தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  John Vijay Harassment: ஜான் விஜய்யின் தவறான..ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்த பாடகி சின்மயி

John Vijay Harassment: ஜான் விஜய்யின் தவறான..ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்த பாடகி சின்மயி

Jul 28, 2024, 05:29 PM IST

google News
மீண்டும் பெண்களிடம் மோசமான நடத்தை வெளிப்படுத்தியதாக பிரபல குணச்சித்திரம், வில்லன் நடிகரான ஜான் விஜய் மீது புகார் கூறியுள்ளார் பாடகி சின்மயி. ஜான் விஜய்யின் தவறான நடத்தை குறித்த ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மீண்டும் பெண்களிடம் மோசமான நடத்தை வெளிப்படுத்தியதாக பிரபல குணச்சித்திரம், வில்லன் நடிகரான ஜான் விஜய் மீது புகார் கூறியுள்ளார் பாடகி சின்மயி. ஜான் விஜய்யின் தவறான நடத்தை குறித்த ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் பெண்களிடம் மோசமான நடத்தை வெளிப்படுத்தியதாக பிரபல குணச்சித்திரம், வில்லன் நடிகரான ஜான் விஜய் மீது புகார் கூறியுள்ளார் பாடகி சின்மயி. ஜான் விஜய்யின் தவறான நடத்தை குறித்த ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஜான் விஜய். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இவர் முக்கியத்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் பெண் ஒருவரிடம் தவறான நடத்தை வெளிப்படுத்தியதாக பாடகி சின்மிய கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் புகார் கூறியதாகவும், ஜான் விஜய் தவறான நடத்தை வெளிப்படுத்தியது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களுடன் கூடிய ஆதாரத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் சின்மயி பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஜான் விஜய் தவறான நடத்தை

கடந்த சில நாள்களுக்கு முன்னர், 2017ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகைக்கு துன்புறுத்தல் தந்த திலீப் வழக்கு தொடர்பாக பிரபல ஊடகத்தின் நிருபர் ஜான் விஜய்யிடம் பேட்டிக்காக காத்திருந்த போது, தன்னிடம் அவர் தவறான நடத்தை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக ஸ்கிரீன்ஷாட்டை சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், பாலியல் ஆர்வம் இருப்பது போல் நடத்தை வெளிப்படுத்தி, பணியிடங்கள், பப்கள், ரெஸ்ட்ராண்ட்களில் அசெளகரியமாக உணர வைத்தாக பாதிப்பாட்ட பெண்கள் இதுவரை ஜான் விஜய் நடத்தை தொடர்பாக பகிர்ந்த பதிவுகளையும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவுகளில் பகிர்ந்த கையோடு, "மலையாள சினிமாவின் பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றிய செய்தி சேகரிப்பின்போது ஜான் விஜய் பெண் நிருபரிடம் தவறான நடத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடத்தை பற்றி மற்ற பெண்களும் பேசியுள்ளார்கள். இவர்களின் ஒருவர் ஜான் விஜய்யிடம் கேமராவில் பேட்டி கண்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.

ஜான் விஜய் மீது மீடு புகார்

கடந்த 2018இல், #MeToo இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​நடிகர் ஜான் விஜய் மீதும் பலரால் குற்றம் சாட்டப்பட்டது. னார்கள். VJ, RJ மற்றும் பாடகி ஸ்ரீரஞ்சனி அவரது மேசமான நடத்தை குறித்து வெளிப்படுத்தினார். பாடகி பேசியதற்கு நன்றி தெரிவித்த சின்மயி, “உங்களது பேச்சுக்கு நன்றி ஸ்ரீரஞ்சினி. கடந்த வாரம் நீங்கள் சந்தித்த மோசமான நிகழ்வை என்னுடன் பகிர்ந்துள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஜான் விஜய்யால் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவங்களை மூன்று பெண்கள் என்னிடம் கூறியுள்ளார்கள். பெண்களின் வலிமையை கண்டறிய வேண்டும். எனவே பேசுங்கள். அவர் உங்கள் அப்பாவுடன் நட்பாக இருந்தாலும் பரவாயில்லை" என கூறியுள்ளார்.

 

ஜான் விஜய் விளக்கம்

சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஜான் இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும், அவர் 2018இல் தன் மீதான குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோரினார். அப்போது, "நான் மிகவும் வெளிப்படையான நபர், மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவேன். எந்த உள்நோக்கமும் அதில் இருக்காது. சில சமயங்களில் எனது நகைச்சுவைகள் அனைவருக்கும் வேடிக்கையாக இருக்காது மற்றும் உணர்ச்சியற்றதாக இருக்கலாம் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

நான் சொல்வதை யாரோ ஒருவர் பாராட்டவில்லை, நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை உணர்ந்தால், தொடர்ந்து அவர்களிடம் பேசுவதையோ அந்த இடத்தில் இருப்பதையோ தவிர்ப்பேன்.

எக்ஸ் பக்கித்தில் மேற்கோள் காட்டப்பட்ட சம்பவங்கள் எனக்கு நினைவில் இல்லை, நான் இந்த நபர்களை எங்கும் தனியாக சந்திக்கவில்லை. வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் நான் கருதிய எனது கருத்துக்கள், எந்த நேரத்திலும் யாரையும் புண்படுத்தியிருக்கும் என்றால், எனது நடத்தையால் நானும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரிடம், எப்போது என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிய இதுவே எனது பாடமாக இருக்கும். இந்த #metoo இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். என்னை உள்ளே இழுக்காமல் இருந்திருந்தால், முதல் ஆளாக குரல் கொடுத்து, இந்த இயக்கத்தை ஆதரித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்." என்றார்.

ஜான் விஜய் படங்கள்

ஜான் விஜய் நடிப்பில் இந்த ஆண்டில், சிங்கப்பூர் சலூன், வடுகப்பட்டி ராமசாமி, வித்தைக்காரன், போர், பயமரியா பிரம்மை ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மலையாளத்தில் தங்கமணி, தெலுங்கில் படங்களான சாலார்: பார்ட் 1 படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி