பான் இந்தியா இனி எகிறும்.. தசாப்தங்களுக்கு பிறகு இணையும் மம்முட்டி மோகன்லால்..- யார் டைரக்டர் தெரியுமா?
Nov 20, 2024, 07:00 PM IST
தசாப்தங்களுக்கு பிறகு இணையும் மம்முட்டி - மோகன்லால்! - படத்தை இயக்கப்போகும் டைரக்டர் யார் தெரியுமா?
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது.
பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என எல்லா வுட்களும் தங்களது திரைத்துறையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும், பொருளாதாரத்தில் பெரு வருமானத்தை ஈட்டவும், பிரமாண்ட பான் இந்தியா திரைப்படங்களை எடுத்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு பிறத்துறையைச் சேர்ந்த நடிகர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை கொடுத்து வரும் மோலிவுட்டும் அண்மை காலமாக அந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கின்றது.
அந்த வகையில், மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லும் வகையில் அச்சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான மோகன் லாலும், மம்முட்டியும் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். அந்தப்படம் தொடர்பான விபரங்களை பார்க்கலாம்.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில்
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாக இணைத்து இருக்கிறது. இந்த பெரும் ஆளுமைகளுடன், நட்சத்திர நடிகர்களான ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உட்பட மற்றும் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். இதன் மூலம் மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இந்தத்திரைப்படம் மாறியுள்ளது.
தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை, சி.ஆர்.சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர். படத்தின் கதை திரைக்கதையை மகேஷ் நாராயணன் எழுதியுள்ளார். நடிகர்கள் ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப் மற்றும் மெட்ராஸ் கபே மற்றும் பதான்படங்களில் பணியாற்றிய நடிகர்-இயக்குநர் பிரகாஷ் பெலவாடி போன்ற குறிப்பிடத்தக்க நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். ராஜேஷ் கிருஷ்ணா மற்றும் சி.வி. சாரதி நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தயாரிப்பு வடிவமைப்பு ஜோசப் நெல்லிக்கல் கவனிக்க, ஒப்பனை தொடர்பான வேலைகளை ரஞ்சித் அம்பதி கவனிக்கிறார். ஆடைகளை தன்யா பாலகிருஷ்ணன் கவனிக்க புரொடக்சன் தொடர்பான பணிகளை டிக்சன் போடுதாஸ் கவனிக்கிறார். லினு ஆண்டனி தலைமை இணை இயக்குநராகவும், பாண்டம் பிரவீன் இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதை ஏஎன்என் மெகா மீடியா விநியோகம் செய்கிறதுமோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக இப்படம் இன்று தொடங்கியது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்