Jayam Ravi: மனைவி ஆபரேஷனால் தியேட்டருக்குள்ளே மயங்கி விழுந்த ஜெயம் ரவி; மாமியார் விட்ட பளார் அறை -பிரசவக்கதை!
May 02, 2023, 06:30 AM IST
முதல் குழந்தை பிறக்கும் பொழுது ரவி என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தார் ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு குழந்தை கொஞ்சம் சீக்கிரமாகவே பிறந்து விட்டது. அந்த சமயத்தில் ரவி ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்காக பாரீஸில் இருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகமானது 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கும் நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 உலக அளவில் 200 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்திருந்த ஜெயம் ரவியின் நிதானமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படம் தொடர்பாக ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கலாட்டா தமிழுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி முதல் மகனை பெற்றெடுத்த போது ரவி அருகில் இல்லாதது குறித்து பேசினார்.
இதோ அவரது பேட்டி!
முதல் குழந்தை பிறக்கும் பொழுது ரவி என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தார்; ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு குழந்தை கொஞ்சம் சீக்கிரமாகவே பிறந்து விட்டது. அந்த சமயத்தில் ரவி எங்கேயும் எப்போதும் படத்திற்காக பாரீஸில் இருந்தார். ஆகையால் முதல் குழந்தை ஆரவ் அப்பா அருகில் இல்லாமல் பிறந்தான்.
நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை ரவி அருகில் இருந்து அப்படி பார்த்துக் கொண்டார். நான் வாந்தி எடுக்கும் பொழுது அதை கையில் ஏந்தினான். இரவில் நான் எழுந்து இதை ந்சாப்பிட வேண்டும் அதை சாப்பிட வேண்டும் என்று சொல்லும் போது கூட அவர் எழுந்து வருவார். கணவராக அவருக்கு நான் 100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுப்பேன்.” என்று பேசினார்.
ஜெயம் ரவி பேசும் போது, “முதல் குழந்தை பிறந்த போது என்னால் அருகில் இருக்க முடியவில்லை. அவளுக்கு பிரசவ வலி வந்தவுடன் எனது அப்பா தான் ஒவ்வொன்றாக எனக்கு போனில் அப்டேட் செய்து கொண்டிருந்தார். நான் பதட்டப்பட்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் குழந்தை பிறந்து விட்டது என்றார்; நான் உடனே குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்கவில்லை;ஆர்த்தி எப்படி இருக்கிறாள் என்று தான் கேட்டேன்.
ஆர்த்திக்கு அறுவை சிகிச்சை மூலமாகத்தான் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த போது நான் உடன் இருந்தேன். அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் என்னையும் அனுமதித்து இருந்தார்கள். அவள் சுயநினைவை இழந்த உடனே எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அதன் பிறகு கத்தியை வயிற்றில் மருத்துவர்கள் வைத்தார்கள் அதை பார்த்த உடனேயே நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பிறகு நான் அருகில் சென்று ஏதோ எனக்கு அறுவை சிகிச்சை செய்தது போல உட்கார்ந்து இருந்தேன். அப்போது என்னுடைய மாமியார் என்னை ஓங்கி அறைந்தார். அதன் பின்னர் அந்த மயக்கத்தில் இருந்து எழுந்து வந்து குழந்தையை பார்த்தேன்.” என்றார்.
டாபிக்ஸ்