தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Movie: பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜெயிலர் திரைப்படம்; கொந்தளித்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா?

Jailer movie: பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜெயிலர் திரைப்படம்; கொந்தளித்த ரசிகர்கள்! - காரணம் என்ன தெரியுமா?

Aug 13, 2023, 07:47 PM IST

google News
ஜெயிலர் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் திரையரங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜெயிலர் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் திரையரங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜெயிலர் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் திரையரங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியான  ‘ஜெயிலர்’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்றைய தினம் வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டது. திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து குடும்பத்துடன் படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்க நிர்வாகிகளுடன்  திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னதாக நெல்சன் விஜயை வைத்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்தப்படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. ரஜினிக்கும் அவரின் கடந்த சில திரைப்படங்கள் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் இந்தத்திரைப்படம் ஒரு கம் பேக் திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எதிர்பார்த்தது போல அந்தத்திரைப்படம் அவர்களுக்கு கம் பேக் திரைப்படமாகவே அமைந்து விட்டது. காரணம் படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் பிடித்திருக்கிறது.

ஜெயிலர் திரைப்படம் வெளியான 4 வது நாளில் உலக அளவில் 300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்த சாதனை மூலம் 2.0 திரைப்படத்திற்கு பிறகு அதிவேகமாக 300 கோடியை எட்டிய திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் மாறியிருக்கிறது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி