தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பக்தனுக்காக தூணை பிளந்து வந்த பெருமாள்.. வரலாற்றுச் சித்திரம் பக்த பிரகலாதன்

பக்தனுக்காக தூணை பிளந்து வந்த பெருமாள்.. வரலாற்றுச் சித்திரம் பக்த பிரகலாதன்

Jan 12, 2024, 05:15 AM IST

google News
Bhakta Prahlada: பக்த பிரகலாதா திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 57 ஆண்டுகளாகின்றன.
Bhakta Prahlada: பக்த பிரகலாதா திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 57 ஆண்டுகளாகின்றன.

Bhakta Prahlada: பக்த பிரகலாதா திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 57 ஆண்டுகளாகின்றன.

வரலாற்று திரைப்படங்கள் தான் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு மெருகேற்றி அசைக்க முடியாத வலிமையோடு வைத்திருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. புராணங்களையும், வரலாற்று சம்பவங்களையும் திரைப்படமாக எத்தனையோ இயக்குனர்கள் எடுத்து மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளனர்.

சி.ஹெச் நாராயணமூர்த்தி இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் பக்த பிரகலாதா. இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் மற்றும் வீரப்பன் அண்ட் கோ தயாரித்துள்ளது.

விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களில் சிம்ம அவதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கொடிய அரக்கனாக பிறந்த இரணியகசிபுவை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரம் தான் சிம்ம அவதாரம்.

கொடிய அரக்கனான இரண்ணியனுக்கு பிறந்த மகன் தான் பிரகலாதன் விஷ்ணு பகவானின் மிகப்பெரிய பக்தனாக பிறந்த இவர் சிவ பக்தனான தனது தந்தைக்கு மாறாக விஷ்ணு பகவானின் புகழை பரப்பிக் கொண்டிருந்தார்.

எவ்வளவு கூறியும் தகப்பனின் பேச்சை மீறி விஷ்ணு பகவானின் பக்திமானாக திகழ்ந்தார் பிரகலாதன். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் உச்சம் செல்லும் பொழுது, பிரகலாதனின் அழிக்க முயன்ற இரணியகசிபு, உனது விஷ்ணு இங்கே இருக்கிறாரா எனக் கூறி அருகில் இருந்த தூணை உடைக்கும் பொழுது மனிதன் மிருகம் என இரண்டு உருவமாக கொடூர கோபத்தில் தூணை உடைத்துக் கொண்டு சிம்ம அவதாரமாக விஷ்ணு பகவான் எழுந்து அருளினார்.

உச்ச பக்தனான பிரகலாதனை காப்பதற்காக இரங்கலை தனது மடியில் வைத்து சிம்ம அவதாரம் கொண்ட மகாவிஷ்ணு ரத்தம் பீய்ச்சி அடிக்க வதம் செய்தார். யார் கூறியும் அடங்க மறுத்த நரசிம்ம அவதாரம் பக்த பிரகலாதனால் சாந்தமடைந்தார்.

இந்த திரைப்படத்தில் இரணியனாக எஸ். வி. ரங்காராவ் நடித்திருப்பார். பிரகலாதனாக ரோஜா ரமணியும் இரணியனின் மனைவியாக அஞ்சலி தேவியும் நடித்திருப்பார்கள். இரணியன் கதாபாத்திரத்தை நாம் புராணத்தில் படித்து கேட்டிருப்போம் ஆனால் அது போல் நடித்து உண்மையில் நமக்கு ரங்காராவ் காட்சிப்படுத்தி இருப்பார்.

பிரகலாதனாக ரோஜா ரமணி எந்த அச்சமும் இல்லாமல் மிருகங்களோடும் அனைத்து உச்ச நடிகர்களுக்கும் ஈடு கொடுத்து சிறப்பாக நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக ரோஜா ரமணி நடிப்பைக் கண்டு அனைவரும் படம் வந்த காலத்தில் ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடக இசை திலகமாக விளங்கக்கூடிய பாடகர் பாலமுரளி கிருஷ்ணா இந்த திரைப்படத்தில் நாரதர் வேடத்தில் நடித்திருப்பார். தெலுங்கு மொழியில் வெளியான இந்த திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியானது.

இப்போது இந்த திரைப்படத்தை பார்த்தால் கூட ஆச்சரியமும் ஆர்வமும் குறையாமல் திரைக்கதை விறுவிறுப்பாக செல்லும் அந்த அளவிற்கு திரைக்கதை மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கும். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 57 ஆண்டுகள் ஆகின்றன. காலத்தையும் கடந்து கலைச்சித்திரமாக விளங்க கூடிய இந்த திரைப்படம் சினிமா வரலாற்றில் அளிக்க முடியாத குறியீடாக விளங்கும் என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி