எழில் செய்த சேட்டை..தீபிகா வயிற்றில் தங்கிய கரு.. மாதவியாய் மாறிய தீபிகா.. கண்ணகி கயல் செய்தது என்ன?
Oct 17, 2024, 01:56 PM IST
கயல் சீரியலில், கடைசி நேரத்தில் எழில் தன்னை கர்ப்பமாக்கி விட்டதாக, தீபிகா கூறினாள். இதைக்கேட்ட கயல் அதிர்ச்சியில் உறைந்தாள்.
கயல் சீரியலில் இருந்து வெளியான புரோமோவில், “எந்த முயற்சியும் எடுத்தும் வெற்றி காண முடியாத தீபிகா கடைசி முயற்சியாக, கயல் கழுத்தில் எழில் தாலிக்கட்டும் நேரத்தில் வந்து, கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தாள். அனைவரும் அவளது பேச்சை அநாசியமாக கடந்து செல்ல, அவள் என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் பதில் சொல்வது என்று கேட்டாள். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். கயலும் எழிலை சந்தேக பார்வையோடு பார்த்தாள். ” இவை தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?
கயல் சீரியலில், பாம் வைத்திருக்கும் தேங்காவை வடிவும் தர்மலிங்கமும் எவ்வளவோ தேடியும், கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே வெளியே மோதிரம் வாங்க சென்ற மூர்த்தி ஒரு வழியாக வந்த நிலையில், மணமேடைக்கு கயல் வந்தாள்.
அவளுக்கு தான் பரிசாக வாங்கி வந்த கொலுசை போட்டு விட்டான் மூர்த்தி. இதைப் பார்த்ததும் கயல் நெகிழ்ச்சி அடைந்தாள். இதற்கிடையே தயாளன் மூர்த்தியை கொன்றுவிட்டதாக தன்னிடம் கூறிய நிலையில், இங்கு மூர்த்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவசங்கரி, தயாளனுக்கு போன் செய்து மூர்த்தி இங்கு இருக்கிறான் என்று கூறினாள். அதைக் கேட்ட மூர்த்தி நிச்சயமாக அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூற, உங்களுடைய திட்டத்தில் மண்ணை அள்ளிதான் போட வேண்டும். அவன் இங்கு சந்தோஷமாக கயலுடன் இருக்கிறான் என்று கூறினார்.
தாம்பூலத்தில் தேங்காய் பாம்
இதையடுத்து கல்யாணத்தை நிறுத்த அடுத்த கட்ட திட்டத்தை தீட்ட சென்ற தயாளன், வீட்டில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது தீபிகாவின் அழுகை சத்தம் கேட்டது. இதையடுத்து தீபிகாவின் ரூம் அருகே இருந்த ஜன்னலில் பார்த்த பொழுது தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்று கொண்டிருந்தாள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தயாளன் கதவை உடைத்து என்ன காரியம் செய்து விட்டாய்; எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்க, இன்னும் சிறிது நேரத்தில் எழிலை கயல் கல்யாணம் செய்து கொள்வாள். அவள் என்னை ஜெயித்து விடுவாள். என் உயிராகிய எழில் எனக்கு இல்லாமல் ஆகி விடுவான். அப்படி இருக்கும் பொழுது, எனக்கு எதற்கு இந்த வாழ்க்கை என்று நொந்து பேசினாள். இதையடுத்து தயாளன் இன்னொரு திட்டத்தை அவளிடம் சொல்ல, அவள் ஆசுவாசப்பட்டாள். இன்னொரு பக்கம் தேங்காயில் பாம் வைத்த ரவுடி தர்மலிங்கத்திற்கு போன் செய்து, மணமேடையில் இருக்கும் தட்டில் தேங்காய்களை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்க, அவர் மணமேடையில் உள்ள தேங்காய்களை உற்று நோக்குகிறார், அத்தோடு எபிசோட் முடிவடைந்தது.
டாபிக்ஸ்