சுந்தரபாண்டியன் முதல் விக்ரம் வரை - வில்லனாக கலக்கிய விஜய் சேதுபதி
Jul 24, 2022, 09:59 PM IST
விஜய் சேதுபதி திரையில் வில்லனாக நடித்த படங்கள் ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்ட நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். அபரிமிதமான கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் அவர் உச்சத்திற்குச் சென்றார்.
இதன் மூலம் இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். வில்லன் முதல் காதல் என அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் வில்லன் பாத்திரத்தில் நடிப்பதே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அவர் நடித்த வில்லன் பாத்திரங்கள் குறித்து பார்க்கலாம்...
சுந்தரபாண்டியன்
சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். படத்தின் இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி தோன்றினாலும் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார். வெளியீட்டின் போது அவரது பாத்திரம் அதிக சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அது இறுதியில் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
விக்ரம் வேதா
'விக்ரம் வேதா' என்ற போலீஸ் படத்தில் விஜய் சேதுபதி, வேதாவாக நடித்தார். அவர் இரக்கமற்ற கேங்ஸ்டராக அதில் தோன்றி இருப்பார். மேலும் மாதவனின் கதாபாத்திரத்துடன் அவர் செய்த சண்டை படத்திற்கு நன்றாக அமைந்து இருந்தது.
பேட்ட
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய, 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி எதிரிகளில் ஒருவராக நடித்திருந்தார். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவருக்கு திரை இடம் குறைவாக இருந்தாலும், அவரது பாத்திரம் கவனிக்கப்படாமல் போகவில்லை.
மாஸ்டர்
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்தார். நடிகர் விஜய்யுடன் ஒப்பிடும்போது அவருக்கு ஓரளவு சமமான இடம் இருந்தது. கதாநாயகனுக்கும், எதிரிக்கும் இடையிலான மோதல் அதிசயங்களை உருவாக்கியது. குறிப்பாகப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதிக் கொண்ட விதம் பலத்த வரவேற்பை பெற்றது.
விக்ரம்
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த படம், 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் படத்தில் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி போதைப்பொருள் வியாபாரியாகப் படத்தில் நடித்தார். இதில் அவரின் உடல் மொழி, அசாதாரண நடிப்பு பார்வையாளர்களைத் திகைக்க வைத்தது. இது இன்று வரை அவரது வெற்றிகரமான வில்லன் பாத்திரமாக பார்க்கப்படுகிறது. வில்லனுக்குத் தேவையான அனைத்து அம்சங்கள் இதில் இருந்தது.
டாபிக்ஸ்