தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Shankar: லுங்கி..சின்ன வீடு; ராஜ தந்திரம்; காமெடி ரைட்டர் டு பிரமாண்ட இயக்குநர்-Sac -யிடம் ஷங்கர் சேர்ந்த கதை!

Director Shankar: லுங்கி..சின்ன வீடு; ராஜ தந்திரம்; காமெடி ரைட்டர் டு பிரமாண்ட இயக்குநர்-SAC -யிடம் ஷங்கர் சேர்ந்த கதை!

Oct 04, 2023, 06:30 AM IST

google News
இயக்குநர் ஷங்கர் எப்படி எஸ்.ஏ.சியிடம் தந்திரமாக உதவி இயக்குநராக சேர்ந்தார் என்ற சுவாசிய கதையை விவரிக்கிறது இந்தக்கட்டுரை!
இயக்குநர் ஷங்கர் எப்படி எஸ்.ஏ.சியிடம் தந்திரமாக உதவி இயக்குநராக சேர்ந்தார் என்ற சுவாசிய கதையை விவரிக்கிறது இந்தக்கட்டுரை!

இயக்குநர் ஷங்கர் எப்படி எஸ்.ஏ.சியிடம் தந்திரமாக உதவி இயக்குநராக சேர்ந்தார் என்ற சுவாசிய கதையை விவரிக்கிறது இந்தக்கட்டுரை!

இது குறித்து இயக்குநர் செந்தில் நாதன் வாவ் தமிழா சேனலுக்கு பேசும் போது, “தில்லை ராஜன் என்ற நாடக நடிகர் ஒருவர் இருந்தார். அவர் கலைவாணர் அரங்கத்தில் நாடகம் ஒன்றை நடத்தினார். எஸ்.ஏ.சி சாருக்கு அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. நாடகத்தை பார்த்த எஸ்.ஏ.சி நாடகத்தின் இடையிடையே கொஞ்சம் சிரித்தார். இடைவேளையில், தில்லை நடராஜன் எங்களுக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

அப்போது எஸ்.ஏ.சி இந்த நாடகத்திற்கு யார் வசனம் எழுதியது என்று கேட்க, ஷங்கர் என்ற ஒரு பையன் தான் எழுதினான் என்று சொன்னார் தில்லை. தொடர்ந்து அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லியதோடு, உங்களுக்கு தேவையென்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி அவனை அழைத்து வந்தார். 

அப்போது எஸ்.ஏ.சி சார் என்னிடம், நாம் காமெடியில் வீக்காக இருக்கிறோம்.. ஷங்கரின் முகவரியை வாங்கிக்கொள் என்றார். நானும் வாங்கிக்கொண்டேன். இந்த நிலையில்தான் நாங்கள் வசந்த ராகம் திரைப்படத்தின் கதையை ரெடி செய்து கொண்டு இருந்தோம். அந்தக்கதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களமாக இருந்தது. 

எங்களுக்கு அதில் காமெடி ட்ராக் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான், நான் எஸ்.ஏ.சி சாருக்கு ஷங்கரை ஞாபகப்படுத்தினேன். அவர் அவனை பார்த்து வரசொன்னார். தற்போது கிருஷ்ணவேணி தியேட்டர் இருக்கும் இடத்திற்கு எதிர்புறத்தில் ஒரு கட்டிடம் இருந்தது. அங்கு ஒரு வீட்டில்தான் ஷங்கர் குடியிருந்தான். 

நான் அங்கு சென்று அவன் அறைக்கதவை தட்டினேன். அவன் சட்டை போடாமல், வெறும் லுங்கியை மட்டும் அணிந்து கொண்டு வந்தான். நான் விஷயத்தை சொல்லி விட்டு கிளம்பி விட்டேன். அவன் ஒரு மணி நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தான். நான் அவனிடம் கதையை முழுதாக சொல்லிவிட்டு, இதற்கு ஒரு காமெடி ட்ராக் எழுத வேண்டும் என்று சொன்னேன். இரண்டு நாட்கள் நேரம் கேட்டான். 

அதன் பின்னர் வந்த அவன், ஒரு காமெடி ட்ராக்கை சொன்னான். எங்களுக்கு பிடித்திருந்தது. கொஞ்சம் நேரத்தில் நானும் ஷூட்டிங் வரலாமா என்று கேட்டான். சரி வா.. என்று சொன்னேன். அங்கு வந்த உடன் எஸ்.ஏ.சி சாரிடம், உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்றான். அவரோ எதுவாக இருந்தாலும் செந்திலைக்கேளு என்று சொல்லிவிட்டார். 

நான் இவனைப்பார்த்தேன். அப்போது அவரை எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிளாப் அடித்துக்கொண்டிருந்த ஆர்.வி.ஆர், நானே எவ்வளவு நாள்தான் கிளாப் அடித்துக்கொண்டே இருப்பது, வேறு யாரையாவது போடலாமே என்று சொல்லிக்கொண்டிருந்தான். இந்த நிலையில்தான், அவனுக்கு பதிலாக ஷங்கரை கிளாப் அடிக்க விட்டோம். அப்படித்தான் அவனின் பயணம் தொடர்ந்தது.” என்று பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி