தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: ‘எதிர்நீச்சல் சீரியலில் அவர் இல்லாம… ரொம்ப பெரிய வருத்தம்’ - மேடையில் கலங்கிய திருச்செல்வம்!

Ethirneechal: ‘எதிர்நீச்சல் சீரியலில் அவர் இல்லாம… ரொம்ப பெரிய வருத்தம்’ - மேடையில் கலங்கிய திருச்செல்வம்!

Jan 01, 2024, 07:25 PM IST

google News
அதைத்தாண்டிதான் அந்தப்பெண் மேலே வரவேண்டும். அதை மையமாக வைத்து தொடங்கப்பட்டதுதான் எதிர்நீச்சல் கதை!. அதில் நடிக்கக்கூடிய நடிகர்கள் அனைவருமே உங்களுக்குத் தெரியும்.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது.  அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது. ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராம மூர்த்தி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாரிமுத்து ஏற்படுத்திய தாக்கத்தை வேல ராம மூர்த்தியால் ஏற்படுத்த முடியவில்லை. 

இந்த நிலையில் இந்த சீரியலுக்கு கலாட்டா சார்பில் விருது வழங்கப்பட்டது. அதனை சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் மற்றும் குழுவினர் வாங்கினர். அப்போது பேசிய அவர், ரொம்ப சந்தோஷமா இருக்கு. தனித்துவமாக வாழ வேண்டும். சுயமோடு வாழ வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வாழும் பெண்ணுக்கு அது தடைபடும் போது, அவளுக்கு இடர்பாடுகள், சங்கடங்கள் உள்ளிட்டவை வரும். 

அதைத்தாண்டிதான் அந்தப்பெண் மேலே வரவேண்டும். அதை மையமாக வைத்து தொடங்கப்பட்டதுதான் எதிர்நீச்சல் கதை!. அதில் நடிக்கக்கூடிய நடிகர்கள் அனைவருமே உங்களுக்குத் தெரியும். 

குறிப்பாக இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரி முத்து காலமாகி விட்டார். அது எங்களுக்கு பெரிய வருத்தமான விஷயமாக மாறி விட்டது. அதைப்பற்றி நிறைய பேசியாகி விட்டது. இந்த விருதை நான் அவருக்கு சமர்பிக்கிறேன். இதில் அவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. காரணம் சீரியலில் அவரது நடிப்பாற்றல் அப்படி ஒர்க் அவுட் ஆகி இருந்தது தொடர்ந்து நாங்கள் வெற்றிகரமாக பயணிப்போம்.” என்று பேசினார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி