்ச்சியாக தொடங்கி, நாகினியின் கதையின் மையமாக நாகமணி மற்றும் சூர்யவன்ஷி குடும்பம் இருந்த இடம் இன்னும் வெளிவரவில்லை.
நாகினி 6 இன் எதிர்காலக் கதையில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். நாகினி 6 இன் புதிய எபிசோட்கள். அக்டோபர் 16 முதல் திங்கள்கிழமை தோறும், இரவு 8.30 மணிக்கு, கலர்ஸ் தமிழிலும், ஜியோ சினிமாவிலும் டிஜிட்டல் முறையில் 30 நிமிட எபிசோடுகளாகவும் பார்க்கலாம்.