ரவுடிகளின் பிடியில் மூர்த்தி.. அண்ணன் வராமல் கல்யாண மேடைக்குப் போகாத கயல்.. கயல் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன?
Oct 11, 2024, 10:18 AM IST
ரவுடிகளின் பிடியில் மூர்த்தி.. அண்ணன் வராமல் கல்யாண மேடைக்குப் போகாத கயல்.. கயல் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பேசுவோம்.
கயல் சீரியல் சன் டிவியில் இரவு 7:30 மணிக்கு, திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கயல் சீரியலின் புரோமோ வெளியாகி, கயலுக்குத் திருமணம் நடக்குமா நடக்காதா என மீண்டும் விரல் கடிக்க வைத்து இருக்கிறது.
கயல் சீரியலின் இன்றைய புரோமோ:
கயல் சீரியலில் இன்றைய புரோமோவில் கயலின் பெரியப்பா, அவரது மனைவியிடம், ‘இனிமேலும் நாம அவரை டார்ச்சர் பண்ணக்கூடாது. கயலின் கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்’ என்கிறார். இதைக்கேட்டு கயலின் பெரியம்மா ஷாக் ஆகிறார்.
இதற்கிடையே ரவுடி கும்பல் கயலின் அண்ணன் மூர்த்தியைக் கடத்தி, கத்தியால் குத்திக் கொல்லப் பார்க்கிறது. இந்நிலையில் மூர்த்தி,’ டேய் என் தங்கச்சிக்கு கல்யாணம்டா. விடுங்கடா’ என தன்னைப் பிடித்து கொல்ல முயற்சிக்கும் ரவுடிகளிடம் கெஞ்சுகிறார்.
இதற்கிடையே கல்யாண முகூர்த்தம் நேரம் நெருங்க, கயலை மணமேடைக்கு அழைக்கிறார்கள். அப்போது, கயல் தனது அண்ணன் மூர்த்தி வந்தால் தான் வருவேன் எனத் திட்டவட்டமாக மறுத்து, பெண்ணின் அறையிலேயே இருக்கிறார். இதனால் கயலின் தாய், அண்ணி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியாகின்றனர்.
கயல் சீரியலின் நேற்றைய எபிசோட்:
கயலின் திருமணத்தை நிறுத்த கல்யாண விருந்தில் பூச்சி மருந்தை கலக்க நினைத்து கையும் களவுமாக சிக்கியுள்ளார் கயல் பெரியப்பா. தான் செய்தது தவறு என்பதை துளியும் உணராமல் தன் பக்கத்து நியாயத்தை மிகவும் ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவர் கயலிடம் சிக்கிக் கொள்கின்றனர். ஆனால், கயல், தனது பெரியப்பாவை தாக்கியதற்காக டேனியலை மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார். இதைத்தொடர்ந்து ஏன் இவ்வாறு செய்தீர்கள் எனக்கேட்கிறார், கயல்.
இதுதான் சமயம் எனக் கூறி கயலின் பெரியம்மா, உண்மையை கயலிடம் கூறுமாறு வலியுறுத்துகிறார். அப்போது, தன் மனதில் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த வன்மத்தை கயலிடம் கொட்டித் தீர்த்தார்.
கயல் மீதான வன்மத்தைக் கக்கிய பெரியப்பா:
அப்போது பேசிய கயல் உடைய பெரியப்பா, ‘’ நீ என்னை மதிக்காமல் சுற்றி வந்தாய். நீ என்னை பொது சபையில் வைத்து அவமானப்படுத்தி வருவதை வழக்கமாய் வைத்துள்ளாய். நீ என்னை மட்டம் தட்டும்போதொல்லாம் கோபத்திற்கு ஆளாகி, மொத்த குடும்பத்தையும் அழிக்க நினைத்தேன்.
நான் உன்னால் அடிபட்ட பாம்பு. கொடிய பாம்பு. எப்படி பழிவாங்காமல் இருப்பேன், என் மகனை போலீஸ் ஆக்க நினைத்தேன், என் பெண்ணை எழிலுக்கு கட்டி வைக்க நினைத்தேன்.
நான் சந்தோஷமாக இல்லாதபோது உன் சந்தோஷத்தை நான் கொண்டாட விடுவேனா?. நான் என்றும் உனக்கு மேலாகத்தான் இருப்பேன். நீ என் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்க வேண்டும். என்னை எதிர்த்து எதுவும் பேசாமலும், செய்யாமலும் இருக்க வேண்டும். அது எல்லாம் உன்னால் முடியுமா? எனக் கேட்டு தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார்.
இவை அத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கயல், தனது பெரியப்பாவின் கையை பிடித்து இழுத்து தரதரவென திருமணம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
தன் குணத்துக்கு இதுதான் காரணம் எனக் கூறிய கயல்:
அப்போது பலர் முன்னிலையில் பேசிய கயல், ‘’என் குடும்பத்தை யாரும் ஏமாற்றக்கூடாது என நினைத்து மிக திமிராக நடந்துகொண்டேன்.
இதை புரியாமல் என் வீட்டில் உள்ளவர் என்னை ஹிட்லர், சண்டைக்காரி என பேசினர். சிறு வயதிலிருந்தே என் குடும்பத்தை அழிக்க வந்தவர்கள் தான் என் பெரியப்பா பெரியம்மா என நினைத்தேன். அதற்கு காரணமும் அவர்கள் தான்’’ எனக் கூறி மண்டபத்தில் உள்ள அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இதனால், கயலின் பெரியப்பாவும் பெரியம்மாவும் ஊரார் முன் தன் மானம் மொத்தமும் போகப்போவதாக எண்ணினர்.
பின் கயல் அவரது பெரியப்பாவிடம் மன்னிப்புக் கோரினார். அப்போது பேசிய கயல், ’’தான் அவரை புரிந்து கொள்ளாமல் நடந்து வந்துள்ளேன். இந்த சபையில் வைத்து இவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கப்போகிறேன்’’ என்கிறார்.
இந்நிலையில் கயலின் பேச்சைக்கேட்டு, எமோஷனலாக நிற்கின்றனர், அவரது பெரியப்பாவும் பெரியம்மாவும்!
இந்நிலையில் இன்றைய நாளில் அவர் என்னசெய்யப்போகிறார். கயலின் திருமணம் நல்லவிதமாக நடந்ததா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டாபிக்ஸ்