தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: ‘அடிக்கப் பாய்ந்த ஈஸ்வரி.. அரண்டு போன குணசேகரன்..’ பழைய காதலும் புதிய பிரச்னையும்!

Ethirneechal: ‘அடிக்கப் பாய்ந்த ஈஸ்வரி.. அரண்டு போன குணசேகரன்..’ பழைய காதலும் புதிய பிரச்னையும்!

Sep 02, 2023, 10:16 AM IST

google News
Tamil Serial: ‘என்னடா இப்படி போகுது..’ என அதிர்ந்து நிற்கிறார் குணசேகரன். (Sun TV)
Tamil Serial: ‘என்னடா இப்படி போகுது..’ என அதிர்ந்து நிற்கிறார் குணசேகரன்.

Tamil Serial: ‘என்னடா இப்படி போகுது..’ என அதிர்ந்து நிற்கிறார் குணசேகரன்.

40% பட்டம்மா பாட்டி போட்ட போட்டில் இருந்து இன்னும் தெளிவு பிறக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் குணசேகரனுக்கு, அடுத்த இடி மாமனார் மூலம் இறங்குகிறது. 

தம்பி மனைவி நந்தினியின் தந்தை வீட்டுக்கு வந்து சொத்து விபரத்தை பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கை கலப்பில், நந்தினியை கதிர் தாக்க முயற்சிக்கும் போது, ‘குறுக்கே இந்த கெளசிக் வந்தா’ என்பதைப் போல உள்ளே வந்த ஈஸ்வரியின் தந்தையும், ஆதி குணசேகரனின் மாமனாருமான கேரக்டர், சண்டையை விலக்கிவிடுவதாக பேசி, புதிய சண்டையை கிளப்பிவிடுகிறது. 

சம்மந்தமே இல்லாமல், குணசேகரனின் குணத்தை தெரிந்தும், தன் மகளை ஜீவானந்தம் சந்திக்க வந்தது, அவர்கள் இருவரும் இளமையில் காதலித்தது போன்ற தகவல்களை நடுவீட்டில் நான்ஸ்டாப்பாக சொல்லி முடிக்கிறார் ஈஸ்வரியின் தந்தை.

‘மஞ்சளிலே ஒரு நூல் எடுத்து..’ என்று பேக்ரவுண்ட் மியூசிக் போடாத குறையாக, உடைந்து போய் எழுந்து செல்லும் குணசேகரன், வீட்டு வாசலில் அமர்கிறார். ‘போச்சுடா.. இந்த ஆளு இனி என்ன பண்ணப் போறானோ..’ என, வீட்டு பெண்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருக்க, நேற்றைய எபிசோட் முடிந்தது. 

ஜீவானந்தத்தை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ஈஸ்வரி மற்றும் ஜனனியிடம் இந்த தகவல் பறக்கிறது. வீட்டுக்கு வரும் ஈஸ்வரியிடம் வழக்கம் போல, ‘என்னடி நடக்குது இங்கே..’ என்பது போல, குணசேகரன் கேள்விகளை எழுப்ப, வழக்கமாக அமைதியாக இருந்து அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கும் ஈஸ்வரி, இந்த முறை எகிறி அடிக்கிறார். 

கதிர் ஏதோ பேச, ‘வாயை மூடு..’ என்று கதிர் மீது பாய்ந்த ஈஸ்வரி, தன் குழந்தைகளிடம் தன்னைப் பற்றி தகாத முறையில் பேசும் கணவன் குணசேகரனை நோக்கி பாய்கிறார். இதையெல்லாம் அதிர்ந்து போய் பார்க்கிறது ஒட்டுமொத்த குடும்பமும். சாதா ஈஸ்வரி, சண்டை ஈஸ்வரியா நிற்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

அனைத்திற்கும் உச்சமாக, எதிர்த்து கூட பேசாத கணவனை நோக்கி, அடிக்க பாய்க்கிறார் ஈஸ்வரி. ‘என்னடா இப்படி போகுது..’ என அதிர்ந்து நிற்கிறார் குணசேகரன். வீட்டு பிரச்னை, வீட்டு வளாகத்தில் ஜோராக நடக்கிறது. இது தான் இன்றைய எபிசோட் நிலைமை. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி