தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anjal Petti 520: ஒரு கடிதம் தான் மொத்த படமும் - ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யம் நிறைந்த அஞ்சல் பெட்டி 520

Anjal Petti 520: ஒரு கடிதம் தான் மொத்த படமும் - ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யம் நிறைந்த அஞ்சல் பெட்டி 520

Jun 27, 2023, 05:45 AM IST

google News
54 Years of Anjal Petti 520: அஞ்சல் பெட்டி 520 திரைப்படம் இன்றுடன் வெளியாகி 54 ஆண்டுகள் ஆகின்றன.
54 Years of Anjal Petti 520: அஞ்சல் பெட்டி 520 திரைப்படம் இன்றுடன் வெளியாகி 54 ஆண்டுகள் ஆகின்றன.

54 Years of Anjal Petti 520: அஞ்சல் பெட்டி 520 திரைப்படம் இன்றுடன் வெளியாகி 54 ஆண்டுகள் ஆகின்றன.

எத்தனையோ கதைகளை இந்த தமிழ் சினிமா கண்டிருக்கிறது. பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்றுத் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக இன்றுவரை வலம் வரக்கூடியவர் நடிகர் சிவாஜி.

வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர். அப்படி சிவாஜி கணேசன் நடிப்பில் வித்தியாசமான கதையைக் கொண்டு வெளிவந்த திரைப்படம் தான் அஞ்சல் பெட்டி 520.

கதை

மதுரையைத் தலைமை இடமாகக் கொண்ட குழந்தை உணவு நிறுவனத்தில் மேலாளராக சிவாஜி கணேசன் வேலை செய்து வருகிறார். மிகவும் திறமையான மேலாளராக பணியாற்றி வரும் சிவாஜியை அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் பதவிக்குப் பதவி உயர்வு கொடுக்க முடிவு செய்கிறார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

திடீரென பதவி உயர்வு கொடுக்கவில்லை என்ற தகவல் சிவாஜிக்கு வருகிறது. இதன் காரணமாகத் தனது வேலையை ராஜினாமா செய்வதாகச் சிவாஜி முடிவெடுக்கிறார். பின்னர் ராஜினாமா கடிதம் எழுதி அஞ்சல் பெட்டி 520-இல் அந்த கடிதத்தைப் போட்டு விடுகிறார்.

அடுத்த நாள் சிவாஜிக்குப் பதவி உயர்வு வழங்குவதாக நிறுவனத்திடம் இருந்து தந்தி வருகிறது. உடனே தனக்கு வந்த தகவல் தவறானது என உணர்ந்த சிவாஜி, அஞ்சல் பெட்டி 520இல் அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெறச் செல்கிறார். அதிலிருந்து திரைப்படத்தின் கதை விறுவிறுப்பாக மாறுகிறது. கடிதத்தைத் துரத்திச் செல்லும் சிவாஜிக்கு பல்வேறு விதமான தொந்தரவுகள் ஏற்படுகிறது. இறுதியாக அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து சிவாஜி அதிலிருந்து மீண்டு வருகிறார்.

அஞ்சல் பெட்டி 520

இப்படிப்பட்ட வித்தியாசமான கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் தற்போது மிகவும் குறைவாக வருகிறது. ஒரே ஒரு தபாலை வைத்து மொத்த படமும் நகரும், அதுவே இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய சுவாரசியமாகும்.

இந்தத் திரைப்படத்திற்குக் கோவர்த்தனம் இசையமைத்துள்ளார். சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருப்பார். ஆங்காங்கே திரைப்படத்தின் படத்தை அசராமல் கொண்டு செல்வதற்குத் தனது நகைச்சுவையை அர்ப்பணித்து இருப்பார் நடிகர் நாகேஷ்.

திரைப்படத்தில் இடப்பட்ட பாடல்கள் அனைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றனர். வானொலியைப் பொழுதுபோக்காக வைத்து வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே தினமும் ஒலிக்கக் கூடிய பாடலாக இந்த திரைப்படத்தின் பாடல்கள் அமைந்திருந்தன.

டி.என்.பாலு இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 54 ஆண்டுகள் ஆகும். வித்தியாசமான கதைகளைக் கொண்டு வெற்றி அடைந்த திரைப்படங்கள் என்றுமே வாழும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு பெரிய உதாரணமாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி