தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஓடிடி பக்கம் கவனத்தை திருப்பும் கங்குவா குழு.. எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

ஓடிடி பக்கம் கவனத்தை திருப்பும் கங்குவா குழு.. எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

Nov 17, 2024, 09:46 AM IST

google News
தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் கங்குவா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் கங்குவா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் கங்குவா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், மிகப்பெரிய பீரியட் ஆக்சன் படமாக உருவாகி ரிலீஸாகியிருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி படத்தின் நாயகியாக நடித்திருந்தார். அனிமல் படத்தின் வில்லன் நடிகர் பாபி தியோல், ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் பேனர்களில் கே.இ.ஞானவேல் ராஜா, வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் கூட்டாக கங்குவா திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 35 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

2ம் பாகத்தில் முக்கிய நடிகை

ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் 2ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

80 கோடிக்கு விலை போன கங்குவா

கங்குவா திரைப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், கங்குவா திரைப்படம் வரும் டிசம்பர் மாதத்தின் 2 அல்லது 3ம் வாரத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக சரிந்த வசூல்

கங்குவாவால் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்ட முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசி இருந்தார். இந்நிலையில், படம் எதிர்பார்த்த வசூலைப் பெறுவதில் சிக்கலாகி உள்ளது.

ஓவர் ஹைப்புக்கு முடிவு கட்டிய ரசிகர்கள்

சூர்யா கதாநாயகனாக நடித்து கடந்த 2 வருடங்களாக எந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கங்குவா படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு தகுந்தாற்போல, கங்குவா தமிழில் உருவான பாகுபலி, மக்கள் விரும்பி பார்த்த பல ஹாலிவுட் வெப் சீரிஸ், படங்களைப் போல இந்தப் படமும் மக்களுக்கு பிடித்த பேன்டஸி படமாக இருக்கும் என புரொமோஷன் போகும் இடங்களில் எல்லாம் பேசி வந்தனர்.

ஆனால், படத்தைக் காண சென்ற ரசிகர்கள், கதை புரியவில்லை, சூர்யாவின் கெரியர் இந்தப் படத்தோடு முடிந்து விட்டது, படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள், படத்தின் சத்தம் இரைச்சலாக உள்ளது. இது தலைவலியை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸில் கார்த்தி வரும் காட்சிகளைத் தவிர படத்தில் ஒன்றும் இல்லை என பல்வேறு நெகட்டிவ் கமெண்்டுகளை வெளிப்படுத்தி வந்தனர்.

ஓடிடி பக்கம் கவனம் செலுத்தும் படக்குழு

இதனால், அடுத்தடுத்த நாட்களில் கங்குவா படத்தை பார்க்க செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இதனால், முதல் நாள் வசூலில் பாதியைக் கூட 2ம் நாளில் பெறமுடியாமல் திணறியது கங்குவா. இதைத் தொடர்ந்து படத்தின் சத்தத்தை குறைக்க தியேட்டர்களுக்கு அறிவுறுத்தியதாக படக்குழு தெரிவித்தது.

இந்த நிலையில் தான், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெறுவது கடினம் எனக் கூறி, படத்தை ஓடிடியில் விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு படம் ரிலீஸாகி 28 நாட்களைக் கடந்திருந்தால் அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்ற நிலை இருப்பதால் கங்குவா டிசம்பர் மாத மத்தியில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி