தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “அம்பேத்கர் டூ வேலு நாச்சியார் வரை”.. த.வெ.க கட்சிக்கு ஏன் இந்த 5 தலைவர்கள்!-முழு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்ட விஜய்!

“அம்பேத்கர் டூ வேலு நாச்சியார் வரை”.. த.வெ.க கட்சிக்கு ஏன் இந்த 5 தலைவர்கள்!-முழு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்ட விஜய்!

Oct 28, 2024, 04:16 PM IST

google News
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், அஞ்சலை, வேலு நாச்சியார், காமராஜ் ஆகியோரை தேர்ந்தெடுத்ததிற்கான காரணத்தை விஜய் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், அஞ்சலை, வேலு நாச்சியார், காமராஜ் ஆகியோரை தேர்ந்தெடுத்ததிற்கான காரணத்தை விஜய் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், அஞ்சலை, வேலு நாச்சியார், காமராஜ் ஆகியோரை தேர்ந்தெடுத்ததிற்கான காரணத்தை விஜய் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

பிரபல நடிகரான விஜய், தன் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் தன் கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு 5 தலைவர்களை முன்னுதாரணமாக பார்ப்பதாக அறிவித்தார். அந்த 5 தலைவர்களை அவர் தேர்ந்தெடுத்திற்கான காரணத்தை தற்போது அவர் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியல்ல ஜெயிக்கணும்னா பலமான முதல் சக்தியா, முதன்மை சக்தியா இருக்கணும்... அதுக்கு நல்ல கொள்கைகள் தேவை... ஏன்னா கொள்கைகள்தான் அரசியலுக்கான வலிமை, ஒழுக்கம் எல்லாமே...

அப்படியான அரசியல் பயணத்துக்கு நாம யார துணையாவும் வழிகாட்டியாவும் எடுத்துக்கணும்கிறதுல ஒரு நல்ல தெளிவும் புரிதலும் இருக்கணும்...

அந்தத் தெளிவோட புரிதலோட நாம தேர்ந்தெடுத்த நமது கொள்கைத் தலைவர்கள்தான்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

பச்சைத் தமிழன் பெருந்தலைவர் காமராஜர்

ராணி வேலு நாச்சியார்

மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்

இவங்க அஞ்சு பேரும் எப்படி நம்ம கொள்கைத் தலைவர்களா ஆனாங்க?... எந்த அடிப்படையில ஆனாங்க?…

தந்தை பெரியார்...

பெரியார்னாலே கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும்தான்னு ஒருசிலர் இங்க அப்டி ஒரு பிம்பத்த கட்டமைச்சிட்டாங்க...

நாங்க யாரோட கடவுள் நம்பிக்கையையும் எப்பவும் உதாசீனப்படுத்தவே மாட்டோம்... அதே சமயத்துல எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டுங்கறதையும் தெளிவா இப்பவே அறிவிக்கிறோம்…சர்வ மதப் பாதுகாப்புக்கும், சமய நம்பிக்கைகளுக்கும் அரணா இருக்கிறதுதான் எங்களோட சமரசமற்ற அடிப்படையான. ஆழமான நிலைப்பாடு...

பெண் விடுதலை, பெண் கல்வி. பெண்கள் முன்னேற்றம். சமுதாயச் சீர்திருத்தம். சமூக நீதி போன்ற கொள்கைகள் முன்னெடுத்துச் சென்ற காரணத்துக்காகவே தந்தை பெரியார் எங்களோட அரசியல் வழிகாட்டி மற்றும் கொள்கைத் தலைவரா ஏற்க முடிவு செஞ்சோம்...

எங்களோட அடுத்த கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர்...

கல்விக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் அந்தக் காலத்துலயே யோசிச்ச உத்தமர் காமராஜர்...

மதச்சார்பின்மை இந்த மண்ணுல ஆழமா விதைச்சதுல அவருக்கும் பெரிய பங்கு உண்டு… இன்னைக்கும் நேர்மையான நிர்வாகச் செயல்திறனுக்கு... இங்க நீடிச்சு நிலைச்சு ஒற்றை உதாரணமா நிக்கற ஒரே தலைவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டும்தான்.…

அதனால பெருந்தலைவர் காமராஜர நம்மளோட நிர்வாகச் செயல்முறைச் சித்தாந்தத்திற்கான சிற்பி, வழிகாட்டின்னு தலைநிமிர்ந்து பெருமையோட அறிவிக்கிறோம்…

அம்பேத்கர்...

நமது அடுத்த கொள்கைத் தலைவர்…இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கிக் காட்டிய சட்ட மேதை அண்ணல்

சமூக நீதி, சமநீதி, சம வாய்ப்பு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இவை எல்லாத்தையும் தன்னோட மூளையிலயும் செயல்லயும் சுமந்து நின்ன அவர எங்களோட கொள்கை மற்றும் வழிகாட்டித் தலைவரா ஏற்பதை இன்முகத்தோடும் இறுமாப்போடும் அறிவிக்கிறோம்....

ராணி வேலு நாச்சியார்...

எங்களின் ஆகப்பெரும் அடுத்த வழிகாட்டி... இந்தத் தமிழ்ப் பெருநிலத்தின் சிவகங்கைப் பகுதியைக் கட்டி ஆண்ட மாபெரும் பேரரசி, பெண்ணரசி

தன்னோட கணவர இழந்த பிறகும்கூட கைம்பெண்ணா வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்காம வாளேந்தியும், வேலேந்தியும் இந்த மண்ணைக் காக்கப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர்.... இந்தியாவோட முதல் விடுதலைப் பெண் போராளிதான் நம்ம வேலு நாச்சியார்... நாடாண்ட தமிழ்ச்சி…எதிரி எவ்ளோ வலிமையா இருந்தாலும், சரியான நேரம் பார்த்து இறங்கி அடிச்சா யாரா இருந்தாலும் ஜெயிக்கலாம்கறத அர்த்தத்தோட சொன்னதுதான் அவங்க வாழ்க்கை....

எல்லாச் சமூகங்களோடவும் இணக்கமா இருந்தது. மட்டுமில்லாம அந்தக் காலத்திலேயே இஸ்லாமிய சகோதரர்களோடவும் நல்லிணக்கத்தோட இருந்தாங்க.. அதனால் அவர்களையும் நாம் நம் கட்சியின் கொள்கைத் தலைவரா ஏத்துக்குறோம்.

அஞ்சலை

முன்னேறத் துடிக்கிற சமூகத்தில் பிறந்து இந்த மண்ணும் இருக்கிற ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்கும் சித்தமா இருந்து உழைச்ச உன்னதமான போராளியான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாளைத்தான் நம்முடைய இன்னொரு வழிகாட்டியா நாம தேர்ந்தெடுத்திருக்கிறோம்....

நிறைமாத கர்ப்பிணியா இருந்தப்பவே கொஞ்சம்கூட யோசிக்காமலும், பயமில்லாமலும் போராட்டத்துல கலந்துக்கிட்டு கைதானவங்க... பரோல்ல வெளிவந்து குழந்த பெத்துக்கிட்டு அதுக்கப்றமும் கைக்குழந்தையோட கெத்தா சிரிச்சுக்கிட்டே மீண்டும் சிறைக்குப் போன ஒரு சூப்பர் ஸ்டார்தான் நம்ம அஞ்சலை; சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவங், மகாத்மா காந்தி, மகாகணி பாரதி, பெரியார்னு எல்லாப் பெரியவங்களாலயும் பாராட்டப்பட்ட நம்ம தமிழகத்தோட கங்கமற்ற குலவிளக்கு.” இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி