தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரபு, மகள் திருமணத்தில் ரூ.500 கோடி வரதட்சணை கொடுத்தது உண்மையா?

பிரபு, மகள் திருமணத்தில் ரூ.500 கோடி வரதட்சணை கொடுத்தது உண்மையா?

Aarthi V HT Tamil

Dec 24, 2023, 06:30 AM IST

google News
நடிகர் பிரபு தன் மகளுக்கு ரூ.500 கோடி வரதட்சணை கொடுத்து இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் பிரபு தன் மகளுக்கு ரூ.500 கோடி வரதட்சணை கொடுத்து இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் பிரபு தன் மகளுக்கு ரூ.500 கோடி வரதட்சணை கொடுத்து இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநராக கவனம் ஈர்த்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். இயக்குநர் ஆதிக் ராவச்சந்திரனின் திருமணம் சமீப நாட்களாக பெரும் செய்தியாக இருந்தது. 

 நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா தான் ஆதிக் ரவிச்சந்திரனின் மனைவி. ஆதிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

ஆதியும், ஐஸ்வர்யாவும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பழகி வருகிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம். ஐஸ்வர்யா சென்னையில் பிரபலமான பேக்கிங் பட்டறைகளையும் நடத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரனும், ஐஸ்வர்யாவும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். 

ஆதிக்கை விட ஐஸ்வர்யா மூன்று வயது மூத்தவர். ஒரு பெரிய ஹிட் படத்துக்குப் பிறகு தான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ஆதிக். எனவே, மார்க் ஆண்டனி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், ஆதிக் திருமணம் செய்தார்.

ரஜினிகாந்த் உட்பட தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிரபு தனது மகளை திருமணம் செய்து கொள்வதற்காக 500 கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக சில செய்திகள் வந்தன. 

இது குறித்து RETROLUXE என்ற யூடியூப் சேனலில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசினார்.

அவர் கூறுகையில், “ இது அவரது மகளின் இரண்டாவது திருமணம், இதற்குக் காரணம், கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை மீண்டும் பேசக்கூடாது என்பதற்காக திருமணத்தை எளிமையாக செய்துவிடலாம் என்று நடிகர் நினைத்தார். ஆனால் ஆதிக் அதற்கு சம்மதிக்கவில்லை அதனால் திருமணத்தை மானியமாக ஏற்பாடு செய்ததாக கியர் பாலு கூறினார்.

ஆனால் 500 கோடி ரூபாய் வரதட்சணை என்ற செய்தி குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் விளக்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ பிரபு குடும்பத்துக்கு 500 கோடிக்கு மேல் சொத்து இருக்கு. பிரபுவின் அப்பா சிவாஜி காலத்தில் இருந்தே அவர்களின் குடும்பம் பெரும் பணக்காரர்கள். ஆனால் அதன் படி குடும்பத்தில் சில சொத்து தகராறு உள்ளது.

500 கோடி ரூபாய் வரதட்சணை என்று சொல்லும் போது மொத்தமே மாறிவிடும். அவர் திருமணத்திற்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான வதந்திகள் “ எனக் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி