வாழைப்பழம் காமெடி காப்பி அடித்ததா ? - என்ன சொல்கிறார் கங்கை அமரன்
Mar 17, 2022, 01:59 PM IST
கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழம் காமெடி எப்படி உருவானது என்பது குறித்து கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் கங்கை அமரன் . இவர் ' கோழி கூவுது ' , ' கரகாட்டக்காரன் ' , ' எங்க ஊரு பாட்டுக்காரன் ' உள்பட 19 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். ' என் தங்கச்சி படிச்சவ ' , ' சுவரில்லா சித்திரங்கள் ', ' வாழ்வே மாயம் ' , ' மவுன கீதங்கள் ' , உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இயக்கிய படங்களிலேயே மக்களுக்கு மிகவும் பிடித்தமான படம் என்றால் அது , ' கரகாட்டக்காரன் ' தான். அதிலும் குறிப்பாக அந்த படத்தில் வரும் வாழைப்பழம் நகைச்சுவையை இன்று பார்த்தால் கூட நமக்கு சிரிப்பு வரும். பலரும் அந்த யோசனை அவருக்கு எப்படி வந்தது என்று கூட கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ' கரகாட்டக்காரன் ' படத்தில் வரும் வாழைப்பழ காமெடி தானாக யோசித்து எடுக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் , ” கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப் பழம் காமெடி . இந்த நகைச்சுவைக்கு மூலகாரணமாக அமைந்தது , முன்னோர்கள் தான்.
பலரும் அந்த வாழைப் பழம் காமெடி ரொம்ப அருமையாக இருக்கிறது. அதை நீங்கள் எப்படி யோசித்து எடுத்தீர்கள் தயவு செய்து சொல்லுங்கள் என கேட்பார்கள். அதற்கான விடையே இப்போது சொல்கிறேன். நாம் நமது முன்னோர்கள் இல்லாமல் எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாது. எனால் அவர்கள் நமக்கு நிறைய விஷயங்கள் விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
அப்படி தான் எனக்கும் , என் முன்னோர்கள் நிறைய விட்டுச் சென்று இருக்கின்றனர். நீங்கள் , ‘ தில்லானா மோகனாம்பாள் ‘ படம் பார்த்து இருப்பீர்கள். அதை போலே தான் கரகாட்டக்காரன் படமும். அந்த படத்தில் கதாநாயகன் நாதஸ்வரம் வாசிப்பவராகவும் , நாயகி பரத கலைஞராகவும் நடித்து இருப்பார்கள்.
இருவருமே நடன கலைஞராக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கரகாட்டக்காரன் படத்தை எடுத்து முடித்தேன். நான் வாழைப்பழம் நகைச்சுவையைச் சிறு வயதில் , மலையாள வெளியான படத்தில் வந்த காமெடி.
அதனால் அது என் கற்பனையில் உருவாகவில்லை . எனக்கு அந்த வெற்றி உழைக்காமல் கிடைத்தது. ஆனால் , ’ அண்ணனுக்கு ஜே ’ படத்தில் நிறைய உழைப்பு போட்டேன். ஆனால் அது வெற்றியடைவில்லை “ எனக் கங்கை அமரன் தெரிவித்து உள்ளார்.