Amy Jackson: ‘சோம்பலான மழைக்கால காலை’.. நட்சத்திர ஹோட்டலில் புது காதலருடன் எமி ரொமன்ஸ்! - வைரல் போட்டோக்கள்!
Jul 26, 2023, 07:27 AM IST
எமி ஜாக்சன் தன்னுடைய காதலனுடன் ராஜஸ்தான் உதய்பூரில் ஜாலியாக சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனைத்தொடர்ந்து ‘தாண்டவம்’ ‘ஐ’ ‘கெத்து’ ‘தெறி’ ‘2.0’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த இவர் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2020 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனிடையே இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை, எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜ் உடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்தார். இதனையடுத்து இருவரும் பிரிந்தது உறுதிசெய்யப்பட்டது.
அதன் பின்னர் தன்னுடைய மகனான ஆண்ட்ரியாஸூடன் இருப்பது தொடர்பான புகைப்படங்களை எமி பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் இவரும் நடிகர் எட் வெஸ்ட்விக்கும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி படுத்தும் விதமாக நடிகை எமி அவருடன் இருப்பது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்த நிலையில் இருவரும் தற்போது இந்தியாவை சுற்றி வருகிறார்கள். அண்மையில் மும்பையின் பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர்கள் அதனைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு வந்திருக்கிறார்கள். அங்குள்ள ஹோட்டலில் தங்கி இருக்கும் இவர்கள் அங்கிருப்பது தொடர்பான புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார்கள்.
மேலும் அதில் எமி ‘நீண்ட சோம்பலான மழைக்கால காலை’ என்று அவர் அதில் பதிவிட்டு இருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
டாபிக்ஸ்