HBD MS Viswanathan : மெல்லிசை மன்னர் .. இசை ஐாம்பவான் .. எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள் இன்று!
Jun 24, 2023, 05:00 AM IST
தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமா வரை பல நூறு பாடல்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூறுவோம்.
கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ஆம் ஆண்டு, ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் நான்கு வயதிலேயே தந்தையை இழந்தால் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளி படிப்பை பயில முடியாத இவருக்கு இசையின் மீது கொண்ட நாட்டம் வந்தது. இதனால் அங்கு கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்றார்.
விஸ்வநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம.கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
13ஆவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தை வாசித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
எம்ஜிஆர், சிவாஜி ரஜினி, கமல் படங்கள் எல்லாமே இவருடைய இசையில் தான் பலருடைய மனதையும் கவர்ந்தது. இவர் இசையில் டி.எம்.எஸ், சுசீலா போன்ற பழம்பெறும் பாடகர்கள் தங்கள் குரல் மூலம் அலங்கரித்தனர். இப்போது இருக்கும் பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு முன்னோடியாக இப்போதும் எம்.எஸ்.வி தான் இருக்கிறார்.
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநாதனும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் மற்றும் சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விஸ்வநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார்.
இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார்.இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ஆம் விஸ்வநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
இவர் தமிழில் 800 திரைப்படங்களுக்கும், மலையாளத்தில் 80 திரைப்படங்களுக்கும் , தெலுங்கில் 30 திரைப்படங்களுக்கும், கன்னடத்தில் 15 திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இசை மட்டும் அல்ல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
இவர் கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன்-பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விஸ்வநாதன். வி.குமார், இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்