குபேரா ரிலீஸுக்கு முன் ஓடிடியில் பார்க்க வேண்டிய தனுஷின் படங்கள்!
Published Jun 17, 2025 06:16 PM IST

ஓடிடி ப்ளே ஓடிடி தளத்தில் இருக்கும் தனுஷின் சிறந்த பெர்ஃபார்மன்ஸ்கள் கொண்ட திரைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிற ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குபேரா. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை பார்க்கும் முன்னர் ஓடிடி ப்ளே ஓடிடி தளத்தில் இருக்கும் தனுஷின் சிறந்த பெர்ஃபார்மன்ஸ்கள் கொண்ட திரைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
காதல் கொண்டேன்
கடந்த கால மோசமான சம்பவங்களுடன் போராடும் வினோத்திற்கு திவ்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த அறிமுகம் அவன் வாழ்க்கையை மாற்றுகிறது. ஒரு கட்டத்தில் வினோத் திவ்யாவை காதலிக்க, திவ்யாவுக்கு வேறொருவருடன் காதல் ஏற்படுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது? என்பது மீதிக்கதை
மாரி
சென்னையில் மாமூல் வசூல் செய்யும் குட்டி தாதாவாக வரும் மாரிக்கு ( தனுஷ்) ரவுடியிசம் தாண்டி புறா பந்தயத்திலும் ஆர்வம்.
அந்தப் பகுதியில் நடக்கும் புறா பந்தயங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவரின் இடத்திற்கு மற்றொரு ரவுடியான பறவை ரவி (மைம் கோபி) வர ஆசைப்படுகிறார். அவருக்கு உறுதுணையாக அந்தப் பகுதியின் காவல்நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுனும் கைகோர்த்துக்கொள்ள அடுத்து நடந்தது என்ன என்பது மீதிக்கதை!
ஆடுகளம்
கறுப்பின் திறமை மீது பொறாமை படும் வாத்தியார் பேட்டைக்காரன் அவனுக்கு எதிராக நடத்தும் துரோக தாக்குதலும், அதற்கு கறுப்பு கொடுக்கும் பதிலடியும்தான் படத்தின் கதை. பல தேசிய விருதுகளை பெற்ற இந்தத்திரைப்படம் தனுஷ் கெரியரில் மிக மிக முக்கியமான படமாக அமைந்தது. வெற்றிமாறன் இயக்கி இருந்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார்.
திருச்சிற்றம்பலம்
விபத்தில் அம்மாவையும், தங்கையையும் இழந்த தனுஷ் அந்த விபத்துக்கு அப்பாவான பிரகாஷ்ராஜே காரணம் என்று நினைத்து, அவருடன் பல வருடங்களாக பேசாமல் இருக்கிறார்.
திடீரென பிரகாஷ்ராஜ்ஜிற்கு பக்கவாதம் வந்துவிட, அப்பாவுக்கு உற்ற துணைவனாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் தனுஷ். அதன்பின்னர், அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவு என்ன ஆனது? தோழில் நித்யா மேனனின் காதல் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை!
டாபிக்ஸ்