தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pa Ranjith: Sc/st க்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையா?.. ஏற்கனவே குறைவாகதான் இருக்கு’ - கொந்தளித்த பா.ரஞ்சித்!

Pa Ranjith: SC/ST க்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையா?.. ஏற்கனவே குறைவாகதான் இருக்கு’ - கொந்தளித்த பா.ரஞ்சித்!

Aug 02, 2024, 11:43 PM IST

google News
Pa Ranjith: SC/ST க்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை கொண்டு வருவதென்பது, சமூக நீதியை இலக்காகக் கொண்ட உறுதியான நடவடிக்கையின் சாரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு வழி வகுக்கிறது. - பா.ரஞ்சித்!
Pa Ranjith: SC/ST க்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை கொண்டு வருவதென்பது, சமூக நீதியை இலக்காகக் கொண்ட உறுதியான நடவடிக்கையின் சாரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு வழி வகுக்கிறது. - பா.ரஞ்சித்!

Pa Ranjith: SC/ST க்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை கொண்டு வருவதென்பது, சமூக நீதியை இலக்காகக் கொண்ட உறுதியான நடவடிக்கையின் சாரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு வழி வகுக்கிறது. - பா.ரஞ்சித்!

எஸ் சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது 4 நீதிபதிகள் ஓபிசியினருக்கு பின்பற்றப்படும் கிரீமி லேயர் முறையை எஸ்டி எஸ்டிக்களுக்கு கொண்டு வர அரசு புதிய கொள்கையை வகுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தை கண்டித்து இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் அவர்," சாதி என்பது ஒரு சமூக-கலாச்சார அடையாளம். அது பொருளாதார நிலையால் மாற்றப்படவில்லை. SC/ST க்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை கொண்டு வருவதென்பது, சமூக நீதியை இலக்காகக் கொண்ட உறுதியான நடவடிக்கையின் சாரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு வழி வகுக்கிறது.

ஏற்கனவே குறைவாக இருக்கிறது.

SC/ST மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, இட ஒதுக்கீடுகள் ஏற்கனவே குறைவாக இருக்கிறது. இது குறிப்பிடத்தக்க அளவில் குறைவான பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கிறது. எஸ்.சி, எஸ்.டி பிரிவின் இட ஒதுக்கீட்டில்,உச்ச நீதிமன்ற அமர்வின் பிராமண கண்ணோட்டம் SC/ST மக்கள் எதிர்கொள்ளும் முறையான ஒடுக்குமுறையை நிவர்த்தி செய்வதில் தோல்வியடைந்து இருக்கிறது. ஆகையால், புதிய பிரிவுகளை உருவாக்காமல், மக்கள்தொகை உண்மைகளை பிரதிபலிக்கும் வகையில், ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்." என்று பதிவிட்டு இருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய விவாதம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2009ம் ஆண்டு முதல்வராக இருந்த போது, தலித் மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். அதே போல பஞ்சாப், ஹரியான மாநிலங்களிலும் தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். கூடவே, பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்தாலும், இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்தான தீர்ப்பு நிலுவையில் வைக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதில், நீதிபதி பீலா திரிவேதியை தவிர 6 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். அவர்கள் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு என்றனர்.

இதன்மூலம், தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க அனுமதித்து உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இதில் 4 நீதிபதிகள் ஓபிசி பிரிவில் இருப்பதை போல் எஸ்சி பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரைமுறை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

கிரீமி லேயர் முறை

ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் கிரீமி லேயராக கருதப்படுகிறது. இந்த வருமானம் என்பது அவ்வப்போது அரசால் மாற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்

தற்போதைய கிரீமி லேயர் முறை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பொருந்தாது. இத்தகைய சூழலில் தான் கிரீமி லேயர் முறையை எஸ்சி இடஒதுக்கீடு முறையிலும் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி