தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Filmfare Awards 2024: பிலிம்பேர் விருதுகளை வாரி குவித்த தமிழ் சினிமா.. மாஸ்காட்டிய நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Filmfare Awards 2024: பிலிம்பேர் விருதுகளை வாரி குவித்த தமிழ் சினிமா.. மாஸ்காட்டிய நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Karthikeyan S HT Tamil

Aug 04, 2024, 05:22 PM IST

google News
Filmfare Awards South 2024 winners: சித்தார்த்தின் தமிழ் திரைப்படமான ‘சித்தா’ 7 விருதுகளை வென்றது. நானியின் தெலுங்கு படம் தசரா 6 விருதுகளை பெற்றுள்ளது.
Filmfare Awards South 2024 winners: சித்தார்த்தின் தமிழ் திரைப்படமான ‘சித்தா’ 7 விருதுகளை வென்றது. நானியின் தெலுங்கு படம் தசரா 6 விருதுகளை பெற்றுள்ளது.

Filmfare Awards South 2024 winners: சித்தார்த்தின் தமிழ் திரைப்படமான ‘சித்தா’ 7 விருதுகளை வென்றது. நானியின் தெலுங்கு படம் தசரா 6 விருதுகளை பெற்றுள்ளது.

Filmfare Awards South 2024 winners: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் தென்னிந்திய திரைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் பிலிம் பேர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 69வது விருது வழங்கும் இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதில், தெலுங்கில் திரைப்படபிரிவில் நானியின் தசரா 6 விருதுகளையும், ஆனந்த் தேவரகொண்டாவின் பேபி திரைப்படம் 5 விருதுகளையும் வென்றுள்ளது. சந்தீப் கிஷன் மற்றும் ஃபாரியா அப்துல்லா ஆகியோர் தொகுத்து வழங்கிய விருது வழங்கும் விழாவில் தமிழ் சினிமா பிரிவில் நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் ஏழு விருதுகளையும், 'பொன்னியின் செல்வன் பகுதி 2' ஐந்து விருதுகளையும் வென்றன.

முழு வெற்றியாளர்களின் பட்டியல் இதோ..!

தமிழ் சினிமா

சிறந்த படம் - சித்தா

சிறந்த இயக்குனர் - எஸ்.யு.அருண்குமார் (சித்தா)

சிறந்த படம் (விமர்சகர்கள்) - விடுதலை: பாகம் 1 (வெற்றி மாறன்)

சிறந்த நடிகர் - விக்ரம் (பொன்னியின் செல்வன்- பாகம் 2)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - சித்தார்த் (சித்தா)

சிறந்த முன்னணி நடிகை - நிமிஷா சஜயன் (சித்தா)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - ஐஸ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா), அபர்ணா தாஸ் (தாதா)

சிறந்த துணை நடிகர் - பஹத் பாசில் (மாமன்னன்)

சிறந்த துணை நடிகை - அஞ்சலி நாயர் (சித்தா)

சிறந்த இசை ஆல்பம் - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் (சித்தா)

சிறந்த பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன் (ஆக நாகா - பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த பின்னணி பாடகர் - ஹரிசரண் (சின்னஞ்சிரு நிலவே - பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த பின்னணி பாடகி - கார்த்திகா வைத்தியநாதன் (கண்கள் எதோ - சித்தா)

சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் பாகம் 2)

தெலுங்கு சினிமா

சிறந்த படம் - பாலகம்

சிறந்த இயக்குனர் - வேணு யெல்தாண்டி (பாலகம்)

சிறந்த படம் (விமர்சகர்கள்) - சாய் ராஜேஷ் (பேபி)

சிறந்த முன்னணி நடிகர் - நானி (தசரா)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - பிரகாஷ் ராஜ் (ரங்க மார்த்தாண்டா), நவீன் பாலிஷெட்டி (மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி)

சிறந்த முன்னணி நடிகை - கீர்த்தி சுரேஷ் (தசரா)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - வைஷ்ணவி சைதன்யா (பேபி)

சிறந்த துணை நடிகர் - பிரம்மானந்தம் (ரங்க மார்தாண்டா), ரவி தேஜா (வால்டேர் வீரய்யா)

சிறந்த துணை நடிகை - ரூபலட்சுமி (பாலகம்)

சிறந்த இசை ஆல்பம் - பேபி (விஜய் புல்கனின்)

சிறந்த பாடலாசிரியர் - ஆனந்த ஸ்ரீராம் (ஓ ரெண்டு பிரேமா மேகாலிலா - பேபி)

சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீராம சந்திரா (ஓ ரெண்டு பிரேமா மேகாலிலா - பேபி)

சிறந்த பின்னணி பாடகி - ஸ்வேதா மோகன் (மஸ்தரு மஸ்தாரு - சார்)

சிறந்த ஒளிப்பதிவு - சத்யன் சூரியன் (தசரா)

சிறந்த நடன இயக்குனர் - பிரேம் ரக்ஷித் (தூம் தாம் தோஸ்தான் - தசரா)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - கோலா அவினாஷ் (தசரா)

சிறந்த அறிமுக இயக்குனர் - ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா), ஷௌர்யுவ் (ஹாய் நன்னா)

சிறந்த அறிமுக நடிகர் - சங்கீத் ஷோபன் (மட்)

கன்னட சினிமா

சிறந்த படம் - டேர்டெவில் முஸ்தபா

சிறந்த இயக்குனர் - ஹேமந்த் எம் ராவ் (சப்த சாகராதாச்சே எல்லோ)

சிறந்த படம் (விமர்சகர்கள்) - பிங்கி எல்லி (பிரித்வி கோனனூர்)

சிறந்த முன்னணி நடிகர் - ரக்ஷித் ஷெட்டி (சப்த சாகராதாச்சே எல்லோ)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - பூர்ணசந்திர மைசூர் (ஆர்கெஸ்ட்ரா மைசூரு)

சிறந்த முன்னணி நடிகை - சிரி ரவிக்குமார் (சுவாதி முத்தின ஆண் ஹனியே)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - ருக்மிணி வசந்த் (சப்த சாகரதாச்சே எல்லோ)

சிறந்த துணை நடிகர் - ரங்கயானா ரகு (தகாரு பால்யா)

சிறந்த துணை நடிகை - சுதா பெலவாடி (கௌசல்யா சுப்ரஜா ராமா)

சிறந்த இசை ஆல்பம் - சப்த சாகராதாச்சே எல்லா (சரண் ராஜ்)

சிறந்த பாடலாசிரியர் - பி.ஆர்.லக்ஷ்மன் ராவ் (யவா சும்பாகா - சௌகா பாரா)

சிறந்த பின்னணி பாடகர் - கபில் கபிலன் (நதியே ஓ நதியே- சப்த சாகராதாச்சே எல்லோ சைட் ஏ)

சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரீலட்சுமி பெல்மன்னு (கடலனு கானா ஹொராட்டிரோ - சப்த சாகரதாச்சே, எல்லோ சைட் ஏ)

சிறந்த அறிமுக பெண் - அம்ருதா பிரேம் (தகரு பால்யா)

சிறந்த அறிமுக ஆண் - ஷிஷிர் பைகாடி (டேர்டெவில் முஸ்தபா)

வாழ்நாள் சாதனையாளர் விருது - ஸ்ரீநாத்

மலையாளம் சினிமா

சிறந்த படம் - 2018

சிறந்த இயக்குனர் - ஜூட் அந்தோனி ஜோசப் (2018)

சிறந்த படம் (விமர்சகர்கள்) - காதல் - தி கோர் (ஜியோ பேபி)

சிறந்த முன்னணி நடிகர் - மம்முட்டி (நண்பகல் நேரத்து மயக்கம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - ஜோஜு ஜார்ஜ் (இருட்டா)

சிறந்த முன்னணி நடிகை - வின்சி அலோஷியஸ் (ரேகா)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - ஜோதிகா (காதல்- தி கோர்)

சிறந்த துணை நடிகர் - ஜெகதீஷ் (புருஷா பிரேதம்)

சிறந்த துணை நடிகை - பூர்ணிமா இந்திரஜித் (துரைமுகம்), அனஸ்வரா ராஜன் (நேரு)

சிறந்த இசை ஆல்பம் - ஆர்.டி.எக்ஸ் (சாம் சி.எஸ்)

சிறந்த பாடலாசிரியர் - அன்வர் அலி (எண்ணும் என் காவல்- காதல் - தி கோர்)

சிறந்த பின்னணி பாடகர் - கபில் கபிலன் (நீல நிலவே - ஆர்.டி.எக்ஸ்)

சிறந்த பின்னணி பாடகி - கே.எஸ்.சித்ரா (முட்டத்தே முல்லா - ஜவனும் முல்லப்பூவும்)

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி