கைதி 2வில் ஜெயில் சீக்வென்ஸ் இருக்கு என்ற லோகேஷ் கனகராஜ்.. ஆர்.ஜே.பாலாஜி பிரச்னை என்றால் பேசக்கூடிய நண்பர் என்ற அனிருத்
Nov 23, 2024, 05:43 PM IST
கைதி 2வில் ஜெயில் சீக்வென்ஸ் இருக்கு என்ற லோகேஷ் கனகராஜ் பற்றியும், ஆர்.ஜே.பாலாஜி பிரச்னை என்றால் பேசக்கூடிய நண்பர் என்ற அனிருத்தின் முழுப்பேச்சினையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.
சொர்க்கவாசல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐய்யப்பன், சாராஃப் யுதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், அந்தோணிதாசன் எனப்பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், சித்தார்த் விஸ்வநாத். இப்படத்தில் எழுத்துப்பணியை தமிழ்ப்பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத் ஆகியோர் கூட்டாக பணி செய்துள்ளனர். படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஜெயிலில் எடுக்கப்பட்டுள்ளன.
அதில் பங்கேற்று இவ்விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ’சொர்க்க வாசல் படத்தில் பணிபுரிந்த எல்லோரையும் தெரியும். ஆர்.ஜே. பாலாஜி, பல்லவி என பலரும் நன்கு தெரிஞ்சவங்க. முதலில் சொர்க்கவாசல் படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆறு மாதத்து முன்பு ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தின் காட்சிகளைக் காட்டினான். அப்போது சொன்னேன், ஆர்.ஜே. பாலாஜி நடிகராக வருகிறார் என்று. அதுக்கு முன்னாடி நீ நடிக்கிலைன்னு சொல்லலடா. இந்த படத்தில் சூப்பராக இருந்தது. உன்னை நினைக்கும்போதும் சித்தார்த்தைப் பார்க்கும்போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அடுத்து ட்ரீம் வாரியர்ஸுக்கு என் வாழ்த்துகள். அவங்க எப்படி படம் எடுத்து ரிலீஸ் செய்வாங்கன்னு எல்லோருக்கும் தெரியும்.
ஆர்.ஜே.பாலாஜியும் நானும் ஜெயில்மேட்ஸ் கிடையாது - லோகேஷ் கனகராஜ்
ஆர்.ஜே.பாலாஜியும் நானும் ஜெயிலில் ஒன்றாக இருந்தவங்க கிடையாது. கைதி 2 வில் கொஞ்சம் ஜெயில் சீக்வென்ஸ் எல்லாம் இருந்தது. இந்தப் படம் வந்ததும் நான் பார்க்கணும். சொர்க்கவாசல் படத்திலும் ஜெயில் சீக்வென்ஸ் இருக்குது. எப்படி வச்சிருக்காங்கன்னு தெரியல. அதைப் பார்த்து எனக்குத் தகுந்தது மாதிரி நான் மாத்திக்கணும்.ஏனென்றால் ரொம்ப ஆழமாக இருந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நன்றி’’ எனப் பேசி முடித்தார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்து இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், ‘’ எல்லோருக்கும் வணக்கம். முதன்முதலா இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங். சித்தார்த் ராவ் எங்களோடு 10 ஆண்டுகளாக வேலை செய்திருக்காங்க. பல்லவி சிங்கும் எங்களது பயணத்தில், கான்செர்ட்ஸ், மூவிஸ் எல்லாத்துக்குமே அவங்க தான் ஸ்டைலிஸ்ட். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தயாரித்த முதல் படம் தான், சொர்க்க வாசல்.
இந்த திரைப்படத்தில் எல்லோரும் ரொம்ப Near and Dear Once. அனிருத் கிருஷ்ணா தான் இந்தப் படத்தின் லைன் புரொடக்ஷன் பார்த்திக்கிட்டார். பிரின்ஸ் ஆண்டர்சன் தான் ஒளிப்பதிவு பார்த்துக்கிட்டார். எங்களோட ஸ்கூல். ரவி.கே சாரின் மகனோடு மும்பையில் வொர்க் பண்ணிட்டு இருந்தார். அவரோட முழு நீள திரைப்படம் இது. நீங்கள் விசுவல்ஸ் பார்த்தாலே தெரியும் சூப்பரா செய்திருக்கார். பிரின்ஸ் இது ஒரு தொடக்கம் தான். இன்னும் மைல்டூ கோ. உன்னை நினைத்துப் பெருமையாக இருக்கு. எங்களோட சவுண்ட்ஸ் எல்லாத்தையும் வினய் தான், கடந்த 10 வருடங்களாகப் பார்த்திட்டு இருக்கார். அவர் இந்தப் படத்தில் மிக்ஸ் பண்ணியிருக்கார். டெக்னிக்கலி வொர்க் செய்தவங்க எல்லோரும் எங்கள் பேமிலி மாதிரி தான்.
சொர்க்கவாசல் இயக்குநர் எனது பள்ளியில் ஜீனியர்: அனிருத்
டைரக்டர் சித்தார்த் விஸ்வநாத் வந்து, என்னுடைய ஸ்கூலில் இரண்டு வருஷ ஜூனியர். அப்போது அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்குன்னு தெரியாது. நான் சினிமாவுக்குள் வந்துபோயிட்டு இருக்கும்போது, ஒருநாள் வந்து, இயக்குநர் ஆகணும் அப்படின்னு சொன்னார். அடுத்து உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்து, கிட்டத்தட்ட மூன்று படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்து, அப்புறம் வந்து இந்த கதை எடுத்திருக்கார்.
முதலில் என்கிட்ட வந்து கதை சொன்னார். இந்தப் படத்துக்கு யார் இருந்தால் நல்லாயிருக்கும்ன்னு சொல்லும்போது, எனது நண்பர் பாலாஜி இருந்தால் நல்லாயிருக்கும்ன்னு தோணுச்சு. இன்னிக்கு ஓவர் ஆல் படம் பார்க்கும்போது, நம்ம நண்பர்கள் எல்லாம் சேர்ந்துசெய்திருக்காங்கன்னு ரொம்ப பெருமையாக இருந்தது.
நான் மியூஸிக் டைரக்டராக ஆரம்பிக்கும்போது, பாலாஜி எஃப்.எம்மில் கொடிகட்டிப் பறந்திட்டு இருக்கார். அப்போது இருந்து பழக்கம். சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து நமக்கு நெருக்கமானவங்க குறைவு. அதில் நமக்குப் பிரச்னை என்று பேசக்கூடிய நண்பர்களில் பாலாஜி டாப் லிஸ்ட்டில் இருப்பார். அவரோட பயணத்தைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கு. அவரோட எல்லாப் படங்களும் வணிகரீதியிலான வெற்றி அடைச்சிருக்கு.
அவ்வளவு மெனக்கெடல் போடக்கூடிய மனுஷன். அவருக்கு டிரான்ஸ்ஃபார்ம் ஆகிற படமாக சொர்க்கவாசல் அமையும்’’என்றார், அனிருத்.
டாபிக்ஸ்