தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2 Release: ஈகோ சண்டை..! தாடியை ட்ரிம் செய்து வெளிநாடு பறந்த அல்லு அர்ஜுன் - புஷ்பா 2 ரிலீஸில் எழுந்த சிக்கல்

Pushpa 2 Release: ஈகோ சண்டை..! தாடியை ட்ரிம் செய்து வெளிநாடு பறந்த அல்லு அர்ஜுன் - புஷ்பா 2 ரிலீஸில் எழுந்த சிக்கல்

Jul 19, 2024, 02:03 AM IST

google News
இயக்குநர் சுகுமார் உடந் ஏற்பட்ட ஈகோ சண்டை காரணமாக தாடியை ட்ரிம் செய்து வெளிநாடு பறந்துள்ளாராம் அல்லு அர்ஜுன். இதனால் புஷ்பா 2 ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
இயக்குநர் சுகுமார் உடந் ஏற்பட்ட ஈகோ சண்டை காரணமாக தாடியை ட்ரிம் செய்து வெளிநாடு பறந்துள்ளாராம் அல்லு அர்ஜுன். இதனால் புஷ்பா 2 ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

இயக்குநர் சுகுமார் உடந் ஏற்பட்ட ஈகோ சண்டை காரணமாக தாடியை ட்ரிம் செய்து வெளிநாடு பறந்துள்ளாராம் அல்லு அர்ஜுன். இதனால் புஷ்பா 2 ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக புஷ்பா 2 இருந்து வருகிறது. புஷ்பா முதல் பாகம் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்ப்பால் புஷ்பா 2 படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 15 திரைக்கு வருவதாக இருந்த நிலையில், தறப்போது டிசம்பருக்கு தள்ளிபோயுள்ளது. இதற்கு காரணமாக படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் இடையே நிலவி வந்த மோதல் தான் என தகவல்கள் வெளயாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஈகோ சண்டை

முன்னதாக, படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை எனவும் முக்கிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்னை காரணமாக தாமதமாகியுள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தன. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் சுகுமார் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஈகோ சண்டை காரணமாக படம் தாதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் தனது தாடியை ட்ரீம் செய்து விட்டு ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டுள்ளார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. இதற்கிடையே படத்தின் இயக்குநர் சுகுமார் தனது குடும்பத்தினருடன் யுஎஸ் சென்றுள்ளாராம். இதனால் படத்தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதற்கு புஷ்பா படக்குழுவினர் மறுப்பு தெரிவித்திருப்பதுடன், படத்தின் ரிலீஸ் தள்ளிபோனாலும் புதிய ரிலிஸீ தேதியான டிசம்பர் 6 கட்டாயம் படம் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் தரப்பு விளக்கம்

அல்லு அர்ஜுன் தாடியை ட்ரிம் செய்திருக்கும் விடியோவை பகிர்ந்திருக்கும் அவரது ரசிகர்கள், புஷ்பா 2 படத்தின் மீத காட்சிகளை இந்த தாடியை வைத்து எடுத்துவிடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். இதைத்தொடக்ந்து இந்த விடியோ தொடர்பாக அல்லு அர்ஜுன் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "இந்த விடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது, ஆனால் இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் இன்னும் நீண்ட முடி மற்றும் தாடியுடன் இருக்கிறார். புஷ்பா 2: தி ரூல் என்பதை மக்கள் மறக்க வேண்டாம். அவருடைய கதாபாத்திரமான புஷ்பா ராஜ் தினசரி கூலித் தொழிலாளி மற்றும் கடத்தல்காரராக இருந்து டான் ஆக மாறும் விதமாக உள்ளது.

புஷ்பா: தி ரைஸில் இருப்பதைப் போல அவரால் இன்னும் அலட்சியமாக இருக்க முடியாது. டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து படத்தை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை" என கூறப்பட்டுள்ளது.

பான் இந்தியா ஹிட்டான புஷ்பா

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருந்த புஷ்பா முதல் பாகம், கடந்த 2021 டிசம்பரில் வெளியானது. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா வெளியானது. மாஸ் மசாலா காட்சிகளுடன் அமைந்திருந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரம் வரவேற்பை பெற்றதுடன், அவரை நேஷனல் க்ரஷ் ஆக்கியது.

படத்தின் முதல் பாகம் புஷ்பா: தி ரைஸ் என்ற பெயரில் வெளியாகியிருந்தது. தற்போது இரண்டாம் பாகம் புஷ்பா: தி ரூல் என்கிற பெயரில் உருவாகி வருகிறது.

ஏற்கனவே படத்தின் அல்லு அர்ஜுன் லுக், ராஷ்மிகா லுக் மற்றும் புரொமோ விடியோக்கள், டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி