தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Prabhu Solomon: வெள்ளி விழா ஆண்டில் இயக்குநர் பிரபு சாலமன்.. மைனா,கும்கி படங்களை தந்த இயக்குநரின் சினிமா பயணம்

Director Prabhu Solomon: வெள்ளி விழா ஆண்டில் இயக்குநர் பிரபு சாலமன்.. மைனா,கும்கி படங்களை தந்த இயக்குநரின் சினிமா பயணம்

Aug 21, 2024, 05:16 PM IST

google News
Director Prabhu Solomon: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வரும் பிரபு சாலமன் திரையுலகில் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக இருந்து வரும் பிரபு சாலமனின் சினிமா பயணம் எப்படி அமைந்தது என்பதை பார்க்கலாம்
Director Prabhu Solomon: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வரும் பிரபு சாலமன் திரையுலகில் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக இருந்து வரும் பிரபு சாலமனின் சினிமா பயணம் எப்படி அமைந்தது என்பதை பார்க்கலாம்

Director Prabhu Solomon: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வரும் பிரபு சாலமன் திரையுலகில் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக இருந்து வரும் பிரபு சாலமனின் சினிமா பயணம் எப்படி அமைந்தது என்பதை பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பிரபு சாலமன். இவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ளார். அர்ஜுன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், மைனா, கும்கி போன்ற தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக இவரது இயக்கத்தில் செம்பி என்ற படம் வெளியாகி விமர்சிக ரீதியாக பாராட்டை பெற்றது. இந்த படத்தில் கோவை சரளா கதையின் நாயகியாக நடித்திருப்பார். தற்போது புதிய படம் ஒன்றை அவர் இயக்கி வருகிறார்.

இதையடுத்து பிரபு சாலமனுக்கு முதல் முறையாக படம் இயக்கும் வாய்ப்பும், அவர் சினிமாவுக்கு வந்த பின்னணியும் என்ன என்பதை பார்க்கலாம்.

மேடை நாடக அனுபவம்

கல்லூரி முடித்தவுடன் சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் காலத்தில் மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ளேன். இளையராஜாவின் நத்திங் பட் விண்ட் இசையை மேடை நாடகமாக அரங்கேற்றி பாராட்டை பெற்றேன்.

நண்பர்கள் வடிவேலு காமெடி மாற்றி உசுப்பேற்றி சினிமாவில் நுழைந்தேன். நான்கு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு உதவி இயக்குநர் ஆனேன். இயக்குநர் விக்ரமன், பார்த்திபன், ஆர்.கே. செல்வமணி போன்றோரிடம் உதவியாளராக சேர் விரும்பினேன்.

சுந்தர் சி, அகத்தியனுடன் திரைப்பயணம்

நம்ம அண்ணாச்சி படம் இயக்குநர் தளபதியிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அந்த படத்தில் அசோசியேட்டாக இருந்த சுந்தர் சியிடம் பழக்கம் கிடைத்தது.

சுந்தர் சி இயக்குநர் ஆன பிறகு அவருடன் முறைமாமன் படத்தில் பணியாற்றினேன். பின்னர் அவர் இயக்கிய முறைமாப்பிள்ளை படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை பார்க்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகர் அலுவலகத்தில் இயக்குநர் அகத்தியனை சந்தித்து அவரது கோகுலத்தில் சீதை, விடுகதை படங்களில் பணியாற்றினேன்.

முதல் படம்

அன்பாலயா பிரபாகரன் எனக்கு முதல் வாய்ப்பை தந்தார். அந்த படம் தான் கண்ணோடு காண்பதெல்லாம். இந்த படத்தின் கதை அவர்களுடையது.

ஹீரோவுக்கு நெகடிவ் ஆன கதாபாத்திரம் என்பதால் ரகுவரன் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேன். ஆனால் படத்தின் கதை மம்முட்டி, தெலுங்கு நடிகர் ராஜசேகர் வரை சென்று கடைசியில் அர்ஜுன் நடிக்க உருவானது. தவறான நடிகர் தேர்வால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் விமர்சிக ரீதியாக பாராட்டை பெற்றது.

இந்த படத்துக்கு பின்னர் பாரதி கண்ணம்மா ரீமேக்கை உசுரே என கன்னடத்தில் உருவாக்கினேன். எனது முதல் ஹிட்டாக கொக்கி படம் அமைந்தது" என்றார்.

தொடர்ந்து சிபராஜ் நடிப்பில் லீ,  லாடம் படங்களை இயக்கிய இவர், அடுத்த விதார்த் - அமலாபால் நடிப்பில் இயக்கிய மைனா தமிழ் சினிமாவில் சிறந்த கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றது. அதேபோல் சிவாஜி கணேசன் பேரனான விக்ரம் பிரபுவை அறிமுகம் செய்து கும்கி படத்தை உருவாக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்த கயல், தனுஷ் வைத்து தொடரி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகியோ மொழிகளில் ராணா டகுபதியை வைத்து காடன் ஆகிய படங்களை இயக்கினார்.

பிரபு சாலமனின் முதல் சினிமாவான கண்ணோடு காண்பதெல்லாம் 1999இல் வெளியானது. தற்போது அவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி