Indian 2 Legal Trouble: விதிமீறல்..மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் எதிர்ப்பு! இந்தியன் 2 தயாரிப்பாளர்களுக்கு எதிராக நோட்டீஸ்
Aug 30, 2024, 02:01 PM IST
ரிலீஸ் நாளில் இருந்து பல்வேறு எதிர்மறைகளை சந்தித்து வரும் இந்தியன் 2 திரைப்படம், தற்போது மல்டிபிளக்ஸ் அசோசியேஷன்கள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. படத்தயாரிப்பாளர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓடிடி ரிலீஸில் விதிமீறல் தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இருந்து வரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் வெளியானது. பிரமாண்ட் இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தியன் 2 எதிர்மறை விமர்சனங்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் நோட்டீஸ்
இந்தியன் 2 படம் ரிலீசாகி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியிருக்கும் நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் வெளியாகியுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படம் ஸ்டிரீம் ஆகி வருகிறது.
இதையடுத்து இந்தியா மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சார்பில் இந்தியன் 2 படத்தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பிரபல ஊடகமான பிங்க்வில்லா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா திரைப்படங்களை இந்தியில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. படம் வெளியான பின்னர் 8 வாரம் கழித்தே தயாரிப்பாளர்கள் ஓடிடியில் வெளியிட வேண்டும். இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று விதிகள் உள்ளன.
மேலும் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் நாட்டின் டாப் மல்டிபிளக்ஸ் செயினாக இருக்கும் பிவிஆர்ஐநாக்ஸ், சினிபோலீஸ் ஆகியவற்றின் வெளியீட்டைப் பெற மாட்டார்கள்.
அந்த வகையில் இந்தியன் 2 படத்தயாரிப்பு நிறுவனம் மேற்கூறப்பட்ட வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொண்டு மல்டிபிளக்ஸ்களில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்தியன் 2 இந்தி பதிப்பு இப்போது நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆவதை கண்டு மல்டிபிளக்ஸ் சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட 8 வாரங்களுக்கு முன்பே படம் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதற்கு முன்னரே ஸ்ட்ரீம் ஆகி வருவதால் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது".
மற்ற தயாரிப்பாளர்களுக்கு பாடம்
இந்த விஷயத்தில் சட்ட ரிதீயான நடவடிக்கை மேற்கொள்ள மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சங்கம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு தயாரிப்பாளரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு இதை பின்பற்ற தொடங்குவார்கள் என்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு 8 வார காலக்கெடு என்பதை பராமரிப்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாக பிங்க் வில்லா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மற்ற தயாரிப்பாளர்களு இதுவொரு பாடமாக அமையக்கூடும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஓடிடியிலும் ட்ரோல்
ஏற்கனவே இந்தியன் 2 படம் மீதான எதிர்மறை விமர்சனங்களால் படம் வெளியான திரையரங்குகள் காற்று வாங்கியதோடு, வசூலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது போதாதென்று படம் ஓடிடியில் வெளியான பின்பு அதிலிருந்து ஒவ்வொரு முக்கிய காட்சிகளையும் வெட்டி பதிவிட்டு பலரும் ட்ரோல் செய்தனர். உச்ச நடிகரான கமலஹாசன் நடித்திருக்கும் படத்தில் அதிகமாக ட்ரோல் செய்த படமாக இந்தியன் 2 தான் இருக்கும் என்கிற அளவில் மீம்ஸ்கள், மீம் விடியோக்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்தார்கள்.
இந்த படம் ஷுட்டிங் தொடங்கி ரிலீஸ் வரை ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகிறது. கிட்டத்தை ஆறு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்த படம் பெரும் போராட்டத்துக்கு பின்னர் வெளியான நிலையில், ரிலீசுக்கு பின்னர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 3
இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3 படத்தையும் படக்குழுவினர்கள் உருவாக்கியுள்ளார்கள். இந்தியன் 2 இறுதிக்காட்சியில் இந்தியன் 3 டிரெய்லர் காண்பிக்கப்படும். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 3, 2025இல் திரைக்கு வரவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்