சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி.. சசி சார் என்னிடம் தனியாக சொன்ன விஷயம்.. இயக்குநர் பிரேம் குமார்
Oct 15, 2024, 10:17 PM IST
சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி.. சசி சார் என்னிடம் தனியாக சொன்ன விஷயம் என இயக்குநர் பிரேம் குமார் பேட்டியொன்றை அளித்துள்ளார்.
சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி வந்தவுடன் சசி குமார் என்னிடம் தனியாக சொன்ன விஷயம் இதுதான் என இயக்குநர் பிரேம் குமார் பேட்டியளித்துள்ளார்.
டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு 96 மற்றும் மெய்யழகன் படத்தின் இயக்குநரும், பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுலு கொஞ்சம் பக்கத்தைக் காணோம், ரம்மி, எய்தவன், ஒரு பக்கக் கதை படங்களின் ஒளிப்பதிவாளருமான சி.பிரேம்குமார் விரிவான பேட்டியளித்துள்ளார். அதில்,
‘’ கேள்வி - சுந்தர பாண்டியன் படத்தின் ஒளிப்பதிவு எப்படி இருந்தது?
பதில் - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போஸ்ட் புரொடக்சன் போயிடுச்சு. அப்போது, சுந்தரபாண்டியன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய போயிட்டேன். பசங்க படத்துக்கு அப்புறம் மீண்டும் கம்பெனி புரொடக்ஷனில் படம் ஒளிப்பதிவு பண்றேன். கதிருக்கு வந்த படம் தான் அது. அப்போது அவர் போராளி படத்தில் இருந்தார். அப்போது என்னை ஒளிப்பதிவு பண்ண சொல்றாங்க. ’சுந்தர பாண்டியன்’ எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸ்கிரிப்ட். தனிப்பட்ட மனிதனாக இழுத்துக்கட்டி செய்வாங்கல்ல, அந்த மாதிரி இயக்குநர் பிரபாகரன். தொடர்ச்சியாக சூட் பண்ணுனோம். கிட்டத்தட்ட 100 நாட்களுக்குக் கொஞ்சம் குறைவு. காரைக்குடி, தேனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு எங்கெங்கோ மாறுவோம். பிரேக்கே கிடையாது. பெரிய அனுபவம்.
கேள்வி - சசிகுமார் கூட பணியாற்றியது எப்படி இருந்தது?
பதில் - அவரை வந்து முதலாளியாகத் தான் பார்த்திருக்கோம். ஏனென்றால், பசங்க படத்துக்கு அவர் புரொடியூசர். அப்பப்போ வருவாங்க. வந்து பார்த்திட்டுப் போயிடுவாங்க. அசோக் சார் தான் ஸ்பாட்டில் இருப்பாங்க. அதனால், சசி குமார் சாரை முதலாளியாகத் தான் தெரியும். முதன்முறையாக அவர் நடிக்கிறது சூட் பண்ணனும் அப்படிங்கிற பயம் வேற. சசிகுமாரை அழகாக காட்டணும். கதையை அழகாக சொல்லணும் அப்படிங்கிற தயக்கம் இருந்தது. கதிர் சார் ரெஃபர் பண்ணியிருக்கார். அவர் பெயரை வேற காப்பத்தணும். 20-25 நாட்கள் சூட் பண்ணிட்டு, எடிட் பண்ணிட்டு இருந்தாங்க.
ஒரு நாள் கதிர் வந்தார். எடிட் பார்க்கப்போறேன் சொன்னாங்க. பயத்தில் புளியைக் கரைச்சிருச்சு. ஏனென்றால், அவரும் ஒரு கேமராமேன். இரண்டுபேருக்கும் ஒரே வயசு. ஒரே ஜெனரேஷன் கேமராமேன். போய்ப்பார்த்திட்டு, வந்து எனக்கு சர்டிஃபிகேட் கொடுத்திட்டுப் போறார். எல்லாருமே ரொம்ப அழகாக இருக்காங்க. ரொம்ப லட்சணமாக இருக்கு. எதையும் யோசிக்காதீங்க, இப்படியே பண்ணுங்கன்னு சொல்லிட்டுப் போறார்.
அப்படி சொன்னதுக்குப் பின், கிட்டத்தட்ட பூஸ்ட், ஹார்லிக்ஸ் சாப்பிட்ட மாதிரி தான், டபுள் ஸ்ட்ரங்க்தோட தான் பண்ணுனோம்.
படம் முடியுற வரைக்கும் சசி சாரை ஃப்ரெஸ்ஸாக காட்ட அப்பப்போ, புது துணி எடுத்துக்கிட்டே இருப்போம். லோகேஷனாகவே அந்த வருஷநாடு, தேனி அந்த மாதிரி பசுமையான இடங்கள்.
கேள்வி: நீங்கள் தொடர்புடைய எல்லா படங்களிலும் விஜய் சேதுபதி சம்பந்தப்படுகிறார். அதை எப்படிப் பார்க்குறீங்க?
பதில்: ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்புன்னு தான் வைச்சுக்கிறணும். ஏனென்றால், முதல் படத்தில் வந்த தொடர்பு அது. பசங்க படம் அவர் தான் பண்ண வேண்டியது. நான் தான் விஜய்சேதுபதியைக் கூட்டிட்டுப் போய், சொல்றேன். பாண்டிக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஆனால், பாண்டி, விஜய்சேதுபதி ஹீரோ மாதிரி பாடியாக இருக்கார். நான் சொல்றது, ஒரு சாதாரணமான பையன்னு சொன்னார். அப்போ விஜய் சேதுபதி, அப்படி கூத்துப்பட்டறையில் அப்படி ஒரு பையன் இருக்கான்னு சொல்றார். அவர் தான்விமல். அப்போது அவர் பெயர், மினி ரமேஷ். தனக்கு வாய்ப்புப் போச்சு அப்படியெல்லாம் விஜய் சேதுபதி நினைக்கலை.
அடுத்து சுந்தரபாண்டியன் படத்தில் ஒரு ரோல் இருக்குது. அப்போது பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ரிலீஸாகிடுச்சு. இருந்தாலும், பிரபாகரனுக்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ஆசை. பிறகு நான்கேட்டேன். ஓகேன்னு சொல்லிட்டார், விஜய் சேதுபதி. ஸ்பாட்டுக்கு அவர் வந்ததும் கட்டிப்பிடிச்சிட்டேன். இதை சசி சார் பார்த்திட்டார். பிரெண்ட்டான்னு கேட்டார். ஆமான்னு சொல்லிட்டேன். பிறகு தனியாக வந்துசொல்லிட்டுப் போவார். நல்லவிதமாகப் பார்த்துக்கங்கன்னு. பிறகு, பிரபாகரன்கிட்டேயும் அவர் ஒரு ஹீரோ, அவருக்கு ஸ்கோர் பண்ற சீன்களை எல்லாம் கொடுங்கன்னு சொல்லிட்டுப்போவார், சசி சார். இந்த சீனோட மூட் என்னனு பிரபாகரன்கிட்ட விஜய்சேதுபதி கேட்கிறார். அதைக் கேட்டதும், விறுவிறுன்னு பிரபாகரன் என்கிட்ட வர்றார். இந்த கேள்வியை யாருமே என்னிடம் கேட்டதில்லைன்னு சந்தோஷப்பட்டுட்டுப் போரார், பிரபாகரன். அடுத்து எய்தவன், ரம்மியில் ஒளிப்பதிவு, அதன்பின் தான், 96 டைரக்ஷன் பண்ணுனது’’ என இயக்குநர் பிரேம் குமார் கூறியிருக்கிறார்.
நன்றி: டூரிங் டாக்கிஸ்
டாபிக்ஸ்