தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திருமணம் முடிந்த கையோடு நடக்கும் அபசகுணங்கள்.. கயலை கவலைக்கு தள்ளும் சம்பவங்கள்.. என்ன ஆனது மூர்த்திக்கு?

திருமணம் முடிந்த கையோடு நடக்கும் அபசகுணங்கள்.. கயலை கவலைக்கு தள்ளும் சம்பவங்கள்.. என்ன ஆனது மூர்த்திக்கு?

Oct 21, 2024, 07:26 AM IST

google News
திருமணம் முடிந்து கயல் வீட்டிற்கு வந்த நிலையில், அங்கு பூஜை அறையில் குங்குமம் தவறி கொட்டி விழந்ததை நினைத்து கயல் மனதிற்குள் ஏதோ கவலை தோன்றியுள்ளது.
திருமணம் முடிந்து கயல் வீட்டிற்கு வந்த நிலையில், அங்கு பூஜை அறையில் குங்குமம் தவறி கொட்டி விழந்ததை நினைத்து கயல் மனதிற்குள் ஏதோ கவலை தோன்றியுள்ளது.

திருமணம் முடிந்து கயல் வீட்டிற்கு வந்த நிலையில், அங்கு பூஜை அறையில் குங்குமம் தவறி கொட்டி விழந்ததை நினைத்து கயல் மனதிற்குள் ஏதோ கவலை தோன்றியுள்ளது.

குடும்பங்கள் சூழ எந்தவொரு கெட்ட எண்ணங்களும் இல்லாமல் முழு மனதுடன் அனைவரும் கயலின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என அவரது தாயார் காமாட்சி ஆசைப்பட்டார்.

அவரின் ஆசையை நிறைவேற்ற கயல் பெரும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக கயலின் திருமணத்தை நிறுத்த துடித்த அவரது அத்தை. பெரியப்பா, பெரியம்மா என பலரும் திருந்தி, கயலின் திருமணத்தை முழு மனதாக ஏற்று நடத்த தயாராகினர்.

திருமணம் செய்ய மறுத்த கயல்

இந்த நிலையில் தான், அண்ணன் மூர்த்தி இல்லாமல் திருமண மேடை ஏறமாட்டேன் என கயல் அடம் பிடித்துள்ளார். இப்படி திருமண நிகழ்ச்சியில் பலரும் கயலின் அண்ணனை எதிர்பார்த்திருக்க அவரோ ரவுடிகளின் பிடியில் சிக்கி கத்தி குத்து வாங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின், அந்த வழியாக வந்த பெண்களின் உதவியால் உயிர் பிழைத்து வந்து ஆசை ஆசையாய் தங்கையின் திருமணத்தை காண தயாரானார்.

தீபிகாவின் நாடகம்

ஆனால், அதற்குள் எழில் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றுவதாக நாடகமாடி தீபிகா தற்கொலைக்கு முயற்சி செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின், போலீஸ் வந்து தீபிகாவை அழைத்து சென்றவுடன், கயல்- எழில் திருமணம் இனிதே நடந்தது.

நீடிக்காத சந்தோஷம்

இதனால், கயலின் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றனர். ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நேரத்திற்கு நீடிக்காமலே போனது. காரணம் கத்திக் குத்து வாங்கிய மூர்த்தியின் உடல்நிலை மேலும் மோசமாக மாறியது. இதனால், இவர் திருமணம் முடிந்த கையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறு வீட்டிற்கு வந்த கயலுக்கு அதிர்ச்சி

இதை அறிந்தால், கயலின் மனம் மிகவும் கஷ்டமடையும் என எண்ணி அவரிடம் குடும்பத்தினர் இந்த விஷயத்தை மறைக்கின்றனர். ஆனால், திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்த கயல், வீட்டில் ஏதோ சில விஷயங்கள் தவறாக நடப்பதை யூகித்தார். ஆனால், அதுகுறித்து எதுவும் புரியாமல் தவித்து வரும் நிலையில், பூஜை அறையில் கயலின் அண்ணி குங்குமத்தை எடுத்த போது அது தவறி கீழே சிந்தி, அபசகுண அறிகுறியை காட்டியது.

தொடர்ந்து எழும் கவலை

பின் எழிலுடன் அமர்ந்திருந்த கயல் அவர் அண்ணியிடம் நெற்றியில் பொட்டு, குங்குமம் எதுவும் இல்லாமல் இருக்கிறீர்களே? என விசாரிக்க அவர் செய்வது அறியாது தவிக்கிறார்.

என்னதான் திருமணம் முடிந்த சந்தோஷத்திஸ் கயல் இருந்தாலும், வீட்டிற்கு வந்ததில் இருந்து அண்ணன் மூர்த்தியை காணாததால் அவர் மனதிற்குள் ஏதோ கவலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மூர்த்தி எங்கே போனார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என கயல் மனதில் பல குழப்பங்கள் இருக்கிறது.

அந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்குமா? கயலின் அண்ணன் மூர்த்தி உயிர் பிழைப்பாரா என இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி