தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நீங்க எல்லாம் என்ன எதுக்கு கூப்டுறீங்கன்னு தெரியும்.. எரியுற நெருப்புல எண்ணெய்ய ஊத்த விரும்பல.. மோகினி டே பளீச்..

நீங்க எல்லாம் என்ன எதுக்கு கூப்டுறீங்கன்னு தெரியும்.. எரியுற நெருப்புல எண்ணெய்ய ஊத்த விரும்பல.. மோகினி டே பளீச்..

Nov 23, 2024, 01:32 PM IST

google News
என்னை நீங்கள் எதற்காக நேர்காணலுக்கு வரவேண்டும் என அழைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற விரும்பவில்லை என, மோகினி டே அவரது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
என்னை நீங்கள் எதற்காக நேர்காணலுக்கு வரவேண்டும் என அழைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற விரும்பவில்லை என, மோகினி டே அவரது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

என்னை நீங்கள் எதற்காக நேர்காணலுக்கு வரவேண்டும் என அழைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற விரும்பவில்லை என, மோகினி டே அவரது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தன் கணவரை பிரிய உள்ளதாக அவரது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கிடைத்த சமயத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி அவரை பிரிந்து சென்றதற்கான காரணம் என்ன என்று பலரும் விவாதித்து வந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மானை பெண்ணுடன் தொடர்பு படுத்தி பேச்சு

இப்படி காரணம் தேடியவர்களுக்கு கிடைத்த ஊறுகாய் தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் குழுவில் கிடாரிஸ்டாக பணியாற்றிய மோகினி டே. இவர், ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின், தன்னுடைய விவாகரத்து அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதை முக்கிய விஷயமாக பார்த்த சிலர், ஏ.ஆர்.ரஹ்மான், மோகினி டேவிற்கு இடையே ஏதாவது உறவு இருக்குமோ? அதனால் தான் சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மானை தனியாக விட்டுச் செல்ல முடிவெடுத்துவிட்டாரோ என பலரும் பேசி வருகின்றனர்.

அவர் ஒழுக்கத்தின் உருவம்

இதையடுத்து, இந்த விவகாரத்தை பலரும் பெரிதாக்கினர், இதைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய வட்டாரங்கள். அவர் மிகவும் ஒழுக்கமானவர். பெண்கள் சரியாக உடை அணியவில்லை என்றால் அவர்களின் முகத்தைப் பார்த்தே பேசமாட்டார் எனக் கூறினர். அத்துடன் மட்டுமின்றி, ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு குழந்தை மாதிரி. எப்படி அவரை இதுபோன்று எல்லாம் பேச முடிகிறது என ஆதங்கமாகவும் பேசியுள்ளனர்.

நீங்கள் எதற்காக அழைக்கிறீர்கள் எனத் தெரியும்

இந்நிலையில், தொடர்ந்து எழும் இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ள வைக்க நினைத்த மோகினி டே, அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வதந்திகளை பரப்புவோருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், "எனது விவாகரத்து அறிவிப்புக்குப் பின் ஏராளமான நேர்காணல் அழைப்புகள் எனக்கு வருகின்றந. நீங்கள் எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் எனக்கு வரும் ஒவ்வொறு அழைப்புகளையும் மரியாதையுடன் நிராகரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை

ஏனென்றால் எனக்கு ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய்யை ஊற்ற விருப்பமில்லை. அதுமட்டுமின்றி, என்னுடைய உடலிலுள்ள ஆற்றல்களை நீங்கள் பரப்பும் வதந்திகளுக்கு பதிலளித்து செலவழிக்கவும் விருப்பமில்லை. தயவுசெய்து, எனது தனியுரிமையைமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோகினி டே பதிவு

கனத்த இதயத்துடன் முடிவு

இவர், முன்னதாக தனது விவாகரத்து குறித்த அறிவிப்பில், " அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் என்னை பின்தொடர்பவர்களுக்காக இந்தப் பதிவு. கனத்த இதயத்துடன் என் கணவர் மார்க்கும் நானும் பிரிந்துவிட்டோம் என்ற தகவலை அறிவிக்கிறோம்.

இந்த முடிவு வாழ்க்கையை முன்னேற்றும்

எங்களது அர்ப்பணிப்பு என்பது முதலில் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத்தான். இந்த முடிவை நாங்கள் இருவரும் மனதார பேசிதான் எடுத்துள்ளோம். எங்கள் இருவருக்குமே வேறு வேறு விஷயங்கள் தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொண்ட பின்பு தான் இந்த முடிவையே எடுத்துள்ளோம். எங்களது விவாகரத்து வாழ்க்கையில் இருவரும் முன்னேர சிறந்த ஒன்றாக மாறும். விவாகர்த்து பெற்றாலும் நாங்கள் நண்பர்களாக பயணிப்போம்.

அன்பு காட்ட வேண்டும்

இதுவரை நாங்கள் இணைந்து இசை கலைஞர்களாக பயணித்தது போல், இனியும் பயணிப்போம். எங்கள் நட்பு எந்த காலத்திலும் தடை படாது. உலகில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதே நாம் விரும்பும் பெரிய விஷயம்.

நீங்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த விவகாரத்தை நேர்மறையான முறையில் கொண்டு செல்லவும், எங்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கவும் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி