துள்ளாத மனமும் துள்ளும் ஏற்படுத்தின தாக்கம்..யாரும் திட்டுவாங்கன்னு கிடைச்ச அட்வைஸ்.. மிஸ் யூ படவிழாவில் கார்த்தி பேச்சு
Nov 23, 2024, 11:10 PM IST
துள்ளாத மனமும் துள்ளும் ஏற்படுத்தின தாக்கம்..யாரும் திட்டுவாங்கன்னு கிடைச்ச அட்வைஸ்.. மிஸ் யூ படவிழாவில் கார்த்தி சித்தார்த் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சித்தார்த் நடிக்கும்‘மிஸ் யூ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, நடிகர் சித்தார்த் உடனான நட்பினை ஜாலியாகப் பகிர்ந்துகொண்டார்.
நடிகர் கார்த்தி மேடையில் பேசியதாவது, ‘’ மிஸ் யூ படக்குழுவினருக்கு வணக்கம். இங்கே உள்ளே வந்து உட்கார்ந்து இரண்டு நிமிடங்கள் தான் இருக்கும். எனக்கு உதவி இயக்குநராக இருந்த நினைவுகள் எல்லாம் வந்தது.
ஏனென்றால், சித்தார்த் ’ஆயுத எழுத்து’ முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாயின்ட் செய்தான். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் சூட் செய்துகொண்டு இருந்தோம். அவன் அங்கு இருக்கிற எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக்கொடுத்திட்டு இருக்கான். பேக் கிரவுண்ட் செட் பண்ணிட்டு இருக்கான். மணி சார், பொறுக்கமுடியாம, அவனை நடிக்கமட்டும் சொல்லுங்கடான்னு சொல்றாரு.
இங்கே வந்தும் பார்க்கிறேன். அதே வேலை நடந்திட்டு இருக்கு. கரெக்ட்டாக ஆன் பண்ணுங்க. லைட்டை இந்தப் பக்கம் திருப்புங்க. டோரை க்ளோஸ் பண்ணுங்கன்னு ஃபுல் டைரக்ஷன்னு போய்ட்டு இருக்கு. டேய் நீ அமைதியாக இருடா. ஆக, சித்தார்த் வந்து அப்படி தான் எனக்குப் பழக்கம்.
சினிமாவில் யார் வேண்டுமென்றாலும் திட்டுவாங்கன்னு சொன்னது சித்தார்த் தான் - நடிகர் கார்த்தி:
நான் சினிமா கத்துக்கிட்ட ஸ்கூலில் சித்தார்த் எனக்கு சீனியர். ஒரு நாள் வந்தார். தோளில் கை போட்டு, ’மச்சான் சினிமா அப்படி தான் இருக்கும். உதவி இயக்குநராக வேலை பார்க்கிறது கஷ்டமான வேலை. யார் வேணும்ன்னாலும் திட்டுவாங்கடா. போகப்போக அப்படியே பழகிடும்ன்னு’ சொன்னான், சித்தார்த். இப்படி தான் சினிமாவை அறிமுகப்படுத்திவிட்டான்.
நான் சினிமா குடும்பம்ன்னு சொல்லுவாங்க. அப்படி சொல்லாட்டாலும் அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு, படிச்சிட்டு இங்கே சினிமா கத்துக்கிற வந்தது. சித்தார்த், மிலிந்த், சுதா எல்லோரும் ஒரே நேரத்தில் மணி சார்கிட்ட உதவி இயக்குநராக இருந்தோம்.
சினிமா பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சு இருந்த விஷயங்கள், சினிமா பத்தி அவங்க பேசுற விஷயங்கள் எல்லாம் பார்க்கும்போது, மறுபடியும் நாம் கடைசி பெஞ்ச் தான் போல் இருக்கு. இங்கெல்லாம் இவ்வளவு தெரிஞ்சு வைச்சிருக்காங்களே, தெரியாம வந்திட்டோம்மேன்னு தோணுச்சு. அது நிறைய படிக்கணும் இன்ஸ்பிரேஷனாகவும் இருந்துச்சு. சினிமா பார்த்தால் மட்டும் பத்தாது, சினிமா எடுக்கணும் என்றால் நிறைய படிக்கணும் நிறைய தெரிஞ்சுக்கணும்ன்னு இவங்களுடைய உரையாடல் பார்த்து கத்துக்கிட்டது தான்.
மிஸ் யூ படத்தைப் பொறுத்தவரை, பசங்க லவ் யூ.. மிஸ் யூன்னு தான் சொல்வாங்க. அதில் பெரும்பாலும் பயன்படுத்தும் மிஸ் யூவை படத்தோட டைட்டிலாக வைச்சிட்டீங்க. இங்கு வந்து பசங்க போடுற போஸ்ட் எல்லாமே லவ் போஸ்ட்டாக தான் இருக்கு. ஆனால், நாம் ஆக்ஷன் படமாக எடுத்திட்டு இருக்கோம்.
லவ் படத்துக்கு பெரிய ஆடியன்ஸ் இருக்கு: நடிகர் கார்த்தி
எனக்கு விஜய் சார் படத்தில் துள்ளாத மனமும் துள்ளும் ரொம்பப் பிடிக்கும். அதில் இருக்கும் பாடல்கள், அதில் இருக்கும் மூவ்மென்ட்ஸ் ஆகட்டும். லவ்வை சுத்தியிருக்கிற விஷயங்கள் நம்மை சந்தோஷப்படுத்திறமாதிரியே இருக்கும். இப்பவுமே லவ் படம் எடுத்தால் பார்க்கிறதுக்கு பெரிய ஆடியன்ஸ் இருக்காங்க. ஆனால், நாம் அதை எடுக்கிறதே கிடையாது.
பாய்ஸ் சித்தார்த் என்பதால், அவர் மட்டும் லவ் படத்தில் நடிச்சிட்டு இருக்கார். பார்க்கிறப்போ அப்படியே இருக்கிறது, அவருக்கு வசதியாக இருக்கு. ஜோக்ஸ் அபார்ட் மச்சி, சூப்பரா ஆடிட்டடா. கேமராவுக்குப் பின்னாடி இருக்கிற ஜோக் எல்லாம் சினிமாவிலேயே வைச்சிடுறீங்க.
தினேஷ் மாஸ்டருடைய கொரியோகிராபி ரொம்ப சூப்பராக இருந்துச்சு. நாம் காலேஜ் படிக்கும்போது, என்ஜாய் செய்யிற சிம்பிளிசிட்டியோட, உள்ளே ஏதோ ஒன்னு இருக்குன்றது தெரியுது. சித்தார்த் சும்மா எல்லாம் ஒத்துக்க மாட்டான். இந்தப் படம் படக்குழுவினருக்கு பெரிய வெற்றிப் படமாக இருக்கணும்ன்னு வேண்டிக்கிறேன்’’எனப் பேசி முடித்தார், நடிகர் கார்த்தி.
டாபிக்ஸ்