தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gangs Of Godavari Box Office Collection Day 2: கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் 2ஆம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Gangs Of Godavari Box Office Collection Day 2: கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் 2ஆம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Marimuthu M HT Tamil

Jun 02, 2024, 12:39 PM IST

google News
Gangs Of Godavari Box Office Collection Day 2: நாக வம்சி தயாரித்த திரைப்படம் ‘’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’’. இந்தப் படம் 2ஆம் நாள் வசூலில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது.
Gangs Of Godavari Box Office Collection Day 2: நாக வம்சி தயாரித்த திரைப்படம் ‘’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’’. இந்தப் படம் 2ஆம் நாள் வசூலில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

Gangs Of Godavari Box Office Collection Day 2: நாக வம்சி தயாரித்த திரைப்படம் ‘’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’’. இந்தப் படம் 2ஆம் நாள் வசூலில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

Gangs Of Godavari Box office Collection Day 2: ’’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’’ தெலுங்குத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில், இரண்டாம் நாள் சிறிது சரிவைக் கண்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ளார்.   

‘’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’’ திரைப்படத்தின் வசூல் குறித்து, Sacnilk.com நிலவரப்படி, இப்படம் இதுவரை திரையரங்குகளில் ரூ.8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கேங்ஸ் ஆஃப் கோதாவரி இந்திய பாக்ஸ் ஆபிஸ்:

கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படத்தின் முதல் நாளில், படம் ரூ.5.2 கோடியை ஈட்டியது. ஆரம்ப மதிப்பீடுகளின்படி, இது இரண்டாவது நாளில் இந்தியாவில் நிகராக ரூ.3 கோடி சம்பாதித்தது. இதுவரை இப்படம் ரூ.8.20 கோடியை வசூலித்துள்ளது. 

கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படத்தை, சனிக்கிழமை 25.89% தெலுங்கு பார்த்துள்ளனர். இப்படத்தை நாகவம்சி தயாரித்துள்ளார். 

கேங்ஸ் ஆஃப் கோதாவரி விமர்சனம்:

கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தைப் பற்றிய இந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம், "கிருஷ்ணா ரத்னா என்பவர் டைகர் ரத்னாவாக மாறிய அவரது எழுச்சியையும், கோதாவரியில் மிகவும் பயங்கரமான மனிதரையும் அசுர வேகத்தில் விவரிக்கிறார். 

இது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டுள்ளது. அதே வேளையில், க்ளைமேக்ஸ் வரும்போது, ரத்னா பற்றிய முடிவு பலருக்கும் திருப்தியாகவில்லை. அவரது நம்பிக்கைக்குரிய ரத்னமாலா (அஞ்சலி) மற்றும் மனைவி புஜ்ஜி (நேஹா) ஆகியோர் அவரது அடித்தள சக்திகள். ஆனால், ரத்னா, பார்வையாளர்களுக்கே கூட ஒரு மர்மமாகவே இருக்கிறார். படம் சில காட்சிகளில் சாதி அரசியலையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் முழுவதுமாக உள்ளே செல்லவில்லை.

கேங்ஸ் ஆஃப் கோதாவரி பற்றி:

’’கேங்க்ஸ் ஆஃப் கோதாவரியின்’’ வாழ்வியலை இப்படம் சொல்கிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென், நேஹா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ஒரு டீஸரை வெளியிட்டனர். அதில் விஷ்வக், ஒரு புதிய அவதாரத்தில் தோன்றியிருந்தார். வழக்கமாக நகர்ப்புற வேடங்களில் நடிக்கும் நடிகர் விஷ்வக் சென், ஒரு கிராமிய தோற்றத்தில் காணப்பட்டார். டீசரில் விஷ்வக்கின் கதாபாத்திரம் எப்படியோ பலருக்கு எதிரியாக உருவாவதைக் காட்டுகிறது.

சமீபத்தில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து விஷ்வக் ஊடகத்திடம் பேசியுள்ளார்.  

இதுதொடர்பாகப் பேசிய அவர், "நான் லங்கால ரத்னா என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராகவும், ஒரு சிறிய திருடனாக இருந்து சக்திவாய்ந்த தாதாவாகவும், பின் அரசியல்வாதியாகவும் மாறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் கேரியரில் நான் நடித்த சிறந்த கதாபாத்திரம் இதுதான். நான், எனது கதாபாத்திரங்களுடன் ஒவ்வொரு முறையும் போட்டி போட விரும்புகிறேன்’’ என்றார். 

கருடன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு:

அதேபோல் தமிழில் மே 31ஆம் தேதி வெளியான ‘கருடன்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளே ரூ.4 கோடி வரை வசூலித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.   

இப்படத்தில் நடிகர்கள் சசி குமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயக்குமார் என பெரிய நடிகர் பட்டாளே கதாபாத்திரங்களாக களம் இறங்கி இருக்கும் திரைப்படம், கருடன். ’’விடுதலை’’ படத்தில் ஹீரோவாக, அறிமுகமான நகைச்சுவை நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் நடித்து உள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி